Sunday, September 29, 2013
லண்டன்::இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா திருமணம் உலகளவில் மிக விமரிசையாக நடந்தது. திருமணத்துக்கு பிறகு சமூக சேவையில் ஆர்வம் காட்டி மக்களுடன் சகஜமாக பழகினார் டயானா. இதனால் ராணி குடும்பத்தினர் அதிருப்தி அடைந்தனர். எனினும், டயானா தனது விருப்பப்படி செயல்பட்டார். இதனால் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகையாளர்களும், புகைப்படக்காரர்களும் பின்தொடர்ந்து சென்று அவரது ஒவ்வொரு அசைவையும் படம் பிடித்தும், எழுதியும் தள்ளினர். இந்நிலையில், கடந்த 1997ம் ஆண்டு பாரிசில் நடந்த கார் விபத்தில் மர்மமான முறையில் டயானா பரிதாபமாக இறந்தார்.
அது விபத்தா, கொலையா என்ற சர்ச்சை இன்று வரை தீராமல் உள்ளது. இந்நிலையில், டயானா பேசி பதிவு செய்த டேப் ஒன்று கிடைத்துள்ளதாக பரபரப்பு செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் Ôகுளோப்Õ என்ற இதழ் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது. Ôரகசிய டேப்பில் டயானா குரல் பதிவாகி உள்ளது. அதில் இளவரசர் வில்லியத்துக்கும் அவரது வருங்கால மனைவிக்கும் (டயானா இறக்கும் போது வில்லியமுக்கு அப்போது திருமணம் நடைபெறவில்லை) பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். தனது மூத்த மகன் வில்லியமுக்கு அமைய போகும் மனைவி அழகாகவும், தன்னிச்சையாக செயல்படும் திறமைப்படைத்தவராக இருக்க வேண்டும் என்று டயானா குறிப்பிட்டுள்ளர்Õ என்று குளோப் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், டயானாவுக்கு ஏதோ அசம்பாவிதம் நடக்க போவதை முன்கூட்டியே அவர் அறிந்திருந்ததாகவும், அதனால் தனது மகன்களை வளர்க்கவும், அவ்வப்போது அறிவுரை வழங்கி வழிநடத்தவும் தான் இருக்க மாட்டோம் என்பதை உணர்ந்து ரகசியமாக டேப்பில் பேசி பதிவு செய்துள்ளார் என்றும் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் டெய்லி ஸ்டார் இணைய தளமும் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
டயானா மரணத்துக்கு பிறகு இளவரசர் வில்லியம், கேத் மிடில்டனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கேத் மிடில்டனை டயானா சந்தித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment