இலங்கை::புலிகளுடன் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்ட சமாதான உடன்படிக்கை வரலாற்று சிறப்பு மிக்கது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் (புலிகளின் ஆதரவு பினாமி) விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ரணில் விக்ரமசிங்க சமாதான
உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவின் இந்த நடவடிக்கையானது மிகவும் தைரியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லாள மன்னருக்கும் துட்டகைமுனு மன்னனனுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை விடவும் பிரபாகரன் - ரணிலுக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை வலுவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரபாகரனினால் முன்வைக்கப்பட்டிருந்த 26 அம்ச சுயாட்சி நிர்வாக அலகு குறித்த யோசனையில் குறிப்பிடப்பட்ட சில விடயங்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் சுயாட்சி நிர்வாக அதிகாரம் குறித்த ஆவணத்தை சிங்களத்தில் மொழி பெயர்ப்பு செய்யக் கூடிய அவகாசத்தை தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்கள் வழங்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளதாகவும், பிரபாகரன் அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு நிகரான ஆவணமொன்றையே தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தற்போது சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment