Sunday, September 29, 2013
தெக்ரான்::அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐ.நா சபை கூட்டம் நடந்தது. அதில் ஈரான் புதிய அதிபர் ஹசன் ரப்பானி கலந்து கொண்டார். அப்போது 30 ஆண்டு கால பகையை மறந்து அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் டெலிபோனில் பேசினார்.
அதற்கு முன்னதாக ஈரான் வெளியுறவு மந்திரி மொகமது ஜவாத் ஷரீப், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியுடன் நியூயார்க்கில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அணு உலை பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஐ.நா.சபை கூட்டத்தை முடித்துக் கொண்டு ஈரான் அதிபர் ரப்பானி நேற்று ஈரான் தலைநகர் தெக்ரான் திரும்பினார். அதையொட்டி அவருக்கு ஆதரவாளர்கள் அங்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
அமெரிக்காவுடன் ஆன சுமூகமான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து. ரப்பானி நீடூழி வாழ்க என்பன போன்ற வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
இதற்கிடையே அதிபர் ரப்பானியின் எதிர்ப்பாளர்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். விமான நிலையத்தில் கூடியிருந்த திரளான மக்களை பார்த்து கையசைத்தபோது அவருக்கு எதிராக சிலர் கோஷமிட்டனர்.
நமது மக்கள் விழிப்புடன் உள்ளனர். அமெரிக்காவை வெறுக்கின்றனர்’’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பினர். மேலும், அதிபர் ஹசன் ரப்பானி மீது முட்டைகள் மற்றும் ஷூக்களை வீசினர்.
இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சுற்றி அரண் போன்றும், குடை போன்றும் நின்று பாதுகாத்தனர். அதனால் அவர் மீது அவை விழவில்லை. பின்னர், காருக்குள் உட்கார வைத்து அதிபர் மாளிகைக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.

No comments:
Post a Comment