Thursday, October 01, 2015
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு எதிர்காலத்தில் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மனிதவுரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்பாக மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைத்த அறிக்கை பற்றி நேற்று உறுப்பு நாடுகளிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த கருத்து வெளியிடப்பட்டது.
இலங்கையின் புதிய அரசாங்கம் நல்லிணக்கத்திற்காக எடுத்துள்ள முயற்சிகளை தாம் வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மனிதவுரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் மற்றும் நிலைப்பாடுகள் அமெரிக்காவின் இறுதியறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என ஜனாதிபதியின் சர்வதேச ஊடக மற்றும் ஆய்வுகள் பற்றிய ஆணையாளர் சுஹீஸ்வர பீ. சேனாதீர தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment