Sunday, September 29, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை: அரசாங்கம்!

Sunday, September 29, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு நவனீதம் பிள்ளை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
அண்மையில் நவனீதம்பிள்ளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் சமர்பித்த வர்யமொழி மூல அறிக்கையை ஊடகங்கள் பிழையாக அர்த்தப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் உறுதிமொழிகளை அமுல்படுத்தினால் அதனை அடுத்த மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உள்ளடக்கப் போவதாகவே நவனீதம்பிள்ளை குறிப்பிட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பல பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கை விவகாரம் தொடர்பில் நவனீதம்பிள்ளைக்கு காலக்கெடு விதிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படக் கூடிய சாத்தியங்கள் எதுவும் கிடையாது என கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment