Friday, October 02, 2015
இலங்கை அரசாங்கம் காணமற்போனவர்கள் குறித்த
ஜனாதிபதி ஆணைக்குழுவை கலைக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை
ஆணையாளர் விடுத்துள்ள வேண்டுகோள் சகிக்கமுடியாதது அவசியமற்றது என முன்னாள்
வெளிவிவகார அமைச்சர் ஜிஎல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் காணமற்போனோர் தொடர்பான ஆணைக்குழுவை கலைக்குமாறு கோருவதன் மூலமும், இலங்கையின் நீதித்துறையில் மாற்றங்களை கோருவதன் மூலமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் தனக்கும் வழங்கப்பட்டுள்ள ஆணையை மீறிவிட்டார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அலுவலக விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்போது இவ்வாறான விசாரணையை தனது முதற்தடவையாக அலுவலகம் மேற்கொண்டது புதுமையான விடயம் என குறிப்பிட்டிருந்தார்,அதன் மூலம் தனது அலுவலகம் ஆணையை மீறிவிட்டதை அவர் மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார். என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment