Monday, September 30, 2013
புதுடெல்லி::இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் இந்திய தலைவர் யாசின்பட்கல், அவனது கூட்டாளி அசதுல்லா அக்தர் ஆகியோர் கடந்த மாதம் இந்திய நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குண்டு வைக்கவும், நாட்டின் அமைதியை கெடுக்கவும் பாகிஸ்தான் உளவுத்துறையின் ஆலோசனைப்படி இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். கைதான இந்த தீவிரவாதிகள் 2 பேரும் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் பிடியில் உள்ளனர். அவர்கள் நடத்தி வரும் அதிரடி விசாரணையின்போது யாசின் பட்கல், அசதுல்லா அக்தர் ஆகியோர் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:–
இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்வதற்கு பாகிஸ்தான் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகித்து இருக்கிறது.
டெல்லி ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு போன்று நாடு முழுவதும் ஏராளமான குண்டு வெடிப்புகளை நடத்த இந்தியன் முஜாகிதீன் அமைப்பு திட்டமிட்டு செயல்பட்டது. இதற்கான வெடிகுண்டுகள் தயாரிக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் டெல்லி, மங்களூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டன. இதற்கு ஆகும் செலவு மற்றும் நாடு முழுவதும் சென்று தீவிரவாத திட்டங்களை வகுப்பது போன்றவற்றுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு மூலம் இந்த அமைப்புக்கு பணம் வழங்கப்பட்டது.
இதற்கு இந்தியா, நேபாளம், சவுதி அரேபியா, துபாய் ஆகிய இடங்களில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புகள் உதவியாக இருந்துள்ளன. இதற்காக யாசின் பெயரில் பாங்கியில் தனி கணக்கு தொடங்கப்பட்டது. இது பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பில் இருந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு வரை ரூ.24 கோடியை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு பெற்றுள்ளது. இந்த பணம் கராச்சியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்புக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. மூலம் கொடுக்கப்பட்டது. இந்த பணம் பாகிஸ்தானில் உள்ள இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இக்பால் பகத், ரசாக் பகத் மற்றும் அவர்களது குழுக்கள் மூலம் இந்தியா வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment