Sunday, September 29, 2013
இலங்கை::மத்திய, வடமாகாண மற்றும் வடமேல் மாகாணத் தேர்தல் - முடிவுகள் பற்றிய உங்கள் கருத்து? l மஹிந்த சிந்தனைக்கு மக்கள் மீண்டும் அங்கீகாரம் அளித்திருக்கிறார்கள் என்பதையே இத்தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இம் மூன்று மாகாணங்களையும் வென்று, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்போம் என்ற எதிர்கட்சியின் பேச்சு இன்று வீண் பேச்சாகியுள்ளது. ஒரே அரசாங்கம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் போது மக்கள் விருப்பு குறைவது இயல்பாக இருந்தபோதிலும், எமது அரசு பெற்றுள்ள இவ் வெற்றி அரசிற்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பதையும், அவர்கள் அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை அங்கீகரித்திருப்பதையும் காட்டுகின்றது. அரசு மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெற்றி பெற்ற போதிலும் வடக்கே தோல்வியுற்றமைக்கு என்ன காரணம்?
l வடமாகாணத் தேர்தலை நடத்தியதே அரசு பெற்ற வெற்றிதான். 2009 ஆம் ஆண்டிற்கு முன் அங்கே இருந்த நிலைமை படி இவ்வாறான தேர்தலை அங்கே நடத்த முடியும் என்று எவருமே எதிர்பார்க்கவில்லை. மாகாணசபை முறையினை ஏற்படுத்தி இன்றைக்கு இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இருந்தும் இம்முறையே வடக்கே மாகாணசபைத் தேர்தலை நடத்தி அம் மாகாணத்திற்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அவ் வாய்ப்பினை அரசே பெற்றுக்கொடுத்தது. தோட்டா மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களை வாக்கு மீது நம்பிக்கைவைத்த வர்களாக மாற்ற முடிந்தமை அரசு பெற்ற வெற்றியே. பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் வட மக்களின் ஜனநாயக உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டிருந்தன. வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கவில்லை. அந் நிலைமையில் இருந்து வடக்கு வாழ் மக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து விடுவித்ததுடன், அவர்கள் விரும்பும் பிரதிநிதிகளை அவர்களே தெரிவு செய்யும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்துள்ளது.
அடுத்ததாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள தீய சக்திகள் இலங்கை அரசு வடபகுதிக்கான தேர்தலை நடத்தாது என்றே கூறிவந்தன. தேர்தலுக்கான பணிகள் ஆரம்பமானதும், தேர்தலை நடத்துவதற்கான திகதியினை அறிவிக்கவில்லையே என்றது, இவ்வாறான எல்லா குற்றச்சாட்டுக்களும் இன்று பொய்ப்பிக்கப்பட்டுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இனவாத கோஷத்திற்கு அடிபணியாத கணிசமான பொதுமக்கள் அரசை வெற்றிபெறச் செய்திருக்கின்றார்கள். அவர்களுக்கும், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அரசின் வெற்றிக்காக வாக்களித்த, ஜனநாயகம் மீது நம்பிக்கை வைத்த மக்களுக்கும் எமது கட்சியின் சார்பாக நான் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு இத் தேர்தலில் மக்களின் வாக்களிப்பு ஆர்வமும், விகிதாசாரமும் அதிகரித்திருப்பதுடன், அவ்வாறு வாக்களித்தவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மீது நம்பிக்கை வைத்திருப்பது எதிர்காலம் பற்றிய ஒரு நல்ல சமிக்ஞையாகும். பொதுவாக மாகாண சபைத் தேர்தல்களுக்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் வருகையினை நாம் காண்பதில்லை. ஆயினும் இம்முறை தேர்தல் ஆணையாளர் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர வேண்டும் என்ற முடிவை எடுத்ததும், அரசு அதற்கு ஆதரவளித்ததற்கும் காரணம் என்ன?
l ஆம், பொதுவாக பொதுத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றின் போதே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பது வழக்கம். அதற்கு மாறாக இம்முறை மாகாண சபைத் தேர்தலின் போதும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கொண்டுவர தேர்தல் ஆணையாளர் எடுத்த முடிவை நாமும் விரும்ப காரணம், தேர்தல் முறை மீது மக்களின் நம்பிக்கையினை உறுதிப்படுத்துவதில் நியாயமான சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் அரசிற்கு இருந்த அக்கறை ஆகியனவே. அரசு தமது அரச அதிகாரம் மற்றும் அரச வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்தியதால் இத் தேர்தல் முடிவுகள் உண்மையான மக்கள் விருப்பத்தினை வெளிபடுத்தவில்லை என எதிர்க்கட்சி கூறுகின்றதே?
l தோல்வியின் வேதனையினை குறைத்துக்கொள்ள இவ்வாறான கதை களை சொல்வது அவர்களது வழக்க மாகிவிட்டது. நடந்து முடிந்த தேர்தல் நியாயமற்ற, சுதந்திரமற்றத் தேர்தல் என எவராலும் கூற முடியாது. ஏனெனில் ஐ.தே.க வடக்கே அபிவிருத்திச் சபைத் தேர்தல், 1988 ஆண்டின் ஜனாதிபதித் தேர்தல், ஆகியவற்றை எவ்வாறு நடத்தியது என்பதை இன்னும் மக்கள் மறக்கவில்லை. மக்கள் கருத்தை மதிக்கும் ஒரு அரசு என்ற வகையில் அவ்வாறு மக்கள் கருத்தை கொள்ளையடிக்கும் அவசியம் எமக்கில்லை. இன்று ஜனநாயகத்தைப் பற்றி பேசும் இவர்கள் நாம் வென்றெடுத்த தென்மாகாண சபையின் ஆட்சியை அமைக்கக்கூட இடமளிக்கவில்லை. பொதுநலவாய நாடு என்ற வகையில் மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களையும், பொறுப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என எதிர்கட்சி கூறுகின்றது. அதன்படி வடமாகாண சபையினை வென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற அதிகாரங்களை அவர்களுக்கு கொடுக்கப்படுமா?
l இலங்கையின் ஏனைய மாகாண ங்கள் பெற்றிருக்கும் அதிகாரங்களும், பொறுப்புக்களும் வட மாகாண சபைக்கும் கொடுக்கப்படும் மாகாண சபைகளுக்கு போதியளவான அதிகாரங்கள் இல்லை என்ற கூற்றை ஏற்க நாம் தயாராக இல்லை. நானும் ஒரு காலத்தில் மாகாண சபை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். அச்சமயம் மாகாண சபைக்கு கிடைத் திருக்கும் அதிகாரங்களை வைத்து முக்கியமான பல பணிகளை முன்னெ டுக்க முடிந்தது. தமிழ் தேசிய கூட்ட மைப்பு வடபகுதி மக்களுக்கு எந்தவித சேவையும் செய்யாமலேயேதான் அவ ர்களது வாக்கை கேட்டு நின்றது, போலியான இனவாத கோஷத் தையே எழுப்பியது. வடமக்களை பிரபாகரனின் பிடியிலிருந்து காப்பாற்றியதுடன் அப் பகுதியில் அனைத்து அபிவிருத்தித் திட் டங்களையும் முன்னெடுத்து அம் மக்களுக்கு மறுவாழ்வு அளித்தது இந்த அரசாங்கமே.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அப்பகுதி மக் களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அவ ர்களோ போதிய அதிகாரங்கள் இல்லாததால் வேலை செய்ய முடி யவில்லை என்று காரணம் கூறவே கூறிவிடவே பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொறுப்பு மிக்க அரசியல் கட்சியாக இருந்தால் அவர்களுக்கு கிடைத்துள்ள இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வட க்கை அபிவிருத்திச் செய்வதே அவர்கள் கடமை.

No comments:
Post a Comment