Sunday, September 29, 2013

21 நாட்களாக நடைபெற்ற நாகை மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!


Sunday, September 29, 2013
நாகப்பட்டினம்::நாகை, காரைக்கால் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 65 பேர் 9 விசைப்படகுகளில் கடந்த ஜூலை மாதம் 31–ந் தேதி கோடியக்கரைக்கு தென் கிழக்கே மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக கடந்த 5–ந் தேதி நாகை தாலுகாவை சேர்ந்த மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 65 மீனவர்கள் மற்றும் 9 படகுகளையும் விடுதலை செய்யும் வரை நாகை தாலுகாவை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
இந்த நிலையில் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயபால் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 21 நாட்களாக நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தை மீனவர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அதன்படி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment