Friday, October 2, 2015

ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா உத்தரவு!

Friday, October 02, 2015
வாஷிங்டன் : பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள்" என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா., பொதுக்கூட்டத்தில் பேசிய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப், காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா-பாக்., இடையே அமைதி நிலவ ஐ.நா., தலையிட வேண்டும்.போர் ஒப்பந்தத்தை மீறி எல்லையில் அடிக்கடி தாக்குதல்கள் நடக்கின்றன. 1947 முதல் காஷ்மீர் விவகாரம் தீர்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளது. பல தலைமுறைகளாக காஷ்மீரிகள் ஆக்கிரமிப்பு பகுதியிலேயே வசித்து வருகின்றனர் என இந்தியா மீது குற்றம்சுமத்தும் வகையில் பேசினார்.
 
ஷெரீப்பின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், பாகிஸ்தான் தான் பயங்கரவாதத்தின் முக்கிய விநியோகஸ்தர். எந்த பிரச்னைக்கும் தீர்வு காண விரும்பினால் முதலில் நீங்கள் முன் உதாரணமாக இருங்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து காலி செய்யுங்கள். அண்டை நாடுகளை குற்றம் சுமத்துவதால் எதற்கும் தீர்வு ஏற்படாது. பயங்கரவாதிகளை உருவாக்குவதை முதலில் நிறுத்துங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
 
நவாஸ் ஷெரீப் இந்தியா மீது கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தியா சார்பில் ஐ.நா.,வுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கு காஷ்மீரை ஆக்கிரமித்து வைத்துள்ளது. பாக்., தனது அத்துமீறிய தாக்குதல் மற்றும் ஊடுருவலை நியாயப்படுத்த பார்க்கிறது. பாக்., சர்வதேச தளத்தை தவறாக பயன்படுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜான் கெர்ரியை, நவாஸ் சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதத்திற்கு எதிராக கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நவாஸிடம், ஜான் கெர்ரி கண்டிப்புடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment