Monday, September 30, 2013

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்காக வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Monday, September 30, 2013
இலங்கை::நவநீதம்பிள்ளை ஏற்கனவே இலங்கைக்கு எதிரான அறிக்கையை தயாரித்து முடித்த பின்னரே இலங்கை விஜயத்தை மேற்கொண்டார். கடந்த ஐந்தாண்டு காலத்தில் 19 தேர்தல்களை நடத்தி முடித்த எங்கள் மீது நாம் அதிக சர்வாதிகார போக்கில் சென்று கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்துவது நியாயமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல்ஜெkரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடெங்கிலும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் இராணுவ முகாம்களை வைத்திருக்கிறது. விக்னேஸ்வரனின் வேண்டுகோளுக்கு அமைய வடக்கில் இருந்து இராணுவத்தை எனது அரசாங்கம் வெளியேற்றாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
 
அயல்நாடான இந்தியாவுடன் நாம் நெருங்கிய நட்புறவை வைத்திருக்கிறோம். இந்தியாவுக்கு வேறு விதமான அரசியல் பிரச்சினைகள் இருப்பதனால் இந்தியாவின் சில செயற்பாடுகளை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
வடக்கில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது எமக்கு நன்கு தெரியும். வெளியில் இருந்து குற்றம் காண்பது எளிது. எனவே, வடமாகாணத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சீரான நிர்வாகத்தை நடத்த வேண்டுமென்று நான் சவால் விடுக்கிறேன் என ஜனாதிபதி இந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
 
நாடெங்கிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த இராணுவம் நிலைகொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடமாகாணத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுக்கலாகாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுபோன்று நாட்டின் ஏனைய மாகாண சபைகளும் இராணுவத்தை தங்கள் பிரதேசத்தில் இருந்து வெளியேற்றுமாறு கேட்டால் எமது இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமே இருக்காது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
 
வேறு யாராவது எங்கள் நாட்டு இராணுவத்தை வைத்திருப்பதற்கு இடமளிப்பார்களா என்று அல்ஜெkறா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பு குறித்து நாம்தான் முடிவெடுப்போம். நாட்டை பாதுகாப்பதற்கு எத்தனை பேர் அவசியம் என்பதையும் நாம்தான் தீர்மானிப்போம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
 
உலகத்திற்கு பொலிஸ்காரர்களின் தேவை அவசியமில்லை, சில நாடுகள் தாங்களே உலகத்தின் பொலிஸ்காரர்கள் என்று இறுமாப்பில் செயற்படுகின்றன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொலிஸ்காரர்களை போன்று நடந்து கொள்ளும் இந்நாடுகள் மற்ற நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டுவர எத்தனிக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.
 
நீங்கள் மேற்கத்திய நாடுகளையா அல்லது இலங்கையின் மிக அருகில் உள்ள அயல் நாடான இந்தியாவையா இவ்விதம் குறிப்பிடுகிaர்கள்? என்று கேட்டதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளையே நான் குறிப்பிட்டேன் என்று கூறினார்.
 
நாம் எமது அயல்நாடான இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான நல்லுறவை வைத்திருக்கிறோம். ஆயினும் இந்தியாவுக்கும் வேறு விதமான அரசியல் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று சுட்டிக்கட்டிய ஜனாதிபதி, நாம் அவர்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளோம் என்று கூறினார்.
 
இலங்கை அரசாங்கம் அதிக சர்வாதிகாரப் போக்கில் சென்று கொண்டிருக்கிறதென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கண்டனம் குறித்து அபிப்பிராயம் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நவநீதம்பிள்ளை ஏன்தான் இப்படியான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்பது எனக்கு புரியவில்லை. கடந்த ஐந்தாண்டு காலத்தில் இலங்கையில் 19 தேர்தல்கள் நடத்தப்பட்டதை நவநீதம்பிள்ளை புரிந்து கொள்ளவில்லையா, மக்கள்தான் அரசாங்கத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கண்காணிப்பு துன்புறுத்தல் பற்றி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல்கள் தாக்குதலுக்கு இலக்காக்கப்படுகின்றன அல்லது அவை நிரந்தரமாக மெளனமாக்கப்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த குற்றச்சாட்டை ஜனாதிபதி அவர்கள் முற்றாக நிராகரித்தார்.
 
ஒரு சர்வாதிகார நாட்டைப் போலன்றி இலங்கையில் எதிர்கட்சி பலதரப்பட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும் அவை அரசாங்கத்தை சர்வதேச சமூகத்தின் மட்டத்திலோ அல்லது உள்நாட்டிலோ தோற்கடிப்பதற்கே எப்போதும் முயற்சிகளை செய்து வருகின்றன என்று ஜனாதிபதி கூறினார்.
நவநீதம்பிள்ளை ஏற்கனவே தனது அறிக்கையை தயாரித்து முடித்துவிட்டார் என்று இலங்கை மக்கள் கருதுவதாகவும் அவர் கூறினார். இந்தக் கருத்தை நவநீதம்பிள்ளை தமது நாட்டுக்கு வருவதற்கு முன்னரே அவருக்கு தெரியப்படுத்தியிருந்தேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.
 
இலங்கையைச் சேர்ந்த சிலர் நவநீதம்பிள்ளையை ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு தமிழ் புலி என்று குற்றம் சாட்டியிருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கையில், இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டு மக்கள் தாங்கள் விரும்பிய எதையும் கூறுவதற்கான உரிமையை பெற்றுள்ளார்கள் என்றார்.
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவையில் பலதரப்பட்ட அரசியல், மத பின்னணியைக் கொண்ட 58பேர் இருக்கிறார்கள். நான் இவர்கள் அனைவரையும் நிர்வகிக்க வேண்டும். எனவே, தனிப்பட்ட முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது உத்தியோகத்தர்கள் விரும்பிய எதனையும் கூறுவதற்கு உரிமை பெற்றுள்ளார்கள் என்று ஜனாதிபதி கூறினார்.
 
வடபகுதியில் பெருமளவு இராணுவத்தினர் இருக்கிறார்கள். இராணுவத்தினர் செல்வாக்கை செலுத்துகிறார்கள் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் முடிவுகள் பொருத்தமான பதிலை கொடுக்கின்றன. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது இராணுவத்தினர் ஒவ்வொரு வேட்பாளருக்கும், அச்சுறுத்தப்படும் வேட்பாளர்களுக்கும், அச்சுறுத்தப்படுபவர்களுக்கும் ஆதரவான அரவணைப்பை வழங்கியதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
தனது கட்சி வடமாகாணசபைத் தேர்தலில் தோல்வியடையும் என்பதை நான் முன்கூட்டியே தெரிந்திருந்ததாகவும் தான் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தலைவரிடமும் நாம் வடமாகாணசபைத் தேர்தலை நடத்தப் போகிறோம் என்றும் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்றும் எமது கட்சியின் மக்கள் ஆதரவை இந்தப் பேட்டியின் போது வலியுறுத்தினேன் என்று ஜனாதிபதி கூறினார்.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்று ஆட்சிப் &@!Zt(@ ஏற்கவேண்டுமென்று அறிவித்திருந்தது. எவருக்கும் ஒரு நிர்வாகத்தைப் பற்றி குற்றம் குறை காண்பது இலகுவான விடயம். எனினும் நிர்வாகத்தை சீராக நடத்துவது கஷ்டமான விடயம். ஆகவேதான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபையை நிர்வகியுங்கள் என்று கூறினோம் என்று ஜனாதிபதி கூறினார்.
 
சில இராஜதந்திரிகள் தன்னிடம் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி கேட்ட போது நான் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 முதல் 10 ஆசனங்களை வடமாகாண சபைத் தேர்தலில் வெற்றியீட்டுமென்று கூறிய போதிலும் எனது இந்த எதிர்பார்ப்பு தவறாக அமைந்தது. நாம் அங்கு 7 ஆசனங்களையே வெற்றி பெற்றோம் என்றும் ஜனாதிபதி இந்த தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment