Thursday, October 01, 2015
புலிகள் அமைப்புடன் தொடர்புகளை கொண்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு
புனர்வாழ்வளிக்கப்பட்டு வந்த 11 கிராம அலுவலர்களும் நேற்று உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டனர்.
வவுனியா நகசைபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், புனர்வாழ்வு
ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்னாயக்கா, மீள்குடியேற்ற புனர்வாழ்வு
அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து
கொண்டனர்.
யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை
பேணியதாக கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 கிராம அலுவலர்கள் மீது
குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் அவர்களை புனர்வாழ்வு பெறுமாறும் அதன்பின் தமது வேலைகளை
மீண்டும் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் ஊடாக
அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பூந்தோட்டம் புனர்வாழ்வு
நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற 11 கிராம அலுவலர்களும் தமது 3 மாத
புனர்வாழ்வினை முடித்த நிலையில் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டனர்.
இதேவேளை, புலிகளுடன் தொடர்புகளை பேணியதாக குற்றம் சாட்டப்பட்டு புனர்வாழ்வு
பெற்ற வேறு 9 இளைஞர், யுவதிகளும் புனர்வாழ்வு காலம் நிறைவடைந்த நிலையில்
இவர்களுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment