Sunday, September 29, 2013
இலங்கை::மன்னாரில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் அலுவலகத்தினுள் புகுந்த குழுவினர் அங்கு மேற்கொண்ட தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் அலுவலகத்தில் இருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர் சாள்ஸ் அவர்கள் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற போதும், அவரது வெற்றியை தடுக்கும் நோக்கில் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் செயற்பட்டதாக குற்றம் சாட்டி சாள்ஸ்சின் ஆதரவாளர்கள் நேற்று முற்பகல் செல்வம் எம்.பியின் அலுவலகத்தினுள் நுழைந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கியிருக்கின்றனர்.
அதனைத் தடுக்க முற்பட்ட ஒருவர் மீது நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். மன்னாரில் (புலி)கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு தரப்பினரே குறித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment