Thursday, October 1, 2015

இலங்கை மனித உரிமை மீறல் குறித்து விவாதம்; ராஜபக்சே அரசு மீது குற்றச்சாட்டு!

 Thursday, October 01, 2015
ஜெனிவா: இலங்கையில் நடந்த கடைசி கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்த விவாதம் ஐ.நா, மனித உரிமைகள் ஆணையத்தில் துவங்கியது. இதில் சர்வதேச தலையீட்டை முந்தைய அரசு நிராகரித்தது எனவும், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை என ஐ.நா., மனித உரிமை ஆணையர் கூறினார்.
 
இலங்கை மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில், அந்த அமைப்பின் ஆணையர் ஜைத் ராத் அல் ஹூசைன் பேசுகையில், 
 
 பயங்கரவாத தடுப்புச்சட்டத்தில் கைதானவர்கள் குறித்த விபரத்தை இலங்கை அரசு இன்னும் தரவில்லை . கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல் குறித்து ராஜபக்சே அரசு விசாரணை நடத்தவில்லை. இலங்கை போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதிகிடைக்கவில்லை. தனியார் நிலத்தை ஆக்கிரமித்துள்ள ராணுவத்தினரை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சர்வதேச தலையீட்டை இலங்கையில் முந்தைய அரசு நிராகரித்தது என கூறினார். மேலும் அவர் , பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை விலக்கிக்கொள்ள அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது. இலங்கையில் புதிய ஆட்சியில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்படு
கிறது. புதிய அரசு அமைந்த பிறகு தாக்குதல் குறித்த விசாரணையில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என கூறினார்.

இலங்கை உறுதி: 
 
 இலங்கை தூதர் ரவிநாதா ஆர்யசின்ஹா பேசுகையில், அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஐநாவுடன் இணைந்து செயல்படுவோம். சர்வதேச சமூகத்தின் ஆலோசனைகளும் உதவிகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என கூறினார்.

ரஷ்யா கருத்து:
 
 ரஷ்ய பிரதிநிதி பேசுகையில், சர்வதேச தலையீடு இன்றி இலங்கையே விசாரணை முறையை தீர்மானிக்க வேண்டும் என கூறினார்.

கொரியா ஆதரவு:
 
கொரிய பிரதிநிதி பேசுகையில், மீள் குடியேற்ற பணிகள் தொடர்பாக இலங்கை அரசு அளித்த உறுதிமொழி வரவேற்கத்தக்கது இலங்கை அரசு எடுக்கும் முயற்சிக்கு கொரியா ஆதரவு அளிக்கப்படும் என கூறினார்.

இங்கிலாந்து கருத்து:
 
இங்கிலாந்து பிரதிநிதி பேசுகையில், ஐ.நா., விசாரணை அறிக்கை மட்டும் தீர்வாக அமையாது. இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம் என கூறினார்.

இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு ஜப்பான் எப்போதுமே துணை நிற்கும் என ஜப்பான் பிரதிநிதி கூறினார்.

பிரான்ஸ் கண்காணிப்பு:
 
  கூட்டத்தில் பேசிய பிரான்ஸ் பிரதிநிதி, மனித உரிமைகளை காக்க ஐநா பரிந்துரைகள் அமல்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்கப்படும். இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். போர்க்குற்றம், மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார்.

பாகிஸ்தான் கருத்து:
 
பாகிஸ்தான் பிரதிநிதி பேசுகையில், பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு சர்வதேச ஒத்துழைப்பு உதவி வேண்டும். இலங்கை நடவடிக்கையை விமர்சிக்கும் நாடுகள் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள். எந்த மாதிரியான விசாரணை தேவை என்பதை முடிவு செய்ய இலங்கைக்கு உரிமை உண்டு என கூறினார்.
ஆஸ்திரேலியா கருத்து:
 
ஆஸ்திரேலிய பிரதிநிதி பேசுகையில், போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா., அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க உரிய நடவடிக்கை தேவை என கூறினார்.
 
கனடா கருத்து:
 
 கனடா நாட்டு பிரதிநிதி பேசுகையில், மனித உரிமைகள், ஜனநாயகம், சட்டம் ஒழுங்கை காக்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும். மனித உரிமை மீறலில் ஈடுபட்போரை தண்டிக்க நம்பத்தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

சுவிஸ்கவலை: 
 
  சுவிட்சர்லாந்து பிரதிநிதி பேசுகையில். இலங்கை போரில் ராணுவம் மற்றும் புலிகள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது கவலையளிக்கிறது. சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என கூறினார்.

யுனிசெப் வலியுறுத்தல்:
 
போர் காணாமல் போ கொல்லப்பட்ட குழந்தைகளின் உறவினர்களுக்கு உதவி தேவை. குழந்தைகளின் நிலை குறித்து இன்னும் பல குடும்பங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகள் உரிமைகள் விஷயத்தில் இலங்கை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என யுனிசெப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம்:
 
 இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ஜெனிவாவில்  புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அலங்காரா வார்த்தைகளை பயன்படுத்தி விசாரணை அமைப்பை மாற்ற வேண்டாம். சர்வதேச விசாரணை மட்டுமே தேவை என புலிகளுக்கு ஆரவான பரதேசிகள் கூறியுள்ளனர். பொது விவாதம்நடைபெற்று வரும்நிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

No comments:

Post a Comment