Sunday, September 29, 2013

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது!

Sunday, September 29, 2013
இலங்கை::இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.
 
இந்தியாவிற்கு அகதிகளாக சென்ற பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாடு திரும்ப நாட்டம் காட்டுவதில்லை என தெரிவித்துள்ளது. 102000 இலங்கை அகதிகள் இந்தியாவில் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் நாடு திரும்பு விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் 67435 இலங்கைக் குடும்பங்களும், உறவினர் வீடுகளில் 34757 குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர். அதிகமான இலங்கை அகதிகள் இருபது ஆண்டுகளுக்கு முன்னதாக  இந்தியாவிற்கு சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இவர்கள் இந்தியாவிற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் 3476 இலங்கை அகதிக் குடும்பங்களே ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் நாடு திரும்பியுள்ளன.

No comments:

Post a Comment