Monday, September 30, 2013

வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது: கேஹலிய ரம்புக்வெல!

Monday, September 30, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபை உட்பட்ட நாட்டின் எந்த ஒரு மாகாணசபைக்கும் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என்று அரசாங்கம் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளது
அரசாங்கத்தின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல அரசாங்கத்தின் குறி;த்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்
மாகாணசபைகள் அந்த சபைகளுக்கு வழங்கப்பட்டு;ள்ள அதிகாரங்களுக்கு அப்பால் செல்லமுடியாது
வடக்கு மாகாண முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனும் நீதியரசராக இருந்த காலத்தில் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார் என்று ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்
இதேவேளை இலங்கையின் உயர்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள், மத்திய அரசாங்கத்துக்கு உரியவை என்று தீர்ப்பை வெளியிட்டமையானது தெளிவான நிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் ரம்புக்வெல குறிப்பிட்டார்;

இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை

Monday, September 30, 2013
இலங்கை::இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரி
 
மைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். 
 
இலங்கை மனித உரிமை நிலைமைகள் குறித்து பாரதூரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த மார்ச் மாத அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நம்பகமான சர்வதேச ரீதியான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் வடக்கு மாகாணத்திற்கு வழங்கப்படும்: மீண்டும் புலிகளை உருவாக்கி ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு அரசாங்கமும் இடமளிக்காது: லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன!

Monday, September 30, 2013
இலங்கை::அபிவிருத்தி பணிகளின் போது, வட மாகாணத்தின் புதிய நிர்வாகத்திற்கு அரசியலமைப்
பின் ஊடாக அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்கத் தயாரென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
 
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று வடக்கில் அரசாங்கத்துடன் தொடர்புபடாத மற்றுமொரு குழுவிற்கு வடக்கில் ஜனநாயக ரீதியில் நிர்வாக உரிமையை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கு முன்னர் இவ்வாறு இருக்கவில்லை. எனவே வடக்கில் உள்ள நிர்வாகத்திற்கும் அரசியலமைப்பின் பிரகாரம் தெற்கில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களைப் போன்று வடக்கிற்கும் வழங்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
 
ஆனால் அது அரசியலமைப்பிற்கு ஏற்ப இடம்பெற வேண்டும். மீண்டும் புலிகளை உருவாக்கி  ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு எந்தவொரு அரசாங்கமும் இடமளிக்காது என்று நான் நினைக்கிறேன். அதை நிறுத்துவதற்கு எமக்கு அதிகாரம் இருக்கின்றது.
 
இந்த நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் வழங்கப்படுகின்ற சலுகைகளையும் வட பகுதி மக்களுக்கு வழங்கும் உரிமை எமக்குள்ளது. அதேபோன்று கடந்த காலங்களிலும் அதனை வழங்கியுள்ளோம்..

பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தை பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் மேடையாக மாற்றி கொண்டமை கவலைக்குரிய விடயம்: ஜீ.எல்.பீரிஸ்!

Monday, September 30, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தை பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் இலங்கையின் உள்விவகாரம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை தெரிவிக்கும் மேடையாக மாற்றி கொண்டமை கவலைக்குரிய விடயம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
 
நியூயோர்க்கில் கடந்த 26 ஆ ம் திகதி நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் பிரித்தானியாவும் கனடாவும் பொதுநலவாய அமைப்பின் இணக்கப்பாடுகளையும் சம்பிரதாயங்களையும் மீறி செயற்பட்டன.
 
இந்த நாடுகளின் பிரதிநிதிகள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் இலங்கை அரசு நிரந்தரமாக செயற்படுவது அவசியம் என கூட்டத்தின் போது தொடர்ந்தும் கோரிக்கை விடுத்தமை முழுமையான அநீதியாகும்.
 
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த உறுப்பு நாடுகள் எடுத்துள்ள தீர்மானத்தை பிரித்தானியா ஒரு பிரச்சினையாக எடுத்து கொண்டமை இலங்கையின் கவலைக்கு காரணமாகியுள்ளது.
இலங்கை தொடர்ந்தும் பொதுநலவாயத்தின் சம்பிரதாயம் மற்றும் பெறுமதிகளின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது. இதனால் சகல உறுப்பு நாடுகளையும் சமமாக நடத்த வேண்டியது அத்தியவசியமானது.
 
முன்பு ஒருபோதும் நடந்திராத வகையில் பொதுநலவாய அமைப்பின் கொள்கைளை மீறி, அதற்கு முரணான வகையில் அமைப்பிற்குள் இலங்கைக்கு தண்டனை வழங்குவதற்காக கனேடிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியானது பொருத்தமற்றதும் தகுதியானதும் அல்ல.
 
அத்துடன் இந்த முயற்சி பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழுவின் பொது இணக்கத்திற்கும் ஏற்புடையதல்ல. இவ்வாறு பொதுநலவாய அமைப்பை அரசியல் மயப்படுத்தும் முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தெரிவில் இழுபறி!

Monday, September 30, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் தெரிவில் இழுபறி.
 
வடமாகாண சபைக்கான அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதி முடிவு இன்னமும் எட்டப்பாத நிலையில் அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களிற்கான கூட்டம் நேற்று மாலை யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதில் வடமாகாண சபைக்குரிய நான்கு அமைச்சுப் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றன.

இக்கலந்துரையாடலில், அமைச்சுப் பதவிகள் தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுப்பதில் கட்சிகளுக்கிடையில் இழுபறி நிலைக் காணப்படுவதால் அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சிக்கு 2 அமைச்சுப் பதவிகளும் ஈ.பி.ஆர்.எல்எப்.க்கு 1 அமைச்சும் ரெலோவிற்கு ஒரு அமைச்சும் என்ற அடிப்படையில் இந்த பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இதில் முக்கிய அமைச்சான கல்வி மற்றும் சுகாதார அமைச்சு தமிழரசுக் கட்சிக்கு வழங்கப்படவேண்டும் என்று தமிழரசுக்கட்சி கோரி வருவதால் ஏனைய கட்சிகள் இதற்கு எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர்  பிரேமச்சந்திரனை கேட்டபோது

இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெகுமதி ஆசனங்கள் தொடர்பிலும் அமைச்சுப் பதவி மற்றும் பதவியேற்பு போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

போனஸ் ஆசனம் தொடர்பில் அனைத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டதற்கிணங்க முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அவை வழங்கப்பட்டுள்ளன.

அமைச்சுப் பதவிகள் தொடர்பிலும்; மற்றும் பதவியேற்பு தொடர்பிலும் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அவை இரண்டிற்;கும் நாட்கள் இருக்கின்ற படியால் மீண்டும் ஒரு தடவை கூடி இறுதி முடிவை எடுப்போம்' என்று அவர் தெரிவித்தார்.

உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடன் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம்!.

Monday, September 30, 2013
இலங்கை::பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணமானார்.
 
உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் நோக்குடனேயே டுபாய் வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள வர்த்தகர்கள் வர்த்தகக் கூட்டின் உரிமையாளர்கள் போக்குவரத்து முகவர்கள் மற்றும் வர்த்தக பிரமுககர்களை சந்திப்பதற்கான விசேட மகாநாடு டுபாய் வர்த்தக சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
நாளை டுபாய் பிரமிட் ஹோட்டலில் இடம்பெறவுள்ள இம்மகாநாட்டில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்வதற்காக கௌரவ பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் சார்பில் அவரின் பிரதிநிதியாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இம்மகாநாட்டில் கலந்துகொள்கிறார்;.
 
இந்த சந்திப்பின்போது இலங்கையின் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புக்கள் அதிலுள்ள பிரச்சினைகள் அங்குள்ள முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற பல்வேறுபட்ட தலையீடுகள் தொடர்பாக முதலீட்டாளர்களுடன் கலந்துறையாட இருக்கிறார்.
 
அதனை தொடர்ந்து இலங்கை ஹோட்டல் கல்லூரியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைத்துக்கொள்வதற்கான பேச்சு வார்த்தைகளில் நாளை மாலை ஈடுபடவுள்ளார்.
 
ஜிமைரா போரத்தினுடைய பிரதம நிறைவேற்று அதிகாரி எமரேட்ஸ் பல்கலைக்கழகத்தினுடைய பணிப்பாளர்களை நாளை மாலை சந்தித்து இலங்கை ஹோட்டல் பாடசாலையை எமரேட்ஸ் ஹோட்டல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளில்; இடம்பெறவுள்ளார்.
 
ஆதனை தொடர்ந்து பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1ம் திகதி அபுதாபி வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மேற்படி கூட்டத்தில் கலந்துகொள்வார்.
 
வர்த்தக சம்மேளனம் ஹோட்டல் உரிமையாளர்களுடன் சந்திக்கவுள்ளார்.இந்த சந்திப்பின்போது அபுதாபி முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து முதலீடு செய்வதிலுள்ள பிரச்சினைகள் விளையாட்டுத்துறை போன்ற துறைகளில் அவர்களை முதலீடு செய்யுமாறு
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் விடுப்பார்.
 
இதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கைக்கான டுபாய் நாட்டுத் தூதுவர்;.இலங்கையினுடைய தூதுவர் டொக்டர் மஹிந்தபால சூரியஇ டுபாய் ஜென்றல் ஜனாப் எம்.எம். அப்துல் றஹீம் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் இரண்டு தினங்கள் தங்கியிருந்து இந்நிழ்வுகளில் பங்கேற்க இருப்பதாக பிரதிஅமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததார்

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் அக்கரைப்பற்று மாநகர சபை கட்டிடத் தொகுதி திறப்பு விழா!

Monday, September 30, 2013
இலங்கை::உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் 110 மில்லியன் செலவில் புதிதாக நிருமானிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று மாநகர சபைக்கான கட்டிடத் தொகுதியினை (நவீன வளாகம்) திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸக்கி தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அதாஉல்லா மற்றும் அதிதிகளாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், மாநகர முதல்வர்,பிரதி முதல்வர் உட்பட மாநகர உறுப்பினர்கள உள்ளிட்ட அதிதிகள் வரவேற்று அழைத்து வரப்படுவதையும் பிரதம அதித நினைவுப் படிவத்தைத் திரைநீக்கம் செய்து வைத்து அவதானிப்பதையும், அஸ்ஷேய்க் அஸ்ஸெய்யித் மக்கத்தார் ஏ மஜீத் நவீன மாநகர கட்டிடத் தொகுதியினை நாடாவை வெட்டித் திறந்து வைப்பதையும் படங்களில் காணலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்படுகின்றது: உதய கம்மன்பில!

Monday, September 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் செயற்பட்டு வருவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. வட மாகாண ஆளுனரை நீக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள கோரிக்கை, அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண ஆளுனரை பணி நீக்குவதற்கு சில விதிமுறைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
 
அரசியல் சாசனத்தை மீறியதாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவோ தெரிவித்து மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதன் மூலமே ஆளுனரை பணி நீக்க முடியும் என குறிப்பிட்டுள்ளது. வட மாகாண ஆளுனர் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும், அரசியல் சாசனத்தை மீறவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
 
ஓய்வு பெற்ற நீதவான் விக்னேஸ்வரன் மற்றும் சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோரின் சட்ட அறிவாற்றல் குறித்து வெட்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு மக்களை தூண்டி அதன் மூலம் அரசியல் நடத்தவே விரும்புவதாகவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கோ அவர்களுக்கு நலன்களை வழங்கவோ கூட்டமைப்பு நாட்டம் காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தம்மை ஈழத்திற்கு அழைத்துச் செல்வார்கள் எனத் தமிழ்; மக்கள் கருதுவதாகவும் உண்மையில், கூட்டமைப்பு தமிழ் மக்ளை அழிவுப்பாதையில் இட்டுச் செல்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டது போன்றே பயங்கரவாத அரசியல் சக்திகளும் தடை செய்ப்பட வேண்டியது அவசியமானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் விடைபெறுகிறது!

Monday, September 30, 2013
இலங்கை::நாடளாவிய ரீதியிலுள்ள சகல தபால் காரியாலயங்களிலும் இருந்தும் தந்திச் சேவை நாளை முதலாம் திகதியுடன் நிறுத்தப்படும் என்றும் தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
 
இந்த சேவையை இடைநிறுத்துவதற்கு தபால் திணைக்களமும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனமும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதன் பிரகாரம் எந்தவொரு தபால் காரியாலங்களிலும் ‘தந்தி’ இனிமேல் பொறுப்பேற்கப்படமாட்டாது.
 
இலங்கையிலிருந்து தந்திச்சேவையை முழுமையாக நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவில் குண்டு வைக்க பாகிஸ்தான் உளவுத்துறை ரூ.24 கோடி கொடுத்தது: கைதான தீவிரவாதி தலைவன் திடுக்கிடும் தகவல்!

Monday, September 30, 2013
புதுடெல்லி::இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
 
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
 
இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.
டெல்லி ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு போன்று நாடு முழுவதும் ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
 
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் டெல்லி, மங்களூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன. இதற்கு ஆகும் செலவு மற்றும் நாடு முழுவதும் சென்று தீவிரவாத திட்டங்களை வகுப்பது போன்றவற்றுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் இந்த அமைப்புக்கு பணம் வழங்கப்பட்டது.
 
இதற்கு இந்தியா, நேபாளம், சவுதி அரேபியா, துபாய் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் உதவியாக இருந்துள்ளன. இதற்காக யாசின் பெயரில் பாங்கியில் தனி கணக்கு தொடங்கப்பட்டது. இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பில் இருந்துள்ளது.
 
சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.24 கோடியை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெற்றுள்ளது. இந்த பணம் கராச்சியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பாகிஸ்தானில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இக்பால் பகத், ரசாக் பகத் மற்றும் அவர்களது குழுக்கள் மூலம் இந்தியா வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

tamil matrimony_INNER_468x60.gif

அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்: தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்!

Monday, September 30, 2013
இலங்கை::அரசாங்கத்தை கவிழ்த்து, தனி தமிழீழத்தை உருவாக்குவதற்காகவே விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் முதலமைச்சராக ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார். இதனை அரசாங்கம் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கூட்டமைப்பின் இம் முயற்சி நிறைவேறினால் ஆளுநரின் அதிகாரங்கள் சவாலுக்கு உட்படுத்தும் நிலை உருவாகும் என்றும் அவ்வியக்கம் தெரிவித்தது.

இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபையொன்றின் முதலமைச்சர் ஒருவர் ஆளுநரின் முன்னிலையிலேயே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். ஏனென்றால் மாகாண சபைகளின் அதிகாரம் உள்ள ஜனாதிபதியின் பிரதிநிதியாக ஆளுநரே நியமிக்கப்படுகின்றார். இதுதான் இலங்கையின் மாகாண சபைகளின் சட்டமாகும்.

ஜனாதிபதியின் முன்னிலையிலும் சத்தியப் பிரமாணம் செய்யலாம். ஆனால் ஆளுநரின் முன்னிலையிலேயே இதனைச் செய்வதே சிறந்ததாகும். இவ்வாறானதோர் நிலையில் வடகிழக்கு மாகாண ஆளுநரின் அதிகாரங்களை சட்டத்தின் சவாலுக்குட்படுத்தும் நோக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சரான விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய முயற்சிக்கின்றார்.

தற்போதைய ஆளுநர் இராணுவ அதிகாரியென்ற கூட்டமைப்பின் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. ஏனென்றால் தற்போது அவர் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர்.

ஆளுநரின் முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்வதை நிராகரித்தால், ஆளுநர் அடுத்த இரண்டாவது இடத்தை பிடித்தவர்களுக்கு ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார். அவர்களும் அழைப்பை நிராகரித்தால் வடமாகாண சபையை கலைத்து விடுமாறு ஆளுநரால் ஜனாதிபதிக்கு சிபாரிசு செய்ய முடியும்.

இவ்வாறு குழப்பகரமான சூழலை ஏற்படுத்தி சர்வதேசத்தின் தலையீட்டை அதிகரிக்கச் செய்வதே கூட்டமைப்பின் திட்டமாகும்.

அரசுக்கு எதிராக சர்வதேசத்தினாலும் கூட்டமைப்பினாலும் நெருக்கடிகள் ஏப்ரல் மாதமளவில் உச்சக்கட்டத்தை அடையும்.

இதன்போது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை கவிழ்க்கும் போராட்டங்களையும் சதித் திட்டங்களையும் உத்வேகப்படுத்தும்.

இதற்கான முதலாவது துப்பாக்கி வேட்டே ஜனாதிபதி முன்னிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்க வேண்டுமென்பதாகும் என்றார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி தனித்துப் பேச்சு நடத்த முடியாது: கெஹெலிய ரம்புக்வெல!

Monday, September 30, 2013
இலங்கை::வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்கு கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது. அது சாத்தியமற்ற விடயமாகும். ஒரு கட்சியுடன் மட்டும் தேசிய பிரச்சினை தீர்வு விடயம் குறித்து பேசுவதில் அர்த்தம் இல்லை என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமாகும். அந்த வகையில் அவ்வாறான தீர்வுக்கான இணக்கப்பாட்டைக் காண்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வட மாகாண சபையின் முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்க தீர்மானிப்பின் அது சிறந்த முடிவாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி ஈட்டியுள்ளதால் அரசாங்கம் கூட்டமைப்புடன் நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பின் விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக அறிய முடிகின்றது.

அவ்வாறு பதவியேற்கவுள்ள விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்பதற்கு தீர்மானித்தால் அது சிறந்தது. அவ்வாறு அவர்கள் செய்வது ஒரு சிறந்த முடிவாக அமையும்.

மாறாக வட மாகாண முதலமைச்சருக்கு பதவி பிரமாணம் செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன.

இதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்புடன் தனித்துப் பேச்சு நடத்த முடியாது.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவை விடுத்து ஆளும் கட்சியானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தாது. அவ்வாறு ஆளும் கட்சியினதும் தமிழ்க் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகள் மட்டும் பேச்சு நடத்துவதில் அர்த்தம் இல்லை. அவ்வாறு பேச்சு நடத்தப்படமாட்டாது.

மாகாண சபை என்ற முறையில் வட மாகாண சபையின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி பேச்சு நடத்துவார். அது வழமையான விடயமாகும். நாட்டின் ஏனைய மாகாண சபைகளுடனும் ஜனாதிபதி அவ்வாறான பேச்சுக்களை நடத்திவருகின்றார். அதேபோன்று வட மாகாண சபையுடனும் பேச்சு நடத்துவார் என்றார்.

30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விக்னேஸ்வரன் ஈடுபட்டு உள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்!

Monday, September 30, 2013
இலங்கை::30 வருட யுத்தத்தை முடித்து வடக்குக்கு ஜனநாயகத்தைப் பெற்றுக் கொடுத்த அரசை ஜெனீவாவுக்கு கொண்டுசென்று தனிநாட்டை உருவாக்கும் முயற்சியில் வட மாகாண முதலமைச்சர் ஈடுபட்டு உள்ளதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.
 
ஜெனீவா சென்றாவது காணி உரிமையைப் பெற்றுக்கொள்வோம். இராணுவ ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யத் தயாரில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பாக அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
 
விக்னேஸ்வரன், அரசு பெற்றுக் கொடுத்துள்ள ஜனநாயகத்தின் ஊடாக பிரிவினைவாதத்தை சந்தைப்படுத்தி, பிரிவினைவாத அமைப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகவும் புத்திஜீவிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இலங்கை சட்டத்தரணிகள் அமைப்பின் சட்டத்தரணி கபிலகமகே இவ்வாறு தெரிவித்தார். அரசமைப்பின் 157 ஆம் பிரிவின் உப பிரிவு 07 இன் பிரகாரம் முதலமைச்சர் நியமனம் பெற்ற ஒரு மாதத்துக்குள் பதவிப் பிரமாணம் செய்ய வேண்டும். ஜனாதிபதி பெயரிடும் ஆளுநர், பாராளுமன்ற உறுப்பினர் அல்லது ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யலாம்.
சட்ட அறிஞரான விக்னேஸ்வரன் அரசமைப்பு, அதன் மூலம் கூறப்பட்டுள்ள ஒற்றையாட்சி, ஜனநாயகம் சகலவற்றையும் அறிந்தவர்.
அவர் இக்கூற்றின் மூலம் பொலிஸ் அதிகாரத்தைக் கேட்கவில்லை. காணி அதிகாரத்தைக் கேட்கவில்லை.
 
அரசு ஜனநாயகத்தை உருவாக்க மேற்கொண்ட முயற்சியைத் தலைகுப்புறச் செய்வதும் பிரிவினைவாத தனி அலகு கோருவதற்கு வழிவகுப்பதும் அவரின் தேவையாகும். எமது உரிமைகளைப் பறித்துக் கொண்டதாக ஜெனீவாவுக்குச் சொல்வதே அவரின் எண்ணமாகும். தனிநாடு தான் அவரின் எண்ணம். வட மாகாண மக்கள் தமக்கு வழங்கிய 80 வீத அதிகாரத்தைப் பறிப்பதாக ஜெனீவாவில் அவர் கூறப்போகிறார்.
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டது, நாட்டுப் பிரிவினை என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
வடக்கு மக்களை நாம் நம்ப முடியுமானாலும் பயங்கரவாதத்தை நாம் அங்கீகரிக்க முடியாது.
 
நாட்டின் அரசியல்வாதிகளின் தவறான செயல்களை விக்னேஸ்வரன் ஆயுதமாகப் பாவிக்கிறார்.திம்பு பேச்சுவார்த்தை இதற்கு தக்க உதாரணமாகும்.
மக்கள் அரசின் நல்ல தன்மையை விக்னேஸ்வரனுக்கு ஆயுதமாகப் பாவிக்க ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, September 30, 2013
இலங்கை::நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான அறிக்கையை தயாரித்து முடித்த பின்னரே இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 தேர்தல்களை நடத்தி முடித்த எங்கள் மீது நாம் அதிக சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்துவது நியாயமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ஜெkரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
அயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். வெளியில் இருந்து குற்றம் காண்பது எளிது. எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன் என ஜனாதிபதி இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடெங்கிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த இராணுவம் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கலாகாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுபோன்று நாட்டின் ஏனைய மாகாண சபைகளும் இராணுவத்தை தங்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டால் எமது இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமே இருக்காது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
வேறு யாராவது எங்கள் நாட்டு இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமளிப்பார்களா என்று அல்ஜெkறா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து நாம்தான் முடிவெடுப்போம். நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை பேர் அவசியம் என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
 
உலகத்திற்கு பொலிஸ்காரர்களின் தேவை அவசியமில்லை, சில நாடுகள் தாங்களே உலகத்தின் பொலிஸ்காரர்கள் என்று இறுமாப்பில் செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸ்காரர்களை போன்று நடந்து கொள்ளும் இந்நாடுகள் மற்ற நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டுவர எத்தனிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
 
நீங்கள் மேற்கத்திய நாடுகளையா அல்லது இலங்கையின் மிக அருகில் உள்ள அயல் நாடான இந்தியாவையா இவ்விதம் குறிப்பிடுகிaர்கள்? என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையே நான் குறிப்பிட்டேன் என்று கூறினார்.
 
நாம் எமது அயல்நாடான இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவை வைத்திருக்கிறோம். ஆயினும் இந்தியாவுக்கும் வேறு விதமான அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று சுட்டிக்கட்டிய ஜனாதிபதி, நாம் அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறினார்.
 
இலங்கை அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறதென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கண்டனம் குறித்து அபிப்பிராயம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நவநீதம்பிள்ளை ஏன்தான் இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பது எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையில் 19 தேர்தல்கள் நடத்தப்பட்டதை நவநீதம்பிள்ளை புரிந்து கொள்ளவில்லையா, மக்கள்தான் அரசாங்கத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கண்காணிப்பு துன்புறுத்தல் பற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்கள் தாக்குதலுக்கு இலக்காக்கப்படுகின்றன அல்லது அவை நிரந்தரமாக மெளனமாக்கப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி அவர்கள் முற்றாக நிராகரித்தார்.
 
ஒரு சர்வாதிகார நாட்டைப் போலன்றி இலங்கையில் எதிர்கட்சி பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அவை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்தின் மட்டத்திலோ அல்லது உள்நாட்டிலோ தோற்கடிப்பதற்கே எப்போதும் முயற்சிகளை செய்து வருகின்றன என்று ஜனாதிபதி கூறினார்.
நவநீதம்பிள்ளை ஏற்கனவே தனது அறிக்கையை தயாரித்து முடித்துவிட்டார் என்று இலங்கை மக்கள் கருதுவதாகவும் அவர் கூறினார். இந்தக் கருத்தை நவநீதம்பிள்ளை தமது நாட்டுக்கு வருவதற்கு முன்னரே அவருக்கு தெரியப்படுத்தியிருந்தேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 
இலங்கையைச் சேர்ந்த சிலர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு தமிழ் புலி என்று குற்றம் சாட்டியிருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பிய எதையும் கூறுவதற்கான உரிமையை பெற்றுள்ளார்கள் என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் பலதரப்பட்ட அரசியல், மத பின்னணியைக் கொண்ட 58பேர் இருக்கிறார்கள். நான் இவர்கள் அனைவரையும் நிர்வகிக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது உத்தியோகத்தர்கள் விரும்பிய எதனையும் கூறுவதற்கு உரிமை பெற்றுள்ளார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
 
வடபகுதியில் பெருமளவு இராணுவத்தினர் இருக்கிறார்கள். இராணுவத்தினர் செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் பொருத்தமான பதிலை கொடுக்கின்றன. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் ஒவ்வொரு வேட்பாளருக்கும், அச்சுறுத்தப்படும் வேட்பாளர்களுக்கும், அச்சுறுத்தப்படுபவர்களுக்கும் ஆதரவான அரவணைப்பை வழங்கியதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தனது கட்சி வடமாகாணசபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் பேட்டியின் போது வலியுறுத்தினேன் என்று ஜனாதிபதி கூறினார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் &@!Zt(@ ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. எவருக்கும் ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். எனினும் நிர்வாகத்தை சீராக நடத்துவது கஷ்டமான விடயம். ஆகவேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம் என்று ஜனாதிபதி கூறினார்.
 
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆளுநர் சந்திரசிறியுடன் இன்று சந்திப்பு!

Monday, September 30, 2013
இலங்கை::வட மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சீ. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறிக்கும் இடையில் இன்று முதற் தடவையாக சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
 
யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.
 
நடைபெற்று முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலமைச்சர் பதவிக்கு தெரிவாகியுள்ள சீ. வி. விக்னேஸ்வரனுக்கான நியமனத்தை வழங்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வட மாகாண ஆளுநருக்கு கடந்த 23ம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
 
வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவான உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கடந்த 24ம் திகதி நள்ளிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி கையொப்பமிட்டு தனது பதில் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
வட மாகாண ஆளுநர் கடந்த 25ம் திகதி இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதுடன், இது தொடர்பில் சம்பிரதாய முறைப்படி கலந்துரையாடுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பும் விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இதற்கமையவே, இன்றைய இந்த சந்திப்பும் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளன.
 
வட மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்களின் நியமனங்கள், அமைச்சுப் பொறுப்புகள், பதவிப் பிரமாணம் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது!

Monday, September 30, 2013
இலங்கை::மட்டக்களப்பு, கல்குடாப் பொலிஸ் பிரிவில் புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
பாசிக்குடா யானைக்கல் கடற்க
ரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
 
பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன் கையடக்கத்தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது,   புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைது  செய்யப்பட்டுள்ளார்.
 
பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேற்படி இளைஞனிடம் கல்குடா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளது: தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா!

Monday, September 30, 2013
இலங்கை::மாகாகாணசபைத் தேர்தல் முடிவுகள் இனப் பிரிவினைவாதத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் டொக்டர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
 
மாகாணசபைத் தேர்தல் நடைபெற்ற மூன்று மாகாணங்களிலும் தேசியத்தை முதன்மைக் கருப்பொருளாகக் கொண்டு பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் அரசாங்கத்திற்கு எதிராக 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 60க்கும் மேற்பட்ட வீதமான மக்கள் வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இனவாத அடிப்படையிலான தேர்தல் முடிவுகள் ஆபத்தான நிலைமையாகவே கருதப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் தேசிய நல்லிணக்கத்தை மேலும் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளக ரீதியாக பிளவடைந்த சமூகங்களின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தையோ, நாட்டின் சுபீட்சத்தையோ உறுதிப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
தெற்கில் எதிர்க்கட்சிகளின் பலவீனம் அரசாங்கத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். சுயாட்சி அதிகாரம், தேசிய ஐக்கியம் ஆகிய இரண்டு முக்கிய காரணிங்களையும் சமனிலைப்படுத்தி பிரதான இன சமூகங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குதன் மூலம் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.

புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக விக்னேஸ்வரன் நியமனம்: முஸம்மில்!

Monday, September 30, 2013
இலங்கை::புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பும் விதமாக அவருக்கு சரி சமமாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

நேற்று பத்திரமுல்லையில் உள்ள அக்கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அதன் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி கருத்து வெளியிடப்பட்டது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் முஸம்மில் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் தேர்தல் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் நியமனம் பெறவுள்ளார். இந்நிலையில் அவர் தமிழ், சிங்கள ஊடகங்களுக்கு வெளியிடும் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதுடன் பாரிய வித்தியாசத்தையும் காட்டுகிறது.

அன்று புலிகளின் அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட உபாயங்களையே விக்னேஸ்வரனும் கையாள்கிறார். தெற்கில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை எந்த வகையிலும் குழப்பாது தனித் தமிழீழம் நோக்கிய திட்டத்தை விக்கினேஸ்வரன் சூட்சுமமாக முன்னெடுத்துள்ளார்.

முன்னர் அன்டன் பாலசிங்கம் இவ்வாறான அரசியல் ரீதியான வழிமுறையையே தனித் தமிழீழத்துக்காக முன்னெடுத்தார். எனினும் பிரபாகரனின் ஆயுத கலாசாரத்தால் அது சாத்தியமற்றுப் போனது. இந்நிலையில் அன்று அன்டன் பாலசிங்கம் மேற்கொண்ட அரசியல் நகர்வுகள் இன்று விக்னேஸ்வரன் ஊடாக சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது.

இன்று வடக்கு மக்கள் காணி அதிகாரத்தையோ, பொலிஸ் அதிகாரத்தையோ ஒருபோதும் கோரவில்லை. அதனைவிட அத்தியாவசியமாக தீர்க்கப்பட வேண்டிய எத்தனையோ பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன.

அத்துடன் வடக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த கால எல்லைக்குள் பிரிவினைவாதிகளுக்கு பணம் சேர்க்க அங்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் கூற்றுகளையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இந்தியா, அதன் அரசியல் தந்திரங்களை இலங்கைக்குள் செயற்படுத்த முயற்சிக்கிறது. இந்நிலையில் இந்தியாவின் உளவுப் பிரிவினால் வேட்பாளராக்கப்பட்ட விக்னேஸ்வரன் வடக்கு மக்களின் பிரதான பிரச்சினையான மீன்பிடி தொடர்பான பிரச்சினைக்கு தாம் மிக அந்நியோன்னியமாக பழகும் இந்தியாவின் மீனவர் அத்து மீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டட்டும் என்றார்.

எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடவும் பிரபாகரன் - ரணிலுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை வலுவானது: விக்ரமபாகு கருணாரட்ன!

Monday, September 30, 2013
இலங்கை::புலிகளுடன் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் (புலிகளின் ஆதரவு பினாமி) விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலிகளின் தலைவர்  பிரபாகரனுடன் ரணில் விக்ரமசிங்க சமாதான
உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது மிகவும் தைரியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடவும் பிரபாகரன் - ரணிலுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை வலுவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
பிரபாகரனினால் முன்வைக்கப்பட்டிருந்த 26 அம்ச சுயாட்சி நிர்வாக அலகு குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
 
பிரபாகரனின் சுயாட்சி நிர்வாக அதிகாரம் குறித்த ஆவணத்தை சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்யக் கூடிய அவகாசத்தை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
 
வடக்கில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், பிரபாகரன் அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு நிகரான ஆவணமொன்றையே தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: முதல்வர் ஜெயலலிதா கடிதம்!

Monday, September 30, 2013
சென்னை::இலங்கை கடற்படையால் அடிக்கடி இன்னல்களுக்கு உள்ளாகும் தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
 
இலங்கை_தமிழக மீனவர்கள் இடையே டிசம்பர் மாதம் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 20.9.2013 அன்று தங்களுக்கு கடிதம் அனுப்பியதை நினைவு கூறுகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கொடுமையான தாக்குவது நீடித்ததாலும் இதில் இந்திய அரசு கடுமையான வலிமையான நடவடிக்கை எடுக்காததால் இது போன்ற தாக்குதல், கடத்தல் போன்றவை பாக்ஜலசந்தியில் நடந்ததாலும் கடத்தப்பட்ட மீனவர்கள் நீண்ட நாட்கள் ஜெயிலில் வைக்கப்பட்டதாலும் இந்த கடிதம் எழுதப்பட்டது.
 
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை மீனவர்களிடம் பேசுவது தான் சரியாக இருக்கும் என்று எங்கள் மீனவர்கள் நினைத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுடைய கோரிக்கைக்கு உதவி செய்யும் வகையில் இதை செய்தோம். இதற்கு மேலும் தாக்குதல் நடக்க கூடாது. மீனவர்கள் கடத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்ட நாள் சிறை வைப்பதை நிறுத்த வேண்டும். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் இடத்தில் தொடர்ந்து அவர்கள் மீன் பிடிக்கும் உரிமை வேண்டும். செயற்கையாக உருவாக்கப்பட்ட எல்லைகளை மதிக்க தேவையில்லை என்ற வகையில் இந்த பேச்சு வார்த்தை நடத்த விரும்பினோம். 
 
மேலும் கச்சத்தீவு தொடர்பாக வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அது பற்றியும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்க கூடாது. பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து தமிழக அரசின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் கூறியிருந்தோம். ஆனால் நான் எழுதிய கடிதத்தின் மை காய்வதற்கு முன்பே 22.9.2013 அன்று மீண்டும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கடத்தி சென்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 20 மீனவர்களை 6 படகுகளுடன் அவர்கள் கைது செய்துள்ளனர். பாரம்பரியமாக மீன் பிடிக்கும் பாக்ஜலசந்தியில் மீன் பிடித்து கொண்டு இருக்கும் போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 7.10.2013 வரை காவலில் வைக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
 
அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 18 மீனவர்களை 19.9.2013 அன்று 5 படகுகளுடன் கைது செய்து 10.9.2013 வரை காவலில் வைக்க உத்தரவிட்டு யாழ்ப்பாணம் ஜெயலில் அடைத்துள்ளனர். தற்போது 130 தமிழக மீனவர்கள் இலங்கை பாதுகாப்பில் உள்ளனர். அவர்களின் 29 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் பாம்பனை சேர்ந்த 35 மீனவர்களும், ராமேஸ்வரத்தை சேர்ந்த 41 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். 23.9.2013, 25.9.2013 ஆகிய தேதிகளில் விடுவிக்கப்பட்ட அவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை. அவர்களின் 18 படகுகளும் விடுவிக்கப்படவில்லை. 
 
21.4.2005 ல் நடந்த இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தையிலும், அதன் பிறகு நடந்த 2 வது பேச்சுவார்த்தையிலும் மீனவர்கள் கைது செய்யப்பட்டாலும் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டாலும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் 3 மாதம் வரை ஜெயலில் வைக்கப்படுகிறார்கள். அவர்களுடைய படகுகளும் விடுவிக்கப்படவில்லை. 
 
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்காதது வேதனையை தருகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சினை மட்டுமல்ல. உணர்வுப்பூர்வமான பிரச்சினை. பல்லாயிரக்கணக்கான தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினை. ஆனால் இந்த ஏழை மீனவர்களுக்கு எந்த  பாதுகாப்பும் அளிக்காமல் மத்திய அரசு கைவிட்டு விட்டது. இதனால் அவர்கள் தினமும் இலங்கை படையினரால் தாக்குதல், கடத்தல் போன்ற சம்பவங்களை சந்தித்து வருகிறார்கள். மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதுடன் வெளியுறவு ரீதியாக இலங்கை அரசுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வரையில் இதற்கு தீர்வு ஏற்படாது. இதை செய்தால்தான் அங்கு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள்.
 
இது போன்ற பிரச்சினை எதிர்காலத்தில் வராமல் இருக்கும். இலங்கை அரசு இந்திய அரசுடன் இது சம்பந்தமாக உரிய தீர்வை ஏற்படுத்தினால் அது ஆச்சரியமான விஷயமாக இருக்கும். பாதிக்கப்படும் தமிழக மீனவர்கள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை நீண்ட நாள் ஜெயிலில் அடைத்து வைத்து இருப்பதால் அவர்களின் குடும்பத்தினர் தினசரி வாழ்க்கைக்கு கஷ்டப்படுவதுடன் எந்த ஒரு ஆதரவும் இல்லாமல் தவிக்கிறார்கள்.
 
மேலும் அவர்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்குகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் சமுதாயத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே மத்திய அரசு இதில் கடும் நடவடிக்கை எடுத்து இலங்கை ராணுவ படையினர் நமது மீனவர்களை தாக்குவது, கைது செய்வது முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மீனவ சமுதாயத்தின் வாழ்க்கை அமைதியாக இருக்காது. எனவே இலங்கை சிறையில் உள்ளதமிழக மீனவர்களை உடனடியாக மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

Sunday, September 29, 2013

(புலி) கூட்டமைப்புகுள்) கதிரைக்கும் குதிரைக்கும் அடிபாடா? – விருப்பு வாக்கு விவகாரம்! அடைக்கலநாதன் அலுவலகம் சேதம்!!

Sunday, September 29, 2013
இலங்கை::மன்னாரில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தினுள் புகுந்த குழுவினர் அங்கு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அலுவலகத்தில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சாள்ஸ் அவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும், அவரது வெற்றியை தடுக்கும் நோக்கில் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செயற்பட்டதாக குற்றம் சாட்டி சாள்ஸ்சின் ஆதரவாளர்கள்  நேற்று முற்பகல் செல்வம் எம்.பியின் அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.

அதனைத் தடுக்க முற்பட்ட ஒருவர் மீது நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். மன்னாரில் (புலி)கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு தரப்பினரே குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை!

Sunday, September 29, 2013
இலங்கை::இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை  மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, நீர்கொழும்பு, களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே தற்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோசல  வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.

இந்திய கடல் எல்லைக்குள் அ
த்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்க முடியும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தவிர மேலும் தமிழக மீனவர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 

வவுனியா செட்டிகுளத்தில் போலி நாணயத் தாள்களுடன் இருவர் கைது!

Sunday, September 29, 2013
இலங்கை::செட்டிகுளம், மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கணேசபுரம் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலேயே இவர்கள் கைதாகியுள்ளார்.
 
இதன்போது சந்தேகநபர்கள் வசமருந்து 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம், 1000 ரூபா போலி நாணயத்தாள்கள் 9ம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பின்னர் செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேலும் சில போலி நாணயத் தாள்கள் சிக்கியுள்ளன.
 
இதன்படி பிரதான சந்தேகநபரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 ரூபா போலி நாணயத் தாள்கள் மூன்றும் 1000 ரூபா போலி நாணயத் தாள்கள் 60ம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
 
செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 33 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது!

Sunday, September 29, 2013
இலங்கை::தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இதன் போது வடமாகாண சபைக்கான அமைச்சர்கள் தொடர்பில் கலந்துரையாடப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வடமாகாண சபைக்கான முதலமைச்சர் சத்திய பிரமாணம் மேற்கொள்ளும் நிகழ்வுகள் ஜனாதிபதி அழைக்கப்படுவார் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தாக, ஆங்கில ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு இரா.சம்பந்தனை தொடர்பு கொண்ட போது, இந்த விடயம் குறித்து தற்போது எதனையும் கூற முடியாது என்று சம்பந்தன் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இது குறித்தும் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான போனஸ் ஆசனங்களுக்காக மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும், வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவ மாவட்டங்களின் பிரதிநிதிகளுக்கு சுழற்சி முறையில் ஒரு ஆசனமும் வழங்கப்படவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மேல், ஊவா மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படால், அவற்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் என்று அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை மேற்கோள்காட்டி இன்றைய ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது சம்பந்தமாக எமது செய்திப்பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், பலனளிக்கவில்லை.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளரிடம்    இது குறித்து வினவிய போது, கலைக்கப்படாத மாகாண சபைகளில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது தொடர்பில் பதில் வழங்க முடியாது என்று தெரிவித்தார்.

மட்டக்களப்பில் முதன் முறையாக வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்கள்!!

Sunday, September 29, 2013
இலங்கை::மட்டக்களப்பு நகரை அண்மித்ததாக உள்ள கிராமங்களில் முதன் முறையாக டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கும் வீட்டுக் கிணறுகளில் கப்பி இன மீன்களை இடும் நடவடிக்கையும் இன்று  ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.

சுவீடன் கூட்டுறவு நிலையத்தின் நிதி அனுசரணையுடன் வவுணதீவு திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் அமுலாக்கத்துடன் வீடு வீடாகச் சென்று இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத் திட்டத்தை செய்து வருகின்றது.

திமிலைதீவு, புதூர், வீச்சுக் கல்முனை, மற்றும் சேத்துக்குடா ஆகிய மட்டக்களப்பு நகரை அண்டிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் குடும்பங்களுக்கு இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

நுளம்புக் குடம்பிகளை அழிப்பதற்காக இயற்கை உயிரியல் வழிமுறையாக ஒரு கிணற்றுக்கு 2 கப்பி மீன்களும், 2 திலாப்பியா மீன்களும் விடப்படுகின்றன. அத்துடன் வீட்டையும் அயற் பிரதேசங்களையும் சுத்தமாக வைத்திருப்பது பற்றியும் குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப் படுவதாக திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன் தெரிவித்தார்.

இன்றைய ஆரம்ப நிகழ்வுகளில் சுவீடன் கூட்டுறவு நிலைய கிழக்கு மாகாண இணைப்பாளர் ரீ. மயூரன், திமிலைதீவு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க முகாமையாளர் எம். நவரஞ்சன், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பாலசிங்கம் ரமேஸ்குமார் உட்பட இன்னும் பல இளைஞர் கழக உறுப்பினர்களும் நிகழ்வுகளில் பற்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

போலி காசோலை வழங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் பிணையில்!

Sunday, September 29, 2013
இலங்கை::தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெருகல் பிரதேச சபைத் தலைவர் எஸ்.விஜயகாந்த நேற்று முன்தினம் (27) மாலை பெலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப் பட்டதாக பொலிஸார் தெரிவித்தார். காசோலை மோசடி குற்றச் சாட்டிலேயே அவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
 
பாடசாலை ஒன்றின் விளையாட்டு மைதான திருத்த வேலைக்கு மண் தருவிப்பதற்கான ஒப்பந்தத்தில் லொறி சாரதி ஒருவருக்கு ஐந்து லெட்சம் என குறிக்கப்டப்பட்ட போலி காசோலை வழங்கியமை தொடர்பிலேயே பிரதேச சபை தலைவர் கைது செய்யபட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட வெருகல் பிரதேச சபை தலைவரை மூதூர் நீதவான நீதிமன்னிறில் ஆஜர்படுத்தியபோது இரண்டு லெட்சம் ரூபா சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதியளித்தார். இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரிகள் அச்சத்தால் டயானா பேசி பதிவு செய்த ரகசிய டேப் அம்பலம்!!

Sunday, September 29, 2013
லண்டன்::இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்  டயானா திருமணம் உலகளவில் மிக விமரிசையாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு சமூக சேவையில் ஆர்வம் காட்டி மக்களுடன் சகஜமாக பழகினார் டயானா. இதனால் ராணி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். எனினும், டயானா தனது விருப்பப்படி செயல்பட்டார். இதனால் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும்  பின்தொடர்ந்து சென்று அவரது ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்தும், எழுதியும் தள்ளினர். இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு பாரிசில் நடந்த கார் விபத்தில் மர்மமான முறையில் டயானா பரிதாபமாக இறந்தார்.

அது விபத்தா, கொலையா என்ற சர்ச்சை இன்று வரை தீராமல் உள்ளது. இந்நிலையில், டயானா பேசி பதிவு செய்த டேப் ஒன்று கிடைத்துள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Ôகுளோப்Õ என்ற இதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. Ôரகசிய டேப்பில் டயானா குரல் பதிவாகி உள்ளது. அதில் இளவரசர் வில்லியத்துக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் (டயானா இறக்கும் போது வில்லியமுக்கு அப்போது திருமணம் நடைபெறவில்லை) பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். தனது மூத்த மகன் வில்லியமுக்கு அமைய போகும் மனைவி அழகாகவும், தன்னிச்சையாக செயல்படும் திறமைப்படைத்தவராக இருக்க வேண்டும் என்று டயானா குறிப்பிட்டுள்ளர்Õ என்று குளோப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், டயானாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்ததாகவும், அதனால் தனது மகன்களை வளர்க்கவும், அவ்வப்போது அறிவுரை வழங்கி வழிநடத்தவும் தான் இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து ரகசியமாக டேப்பில் பேசி பதிவு செய்துள்ளார் என்றும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி ஸ்டார் இணைய தளமும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
டயானா மரணத்துக்கு பிறகு இளவரசர் வில்லியம், கேத் மிடில்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கேத் மிடில்டனை டயானா சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விக்னேஸ்வரன் சட்டத்தை மீறினால் கைதுசெய்ய வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க!

Sunday, September 29, 2013
இலங்கை::இலங்கை::சட்டத்தை மீறும் வகையில் செயற்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சராகவுள்ள முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு புறம்பான வகையில் சர்வதேச தலையீட்டை நாடினால் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உள்விவகாரங்களில் சர்வதேச தலையீடுகளை கோருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் முரண்பாடுகளை தூண்டும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் ஏனைய உலக நாடுகளை சிறிலங்காவுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பிக்க வலியுறுத்தியுள்ளார்.

சம்பூர் சூடைக்குடாவில் மீள்குடியேறிய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!.

Sunday, September 29, 2013
இலங்கை::திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர், சூடைக்குடாவில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன மக்கள் குறைகேள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் மேற்படி மக்கள் குறைகேள் சந்திப்பில் உடனிருந்து மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டார்.

2006ஆம் ஆண்டு சம்பூர், சூடைக்குடாப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களில் 85 குடும்பங்கள் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.

இந்த மக்களுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை சூடைக்குடாவில் நடைபெற்றது.

இதன்போது குடிநீர், வீதி, போக்குவரத்து, பாடசாலை மற்றும் வைத்திய வசதிகள், மீன்பிடிக்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளை இந்த மக்கள் முன்வைத்தனர்.

இவற்றுக்கு துரிதகதியில் தீர்வு பெற்றுத்தர தாங்கள் முயற்சி மேற்கொள்வதாக கிழக்கு மாகாண சபையின் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரனவும் கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பு அதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேராவும் உறுதியளித்தனர்.

வடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி!

Sunday, September 29, 2013
இலங்கை::ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நாடு திரும்­பி­யதும் மத்­திய, வடமேல் மற்றும் வட­மா­கா­ணத்­திற்­கான முத­ல­மைச்­சர்­களின் சத்­தியப் பிர­மாணம் அடுத்த மாதம் 3ஆம் திகதி நடை­பெ­று­மென அர­சாங்­கத்தின் நம்­பத்­த­குந்த வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­க­ளுக்­கான முத­ல­மைச்­சர்­களை தெரிவு செய்யும் போது, விருப்பு வாக்­கு­ களை மாத்­திரம் கருத்­திற்­கொண்டு தீர்­மானம் எடுக்­கப்­பட மாட்­டாது என தெரி­விக் கும் அவ்­வட்­டா­ரங்கள், மத்­திய மாகா­ ணத்­திற்கு சரத் ஏக்­க­நா­யக்­கவும் வடமேல் மாகா­ணத்­தி ற்கு தயா­சிறி ஜய­சே­க­ர­வையும் முத­ல­மைச்­சர்­க­ளாக நிய­மிக்க உள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றன.

சரத் ஏக்­க­நா­யக்க கடந்த முறை மத்­திய மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அதே­வேளை இம்­முறை நடை­பெற்று முடிந்த மத்­திய மாகாண சபைத் தேர்­தலில் விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் பிர­த­மரின் புதல்­வ­ரான அநு­ராத ஜய­ரத்ன முத­லா­மி­டத்­திலும் சரத் ஏக்­க­நா­யக்க இரண்­டா­மி­டத்­தி லும் இருக்­கின்­றார்கள்.

அதிக விருப்பு வாக்­கு­களை பெற்­ற­வர்­க­ளுக்கு முத­ல­மைச்சர் பதவி வழங்­கப்­படும் என அர­சாங்கம் தீர்­மா­னித்­தி­ருந்­த­தா­கவும் அந்த தீர்­மா­னத்தில் மாற்றம் எதுவும் இல்­லை­யெ­னவும் பிர­தமர் டி.எம். ஜய­ரத்ன அண்­மையில் குறிப்­பிட்­டி­ருந்தார். இவ்­வா­றான நிலை­யி­லேயே இந்த புதிய தகவல் வெளி­வந்­துள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை இரா­ஜி­னமா செய்­து­விட்டு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் வடமேல் மாகாண சபைத் தேர்­தலில் தயா­சிறி ஜய­சே­கர போட்டியிட்டார். எனவே அரசாங்கம் வெற்றி பெற்றால் அவரே வட மேல் மாகாணத்திற்கு முதல மைச்சராக தெரிவு செய்யப்படுவார் என்று ஆரம் பத்திலேயே செய்திகள் வெளியாகி இருந் தமையும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாணத் தேர்தலை நடத்தியதே அரசு பெற்ற வெற்றிதான். 2009 ஆம் ஆண்டிற்கு முன் அங்கே இருந்த நிலைமை படி இவ்வாறான தேர்தலை அங்கே நடத்த முடியும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை: அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Sunday, September 29, 2013
இலங்கை::மத்திய, வடமாகாண மற்றும் வடமேல் மாகாணத் தேர்தல் - முடிவுகள் பற்றிய உங்கள் கருத்து? l மஹிந்த சிந்தனைக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இம் மூன்று மாகாணங்களையும் வென்று, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்கட்சியின் பேச்சு இன்று வீண் பேச்சாகியுள்ளது. ஒரே அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விருப்பு குறைவது இயல்பாக இருந்தபோதிலும், எமது அரசு பெற்றுள்ள இவ் வெற்றி அரசிற்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பதையும், அவர்கள் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அங்கீகரித்திருப்பதையும் காட்டுகின்றது. அரசு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கே தோல்வியுற்றமைக்கு என்ன காரணம்?

l வடமாகாணத் தேர்தலை நடத்தியதே அரசு பெற்ற வெற்றிதான். 2009 ஆம் ஆண்டிற்கு முன் அங்கே இருந்த நிலைமை படி இவ்வாறான தேர்தலை அங்கே நடத்த முடியும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. மாகாணசபை முறையினை ஏற்படுத்தி இன்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருந்தும் இம்முறையே வடக்கே மாகாணசபைத் தேர்தலை நடத்தி அம் மாகாணத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அவ் வாய்ப்பினை அரசே பெற்றுக்கொடுத்தது.  தோட்டா மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை வாக்கு மீது நம்பிக்கைவைத்த வர்களாக மாற்ற முடிந்தமை அரசு பெற்ற வெற்றியே. பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் வட மக்களின் ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டிருந்தன. வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. அந் நிலைமையில் இருந்து வடக்கு வாழ் மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விடுவித்ததுடன், அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.

அடுத்ததாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தீய சக்திகள் இலங்கை அரசு வடபகுதிக்கான தேர்தலை நடத்தாது என்றே கூறிவந்தன. தேர்தலுக்கான பணிகள் ஆரம்பமானதும், தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்கவில்லையே என்றது, இவ்வாறான எல்லா குற்றச்சாட்டுக்களும் இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளன.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத கோஷத்திற்கு அடிபணியாத கணிசமான பொதுமக்கள் அரசை வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசின் வெற்றிக்காக வாக்களித்த, ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கும் எமது கட்சியின் சார்பாக நான் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அத்தோடு இத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு ஆர்வமும், விகிதாசாரமும் அதிகரித்திருப்பதுடன், அவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீது நம்பிக்கை வைத்திருப்பது எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல சமிக்ஞையாகும். பொதுவாக மாகாண சபைத் தேர்தல்களுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் வருகையினை நாம் காண்பதில்லை. ஆயினும் இம்முறை தேர்தல் ஆணையாளர் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எடுத்ததும், அரசு அதற்கு ஆதரவளித்ததற்கும் காரணம் என்ன?

l ஆம், பொதுவாக பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றின் போதே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பது வழக்கம். அதற்கு மாறாக இம்முறை மாகாண சபைத் தேர்தலின் போதும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவை நாமும் விரும்ப காரணம், தேர்தல் முறை மீது மக்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதில் நியாயமான சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் அரசிற்கு இருந்த அக்கறை ஆகியனவே.  அரசு தமது அரச அதிகாரம் மற்றும் அரச வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதால் இத் தேர்தல் முடிவுகள் உண்மையான மக்கள் விருப்பத்தினை வெளிபடுத்தவில்லை என எதிர்க்கட்சி கூறுகின்றதே?

l தோல்வியின் வேதனையினை குறைத்துக்கொள்ள இவ்வாறான கதை களை சொல்வது அவர்களது வழக்க மாகிவிட்டது. நடந்து முடிந்த தேர்தல் நியாயமற்ற, சுதந்திரமற்றத் தேர்தல் என எவராலும் கூற முடியாது. ஏனெனில் ஐ.தே.க வடக்கே அபிவிருத்திச் சபைத் தேர்தல், 1988 ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல், ஆகியவற்றை எவ்வாறு நடத்தியது என்பதை இன்னும் மக்கள் மறக்கவில்லை. மக்கள் கருத்தை மதிக்கும் ஒரு அரசு என்ற வகையில் அவ்வாறு மக்கள் கருத்தை கொள்ளையடிக்கும் அவசியம் எமக்கில்லை. இன்று ஜனநாயகத்தைப் பற்றி பேசும் இவர்கள் நாம் வென்றெடுத்த தென்மாகாண சபையின் ஆட்சியை அமைக்கக்கூட இடமளிக்கவில்லை. பொதுநலவாய நாடு என்ற வகையில் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி கூறுகின்றது. அதன்படி வடமாகாண சபையினை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற அதிகாரங்களை அவர்களுக்கு கொடுக்கப்படுமா?

 l இலங்கையின் ஏனைய மாகாண ங்கள் பெற்றிருக்கும் அதிகாரங்களும், பொறுப்புக்களும் வட மாகாண சபைக்கும் கொடுக்கப்படும் மாகாண சபைகளுக்கு போதியளவான அதிகாரங்கள் இல்லை என்ற கூற்றை ஏற்க நாம் தயாராக இல்லை. நானும் ஒரு காலத்தில் மாகாண சபை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். அச்சமயம் மாகாண சபைக்கு கிடைத் திருக்கும் அதிகாரங்களை வைத்து முக்கியமான பல பணிகளை முன்னெ டுக்க முடிந்தது. தமிழ் தேசிய கூட்ட மைப்பு வடபகுதி மக்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமலேயேதான் அவ ர்களது வாக்கை கேட்டு நின்றது, போலியான இனவாத கோஷத் தையே எழுப்பியது. வடமக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து காப்பாற்றியதுடன் அப் பகுதியில் அனைத்து அபிவிருத்தித் திட் டங்களையும் முன்னெடுத்து அம் மக்களுக்கு மறுவாழ்வு அளித்தது இந்த அரசாங்கமே.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அப்பகுதி மக் களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவ ர்களோ போதிய அதிகாரங்கள் இல்லாததால் வேலை செய்ய முடி யவில்லை என்று காரணம் கூறவே கூறிவிடவே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாக இருந்தால் அவர்களுக்கு கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட க்கை அபிவிருத்திச் செய்வதே அவர்கள் கடமை.

21 நாட்களாக நடைபெற்ற நாகை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!


Sunday, September 29, 2013
நாகப்பட்டினம்::நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 65 பேர் 9 விசைப்படகுகளில் கடந்த ஜூலை மாதம் 31–ந் தேதி கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக கடந்த 5–ந் தேதி நாகை தாலுகாவை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 65 மீனவர்கள் மற்றும் 9 படகுகளையும் விடுதலை செய்யும் வரை நாகை தாலுகாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 21 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதன்படி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif