Sunday, September 29, 2013

பஷில் ராஜபக்ஷ அவர்களின் அழைப்பை ஏற்று கூட்ட மைப்பினர் நல்ல சமிக்ஞை காட்டணும்: பாபு சர்மா!

Sunday, September 29, 2013
இலங்கை::நடந்து முடிந்த வட மாகாண சபை தேர்தல் முடிவுகளை அடுத்து கூட்டமைப்புடன் இணைந்து செயற்படு வதற்கு தயார் என தெரிவித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ அவர்களின் அழைப்பை ஏற்று கூட்ட மைப்பினர் நல்ல சமிக்ஞையை வெளிப் படுத்துவதன் மூலம்
 
வடக்கு மாகாண சபையை வடக்கு வாழ் மக்களின் வளத்தை பெருக்கி நல்வாழ்வுக்கு உதவ இவ்வழைப்பை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் இந்து மத அலுவல்கள் இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
 
மேலும் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன்  அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அணுகி அரசியல் தீர்வுக்கு நல்ல முறையில் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். வெளிநாட்டு தீர்வுகளை எதிர்பார்ப்பதன் மூலம் தமிழர்களின் எதிர்காலம் சூனியமாகும் எனவும் பாபுசர்மா தெரிவித்தார். மேலும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி வட மாகாண சபையை நல்ல விதத்தில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment