Sunday, September 29, 2013
இலங்கை::இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை, நீர்கொழும்பு, களுத்துறை ஆகிய பகுதிகளில் இருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களே தற்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளார்.
இந்திய கடல் எல்லைக்குள் அ
த்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த மீனவர்கள் விரைவில் விடுவிக்க முடியும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நம்பிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 41 பேரும் இந்திய கரையோர பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தவிர மேலும் தமிழக மீனவர்கள் பலர் தொடர்ந்தும் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment