Sunday, September 29, 2013

நடந்து முடிந்த வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் வடமாகாண தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது உணர்ச்சிமிகு வீரவசனப் பேச்சுக்களுக்கு இரையாகி அடிமைப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளனர்!!

Sunday, September 29, 2013
இலங்கை::நடந்து முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தல் களிலும் வடமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வடபுலத்துத் தமிழ் மக்கள் மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களது உணர்ச்சிமிகு வீரவசனப் பேச்சுக்களுக்கு இரையாகி அடிமைப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதைத் தெளிவாகக் காட்டுகிறது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் வெளியி டப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் எவ்வகையிலும் நடைமுறைக்குச் சாத்தியப்படாத, இலங்கை அரசிய லமைப்புச் சட்டக் கட்டுக்கோப்புக்களுக்கு முரணான பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இவை வெறுமனே தேர்தலில் வெற்றி கொள்ள மக்களை ஏமாற்றுவதற் காகவெனத் தயாரிக்கப்பட்டதாக அமைந்திருந்த நிலை யிலும் வடக்கு வாழ் தமிழர்கள் நம்பி ஏமாந்திருக்கிறார்கள்.

முன்னர் புலிகள் தமது விமானப் படை, தரைப்படை, கடற்படை எனப் போலியான இராணுவ பலத்தைக் காட்டி தமிழ் மக்களை ஏமாற்றியது போலவே வடபுலத்துத் தமிழ் மக்கள் முன்பாக தேர்தல் மேடைகளில் வீரவசனங்களைப் பேசி, விஞ்ஞாபனத்தை வெளியிட்டு தமிழ்க் கூட்ட மைப்பின் தலைவர்களும் இம்முறை தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

யுத்தம் முடிவிற்கு வந்து நான்கு வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல் எனச் சகல தேர்தல்களிலும் தமிழ்க் கூட்டமைப்பினர், சர்வதேசத்தி னூடாக இனப்பிரச்சினையைத் தீர்க்கத் தமக்கு ஆணை யைத் தருமாறே மக்களைக் கோரி வந்துள்ளனர்.

கடந்து வந்த நான்கு தேர்தல்களிலும் மக்களும் அவர் களது கோரிக்கைக்குச் செவிமடுத்து வாக்களித்து வந்துள்ள போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைக் காண அவர் களால் இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. அப்படி யிருந்தும் வடபுல மக்கள் இத்துடன் நான்காவது தடவை யாகவும் தம்மை வைத்து அரசியல் நடத்தும் தமிழ்க் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துள்ளனர். இந்த உண்மை இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அல்லது ஒரு வருடத் திற்குள் நிச்சயம் மக்களுக்கு வெளிப்படையாகவே தெரியவரும்.

தமிழ்த் தேசியம் எனும் பொய்யான உணர்வினை மக்க ளுக்கு ஊட்டி அதில் எவ்விதமான அக்கறையும் கொள் ளாது அடுத்த தேர்தலில் வெற்றிபெற புதிய புதிய வியூகங் களுடன் காத்திருக்கும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் களது மாயை வலைக்குள் இன்னமும் தமிழ் மக்கள் கட்டுண்டு கிடக்கும் பரிதாப நிலையினையே இப்போது நாம் வடக்கு கிழக்கில் காண்கின்றோம். இன்னும் எத்தனை காலத்திற்குத்தாள் இவ்வாறு மக்களை இந்தத் தமிழ்த் தலைவர்கள் ஏமாற்றப் போகிறார்களோ தெரியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் வடபுலத்துத் தமிழ் மக்கள் தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களால் ஏமாற்றப்படுவது நன்கு தெரிந்திருந்தும் தொடர்ந்தும் ஏமாறி வருவதன் மர்மம் புரியாத புதிராகவே உள்ளது.

இறுதியாக நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட் டியிட்ட தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழர் பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்ல தமக்குப் பலம் சேர்க்கும் வகையில் ஆணை வழங்குமாறு பகிரங்கமாகவே கோரி யிருந்தனர். மக்களும் வாக்களித்து அவர்களை வெற்றிபெற வைத்தனர்.
முடிவில் என்ன நடந்தது? அதன் தலைவர்கள் மாறி மாறி அமெரிக்கா, கனடா, இந்தியா என்று சென்று அங்குள்ள தமது குடும்ப உறவுகளைச் சந்தித்து குசலம் விசாரித்து, கூடிக்குலாவி வந்ததுதான் மிச்சம். இதற்காகவா மக்கள் ஆணை வழங்கியிருந்தார்கள்? அந்தப் பாராளு மன்றத் தேர்தல் நடைபெற்று நான்கு வருடங்களாகிவிட்டது. அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் இவர்கள் இதனையே தெரிவிப்பர், மக்களும் வாக்களிப்பர் என்பதாகவே நிலைமை உள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதேபோன்று அடுத்ததாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்ட போது தமது பகுதிகளைத் தாமே அபிவிருத்தி செய்யக் கிடைத்த அரிய சந்தர்ப்பம் என்று கூறி ஆணை வழங்குமாறு கேட்டார்கள். மக்களும் சரி வாக்களித்துப் பார்ப்போம் என வாக்களித்தார்கள். என்ன நடந்தது? எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சிறு குறுக்குப் பாதையைப் புனரமைக்கவோ, பாடசாலை ஒன் றைத் திருத்தவோ அல்லது ஒரு சிறு அரசாங்க கட்ட டத்தையோ கட்டவோ அவர்களால் முடியவில்லை. மாறாக பல பிரதேச சபைகளில் ஐந்து ரூபா பற்றுச் சீட்டு வழங்கும் பிரதேச சபைக்கான துவிச்சக்கர வண்டில் பாது காக்கும் நிலையத்தின் குத்தகையை தமது உறவு முறைக் காரர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக வருடாவருடம் தமது கட்சி உறுப்பினர்களுக்கிடையே (தொடர் பக். 06) முரண்பட்டுக் கொண்டு நிற்கிறார்கள். அதிலும் சாதிப்பாகு பாடு பார்த்து பிரிவினையைத் தோற்றுவிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மாகாண சபை தேர்தலில் நிறை வேற்றவே முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அவர்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதற்காக இம்முறை தமிழ்க் கூட்டமைப்பினர் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித் துள்ளனர்.

அவர் ஒரு திறமையான சட்டத்தரணி, உயர் நீதிமன்ற முன் னாள் நீதியரசர். சட்டங்கள் பலவும் தெரிந்தவர். நியாயமான தீர்ப்புக்களை வழங்கியவர். ஆனாலும் அவரும் கூட்டமைப் பினருக்கு ஏற்றாற் போல் பிரசாரப் பணிகளை கூட்டமைப்பின ரது பாணியிலேயே செய்து வெற்றியும் கண்டு அரசியல்வாதி யாகிவிட்டார். இவர்களால் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் உறுதி மொழிகளை இப்போது இவர்கள் எவ்வாறு நிறைவேற் றப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வடக்கில் உணர்ச்சிகரமான வீரவசனப் பேச்சுக்களுக்கு மக் கள் இன்னமும் செவிசாய்ப்பதனை நம்ப முடியாதுள்ளது. புலி களின் வீழ்ச்சியுடன் வடக்கு கிழக்கு மக்கள் விழித்திருப் பார்கள் என நினைத்திருந்தால் அவர்கள் இன்னமும் வெறும் கைகளால் முழம் போடுபவர்களையே நம்பிக்கொண்டிருக்கி றார்கள். அரசாங்கம் வடக்கு கிழக்கில் துரித கதியில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதை அப்பகுதி மக் கள் வரவேற்று இதுவரை காலமும் தாம் பட்ட துன்பங்களை மறந்திருக்கையில் தமிழ்க் கூட்டமைப்பினர் மீண்டும் அம்மக் களிடையே வீரவசனங்களைப் பேசி உணர்ச்சி அரசியலை நடத்த முயல்வது ஆரோக்கியமானதல்ல.

தமிழ்க் கூட்டமைப்பினர் தமது வெற்றியை தவறான பொய் ப்பிரசாரங்கள் மூலமான வழிமுறையில் ஈட்டியிருந்தாலும் அரசாங்கம் அவர்களைத் தம்முடன் இணைந்து பணியாற்ற வருமாறு அழைப்பு விடுத்திருப்பதானது அரசாங்கத்தின் பெரு ந்தன்மையைக் காட்டுகிறது. தமது வெற்றி இறுமாப்பில் தமிழ் மக்களுக்கு மீண்டுமொரு தடவை துரோகம் இழைக்காது இன ப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தமிழ்க் கூட்டமைப்பு இம்முறையாவது முன்வர வேண்டும்.
 
கனடா, அமெரிக்கா, இந்தியா, தென்னாபிரிக்கா அல்லது எந்த வொரு வெளிநாட்டிற்குச் சென்றாலும் இலங்கை அரசா ங்கத்துடன் பேசியே தீர்வினைக் காண வேண்டும் என்பதனை தமிழ்க் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது. அதனால் இனியா வது பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தம்மையும் இணைத் துச் செயற்படுவதுடன் அரசாங்கத்துடன் இதயசுத்தியுடன் பேசி இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண வேண்டும். இல்லையேல் மக்களை ஏமாற்றிப் பெற்றுக் கொண்ட மற்று மொரு ஆணை மீண்டுமொரு தடவை அவர்களுக்கு ஏமாற்ற த்தையே தருவதாக அமைந்து விடும். அதற்குப் பின்னரும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஏமாறுவார்கள் அல்லது ஏமாற்ற லாம் என்பது பகற்கனவாகி விடும். எனவே சிந்தித்துச் செயற் பட முன்வருமாறு தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுக் கின்றோம்.  

No comments:

Post a Comment