Monday, July 29, 2013

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் சார்பில் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!

Monday, July 29, 2013
இலங்கை::நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் சார்பில் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்  எழிலனின் மனைவி ஆனந்தி போட்டியிடவுள்ளதாக  (புலி)கூட்டமைப்பு தெரிவித்துள்ளது!
 
இந்த தேர்தலில் (புலி)கூட்மைப்பின் சார்பில் மூன்று பெண்கள் போட்டியிடவுள்ளனர்.

ஆவர்களில் இருவர்  தமிழரசுக்கட்சியின் சார்பிலும் மற்றவர்  தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பிலும்  போட்டியிடவுள்ளார்.

இதில் முன்னாள் புலி போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலன் ஆகியோரும் போட்டியிடவுள்ளனர்.

36 பேரைக்கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 03 பெண்களும் உள்ளடங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது..
 
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும், கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கிளி.கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆசிரியை திருமதி வினுபானந்தகுமாரி கேதுரட்ணமும், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முல்லை.மந்துவில் அரசரட்ணம் வித்தியாலய உபஅதிபர் திருமதி மேரிகமலா குணசீலனும் போட்டியிடுகின்றனர்.
 
இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் மாவை.சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட தலைமைச் செயலகத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
 
இதன்போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி, ஈ.பி.ஆர்.எல்.எப் சுரேஸ் பிறேமச்சந்திரன், புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
 
36 பேரைக் கொண்ட வடமாகாண சபைக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் 51 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 48 ஆண்களும், 3 பெண்களும் அடங்கியுள்ளனர்.

புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை!

Monday, July 29, 2013
இலங்கை::புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார்.
 
தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள்  புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஏமாற்றிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
குறித்த மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட தருணத்தில் எந்தவொரு தரப்பினரும் குரல் கொடுக்கவில்லை எனவும் தற்போது முதலைக் கண்ணீர் வடிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலி ஆதரவாளர்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதே தமது முதன்மைக் கடமை என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுக்காக எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கவில்லை எனவும் அவ்வாறு குரல் கொடுத்தமைக்கான ஓரு ஆதாரத்தையேனும் சமர்ப்பிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
 
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயாதீனமான தீர்மானங்களை எடுத்திருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்குமாறு எவரும் குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்யுள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சிறுவர் போராளி பிரச்சினைகளை எழுப்ப உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் ஒரு சிறுவர் கடத்தல் சம்பவமேனும் இடம்பெறவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாணத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட எந்தவொரு நிதியும் வீண் விரயம் செய்யப்படவில்லை: ஜி. ஏ. சந்திரசிறி!

Monday, July 29, 2013
இலங்கை::அபிவிருத்தி மற்றும் மக்களின் நலன் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சகல நிதிகளும் மக்கள் பயன்படும் வகையில் முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். எந்த ஒரு மாகாண சபைகளும் செய்யாத அளவுக்கு ஆளுநருக்கு உட்பட்ட அங்கீகாரத்தின் மூலம் தற்துணிவோடு மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பாரிய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை துரதமாக மீளக்கட்டியெழுப்ப அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதுடன், இந்த மாகாணத்தில் வாழும் அப்பாவி மக்களின் நலன் கருதி வடக்கின் வசந்தம் வேலைத்திட்டம் மற்றும் வட மாகாண சபையின் ஊடாக கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதிக்குள் சுமார் 2000 பில்லியன் ரூபா செலவில் பல்வேறு பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கத்தின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வட பகுதி மக்களின் நலனை கருத்திற்கொண்டு கல்வி, சுகாதார, விவசாய, கலை, கலாசார, நீர்ப்பாசன, கடற்றொழில், புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள்குடியேற்றம், வாழ்வாதார, பொருளாதார, மின்சார, வீதி, போக்குவரத்து போன்ற பல்வேறு துறை பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்கு மேற்படி 2000 பில்லியன் ரூபா நிதியும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த நான்கு ஆண்டுகால பகுதிக்குள் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வட பகுதி இளைஞர், யுவதிகளுக்கு அரச துறையில் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
 
மாகாண சபை மற்றும் மத்திய அரசின் ஊடாக சமுர்த்தி, கல்வி, சுகாதார, நீர்ப்பாசன போன்ற பல்வேறு துறைகளில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
 
கடந்த 30 வருடங்களுக்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக வடக்கில் மிகவும் அமைதியான சூழல் காணப்படுவதுடன், மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 
வட மாகாண நிதியை பயன்படுத்தி எந்த ஒருவரும் வெளிநாட்டு பயணங் களையோ, வீணான செலவுகளையோ கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதிக்குள் மேற்கொள்ளவில்லை என்பதை மாகாண ஆளுநர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்வதாக அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
வீணான செலவுகள் மேற்கொள்ளப் படாததனால் சகல நிதிகளும் வடபகுதி மக்களுக்கே முற்றுமுழுதாக பயன்படுத் தப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.
 
யுத்தத்தின் போதும் வட பகுதி மக்களுக்கான சகல வசதிகளையும் செய்து கொடுத்த அரசாங்கம் யுத்தத்திற்கு பின்ன ரும் கூடுதல் கரிசனையுடன் தொடர்ந்தும் செயற்பட்டு வந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை வட மாகாணத்திலுள்ள சுமார் 3500 மாணவ, மாணவிகளுக்கு தமது கல்வி நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் ஒரு வருட கால புலமைப் பரிசில் வழங்கும் திட்டத்தை தான் முதற் தடவையாக அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்த அவர், இதற்கான ஆளுநரின் நிதியிலிருந்து 35 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தலா 500 பேர் வீதம் 2500 மாணவர்களும், மீள்குடியேற்றப்பட்ட மணலாறு மற்றும் தீவு பகுதிகளிலிருந்து தலா 500 பேர் என்ற வீதத்தில் 1000 மாணவர்களும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
 
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1500 மாணவர்களுக்கு இந்த புலமைப் பரிசில் வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய மாண வர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் திகதி க்கு முன்னர் வழங்கப்படும் என்றும் ஆளுநர் சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.

Sunday, July 28, 2013

வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்க முடியாது: கூட்டமைப்பின் கோரிக்கை நிராகரிப்பு!.

Sunday, July 28, 2013
இலங்கை,வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவுமில்லை. இனிமேலும் ஈடுபடாது. அதுமட்டுமன்றி வடக்கில் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கவேண்டிய தேவையும் இல்லை." இவ்வாறு இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நேற்றுத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான். இதற்கமைய அந்தத் தேர்தல் நடவடிக்கைகள் சிவில் அதிகாரிகளாலும் சட்ட நடவடிக்கைகள் பொலிஸாராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இராணுவத்தின் தலையீடு ஒருபோதும் இல்லை. இவ்வாறான நிலையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம் மீது குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது பெரும் வேதனையளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் தலையீடுகள் இடம்பெற்று வருகின்றன என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமனத்திலும் இராணுவத்தினர் தலையிடுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டிருந்த சம்பந்தன், இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து வினவியபோதே இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் இராணுவம் ஒருபோதும் ஈடுபடவில்லை. இனிமேலும் ஈடுபடாது. வடமாகாணத்தை தீவிரவாதிகளிடமிருந்து மீட்டு, அங்கு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததே இராணுவம்தான்.
இதற்கமைய வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளில் சிவில் அதிகாரிகளும், சட்ட நடவடிக்கைகளில் பொலிஸாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயங்களில் இராணுவம் ஒருபோதும் தலையிடுவதில்லை. இவ்வாறானநிலையில் வடக்குத் தேர்தல் நடவடிக்கைகளிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் நியமன விவகாரங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது என்பது பொய்க்குற்றச்சாட்டாகும். இதனை நாம் அடியோடு நிராகரிக்கிறோம். இதுதொடர்பில் தகவல்கள் கிடைத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருக்கலாமே. ஆனால், பொலிஸில் அவ்வாறான முறைப்பாடுகள் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை.

வடக்கில் சட்ட அமுலாக்கம் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பொலிஸார்தான் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டோம். வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மக்களுக்கான சேவையை மட்டுமே இராணுவம் செய்கின்றது. அதுமட்டுமன்றி, பிரிவினைவாதிகள் உள்ளிட்ட வேறு குழுக்களின் அச்சுறுத்தல்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இராணுவத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது எமக்குப் பெரும் வேதனையளிக்கிறது என்றார் ருவண் வணிகசூரிய.

Wednesday, July 17, 2013

ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை விபரங்களை பேரறிவாளனுக்கு வழங்க தகவல் கமிஷன் உத்தரவு!

Wednesday, July 17, 2013
புதுடெல்லி::முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் 21-5-1991 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன் ஆகிய 2 விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டன.

ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு, அவரை கொல்வதற்காக தீட்டப்பட்ட சதி திட்டம் உள்ளிட்ட பல அம்சங்களை இவ்விரு கமிஷன்களும் விசாரித்தன.

இந்த படுகொலை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. மேல் முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டும் இந்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இவர்களின் கருணை மனுக்களை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் 2011ம் ஆண்டு தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், 'ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் நடத்திய விசாரணையின்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், விசாரணை விபரங்கள், அரசு எடுத்த நடவடிக்கை குறிப்புகள் ஆகியவற்றை வழங்க வேண்டும்' என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் மனு செய்தார்.

இந்த மனுவினை தகவல் அறியும் உரிமை கமிஷனர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தார்.

பேரறிவாளனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரம் அடிப்படையிலான இந்த மனுவிற்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சகம், இதுதொடர்பான அறிக்கைகள் தங்களிடம் இல்லை எனக்கூறி தகவல் அளிக்க மறுத்துவிட்டது.

ஜெயின் கமிஷன் விசாரணையின் சில அறிக்கைகள் மட்டும் தங்களிடம் இருப்பதாகவும், வர்மா கமிஷன் அறிக்கை தொடர்பான எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்றும் உள்துறை அமைச்சகம் கைவிரித்து விட்டது.

இந்நிலையில், மேற்படி தகவல்களை தரும்படி கேட்டு மத்திய தகவல் கமிஷனர் சுஷ்மா சிங்கிடம் பேரறிவாளன் மீண்டும் மனு செய்தார்.

இதனையடுத்து, தங்களிடம் இதுதொடர்பாக 918 கோப்புகள் இருப்பதாக தேசிய ஆவண காப்பகம் கூறியது.

இந்நிலையில், இந்த தகவல்களை பேரறிவாளனுக்கு வழங்கலாமா? என்பது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீட்டு ஆணையத்தின் மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு தொடர்பான விவகாரங்களை கையாளும் துறைக்கு தகவல் கமிஷனர் சுஷ்மா சிங் உத்தரவிட்டுள்ளார்.

கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தனது வழக்கு தொடர்பான விசாரணையைப் பற்றி அறிந்துக்கொள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என அந்த உத்தரவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பாடுகள் தொடர்பாக இந்தியாவுக்கு இலங்கை விளக்கம்!

Wednesday, July 17, 2013
இலங்கை::அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பாடுகள் தொடர்பாக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரும் தெரிவுக்குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.ஆர். சின்ஹாவுக்கு நேற்று முன்தினம் தெளிவுபடுத்தினார்.

உயர்ஸ்தானிகர் வை.ஆர். சின்ஹா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை அவரது அமைச்சில் நேற்று முன்தினம் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சமயமே இத்தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறினார். இச்சந்திப்பின் போது உயர் ஸ்தானிகர், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நியமிக்கப்பட்டிருக்கும் தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.

இவ்வேளையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்திற்கான திருத்தங்களை முன்வைப்பதற்கே இத்தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது.  எனினும் இத்தெரிவுக்குழு அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்திற்கான திருத்தம் தொடர்பாகவும் தேசிய நல்லிணக்கம் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தி முழுமையான தேசிய ஒருங்கி ணைப்பை எய்துவதற்கான சிறந்த இடமாகவும் வாய்ப்பாகவும் விளங்கு கின்றது. இத்தெரிவுக்குழுவில் சகல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களது கருத்துக்களையும், யோசனைக ளையும் திறந்த அடிப்படையில் முன்வைப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இத்தெரிவுக்குழுவை அர்த்தபூர்வமான முடிவை நோக்கிக் கொண்டு செல்ல அரச தரப்பு உச்ச பங்களிப்பை நல்கி வருகின்றது. என்றாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், பிரதான எதிர்க்கட்சியும் இத்தெரிவுக்குழுவுக்கு இதுவரையும் எதுவித சாதகமான பிரதிபலிப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஆயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், பிரதான எதிர்க்கட்சியும் இத்தெரிவுக்குழுவில் எதிர்காலத்தில் பங்குபற்றுவர் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இத்தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமை தொடர்பான சகல விபரங்களை யும் குழுவின் தலைவர் என்ற அடிப்படை யில் ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் உயர் ஸ்தானிகராலய அரசியல் விவகார செயலாளர் ஆர். ரவீந்திரவும் கலந்து கொண்டார்.

புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி: குணதாஸ அமரசேகர!

Wednesday, July 17, 2013
இலங்கை::இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் ஆலோசனையும் சம்பந்தனின் அரசியல் வியூகமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடமகாண சபையின் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியதன் பின்னணியாகும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாஸ அமரசேகர குற்றம் சாட்டினார்.

சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படக்கூடிய விக்னேஸ்வரனை நியமித்ததன் மூலம் கூட்டமைப்பு தனது விடுதலைப்புலி பிரதிநிதித்துவத்தை மறைக்க முனைந்துள்ளதாகவே அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக டாக்டர் குணதாஸ அமரசேகர மேலும் தெரிவித்ததாவது,

மாவை சேனாதிராஜா முழுக்க முழுக்க புலிகளின் ஆதரவாளர்.

இதனை அனைவரும் அறிவார்கள்.

விசேடமாக இந்தியாவுக்கு இது நன்றாகத் தெரியும்.

அத்தோடு இலங்கையில் தனித் தமிழீழம் உருவாவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது.

எனவே மாவை சேனாதிராஜாவை வடமாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக மாவையை நிறுத்துவதை இந்தியா விரும்பாது.

தேசிய நல்லிணக்கம்

அதேவேளை, விக்னேஸ்வரனின் இரண்டு மகன்மாரும் சிங்களப் பெண்களையே மணந்துள்ளனர்.

இது மட்டுமல்லாது உயர் பதவி வகித்த படித்தவர், இதனை சர்வதேசத்திற்கு கூட்டமைப்பு எடுத்துக்கூறும்.

விக்னேஸ்வரனால் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் படித்த புத்திஜீவி சர்வதேசத்துடன் ஒத்துப்போகக் கூடியவர் என்பதையும் கூட்டமைப்பினால் எடுத்தியம்ப முடியும்.

இதுதான் சம்பந்தனின் தந்திரமான வியூகம்.

எனவே இந்தியாவின் உறவுப் பிரிவான ‘‘றோ’’ வின்ஆலோசனையும் சம்பந்தனின் தந்திரமான அரசியல் வியூகமுமே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது பயங்கரமான நாட்டுக்கு ஆரோக்கியமற்ற சூழ்நிலையாகும்.

எனவே, ஜனாதிபதி இதனை தடுத்து நிறுத்த அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் பதவியோ அல்லது வெளிநாட்டு தூதுவர் பதவியையோ வழங்கி முதலமைச்சர் வேட்பாளர் போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

வடக்கு, கிழக்கிற்கு ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு!

Wednesday, July 17, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
இதற்காக ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
 
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
 
அதன் பிரகாரம் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
 
இந்த திட்டத்தின் கீழ் 1,395 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகளும் 1,640 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளும் வழங்கப்படவுள்ளன.

புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் : சம்பிக்க ரணவக்க!

Wednesday, July 17, 2013
இலங்கை::புலிகளின் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் மறு அவதாரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் ஆவார். இந்தியா உட்பட சர்வதேசத்துடன் இணைந்து தமிழீழத்திற்கான இரண்டாவது போராட்டத்தை கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் அதிகாரங்கள் வலுவிழக்கச் செய்யப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் அனைத்து பெளத்த மக்களும் நாமும் உள்ளோம். ஆனால் தற்போது காணப்படுகின்ற சூழலானது பிரிவினைவாதிகளுக்கு சாதகமாகவே காணப்படுகின்றது. இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பும் கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்:-

வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது இதனை விக்னேஸ்வரனும் ஏற்றுக்கொண்டு பிரிவினை வாதத்திற்கு துணை போன கூட்டமைப்பினருடன் இணைந்து தமிழீழ போராட்டத்திற்கு தலைமை தாங்க முன் வந்துள்ளர்.  புலிகளீன் ஆலோசகரான அன்டன் பாலசிங்கத்தின் இழப்பை நிரப்புவதற்காக விக்னேஸ்வரனை கூட்டமைப்பு தெரிவு செய்துள்ளதாகவே தெரிகின்றது.

ஓய்வு பெற்ற உயர் நீதமன்ற நீதியரசர் ஒருவர் இவ்வாறு பிரிவினைவாதிகளுடன் இணைந்துள்ளார் என்றால் அவரது முன்னைய காலப் பகுதி மற்றும் பணிகள் தொடர்பிலும் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன. எவ்வாறாயினும் வடக்கு மற்றும் கிழக்கையும் ஒன்றிணைத்து மாகாணத்தில் வரதராஜப் பெருமாள் செயற்பட்டதை விட மிகவும் ஆபத்தான சூழலே எதிர்வரும் நாட்களில் வடமாகாணத்திலும் ஏற்படப் போகின்றது.

ஏனெனில் சி.வி. விக்னேஸ்வரன் போன்ற சட்டம் நன்கு தெரிந்த ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வடக்கில் முதலமைச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டால் அன்று தொடக்கம் இலங்கைக்கு தலைவலி ஆரம்பித்து விடும். அவ்வாறானதொரு நிலையே ஏற்படப் போகின்றது. தமிழ்த்தேசியக்கூட்மைப்பின் தலைவர் சம்பந்தன் நன்கு ஆராய்ந்த பின்னரே மாவை சேனாதிராஜாவிற்கு முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாது சி.வி. விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளார். இவர்களின் நோக்கம் மத்திய அரசுடன் வடமாகாணத்தில் மோத வேண்டும். அதற்கு பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற அதிகாரங்களை முழு அளவில் சட்ட ரீதியாக பெற்றுக்கொண்டு தனி தமிழீழ ஆட்சிக்கான அடித்தளமே இன்று இடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியா மற்றும் சர்வதேச பிரிவினைவாத புலி ஆதரவாளர்களும் உள்ளார்கள். எனவே அரசாங்கம் உண்மையான சூழலைப் புரிந்துகொண்டு வடமாகாண சபை தேர்தலுக்கு முன்னர் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களைக்கொண்டு அதிகாரங்களை வலுவிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் ஏற்படும் ஆபத்துக்களுக்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும்.

ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டில் எவ்விதமான மாற்றமும் இல்லை. தேசப்பற்றுள்ள அனைத்து மக்களும் எம்முடன் ஒன்றிணைந்தே உள்ளார்கள். வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தனி தமிழீழம் உருவாவதை தடுக்க தேவையான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம். அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் உயிர் கொடுப்பதாகவே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அன்டன் பாலசிங்கத்தின் அவதாரத்தை இன்று சி.வி. விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இதனையும் தோல்வியடையச் செய்ய வேண்டும் எனக் கூறினார்.

அரசியல்வாதி அல்லாத ஒருவரை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியுள்ளதன் மூலம் கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியில் பிரச்சினைகளும் பலவீனமும் இருப்பது தெளிவாகியுள்ளது: தினேஷ் குணவர்த்தன!

Wednesday, July 17, 2013
இலங்கை::அரசியல்வாதி அல்லாத ஒருவரை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியுள்ளதன் மூலம் கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியில் பிரச்சினைகளும் பலவீனமும் இருப்பது தெளிவாகியுள்ளது. அதனால்தான் மக்களை கவரும் நோக்கில் கூட்டமைப்பு அரசியல்வாதி அல்லாத ஒருவரை களமிறக்கியுள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை நாம் அறியவில்லை. எவ்வாறெனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வழங்குவதற்கு ஆளும் கட்சி எதிர்பார்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடுவதற்கும் சுதந்திரமாக பிரசாரம் செய்வதற்குமான ஜனநாயக சூழலை எமது அரசாங்கமே ஏற்படுத்தியது. வடக்குத் தேர்தல் நடைபெறுவதானது ஜனநாயகத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்குத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் வட மாகாணத்தில் மொத்தம் 36 உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

அரசியல்வாதி அல்லாத ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் பலவீனமாகியுள்ளதும் பிரச்சினைகளுக்குள் சிக்கியிருப்பதையும் உணர முடிகின்றது. வடக்குத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக அரசியல்வாதி ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு கூட்டமைப்பு பலவீனடைந்துள்ளது.

அதனால்தான் அரசியல்வாதி அல்லாத ஒருவரை தேர்தலில் களமிறக்கி மக்களை கவர முயற்சிக்கின்றனர். விக்னேஸ்வரன் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை எமக்குத் தெரியாது. எவ்வாறெனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியொன்றை வழங்குவதற்கு ஆளும் கட்சி எதிர்பார்க்கின்றது. அரசாங்கத்தை பொறுத்தமட்டில் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கியுள்ளோம்.

அந்த வகையில் தற்போது வடக்கில் புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கணிசமான மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். சில உள்ளூராட்சிமன்றங்களை நாங்கள் வெற்றிகொண்டோம். சிலவற்றில மிக அருகிலேயே தோல்வியடைந்தோம்.

தற்போதைய நிலைமையில் வடக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. நாட்டில் மிக வேகமான அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கிலேயே இடம்பெறுகின்றன. எனவே மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த மக்களுக்கு எமது அரசாங்கமே ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது.

அந்த வகையில் வடக்குத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டமைப்புக்கு பாரிய ஆஆரோக்கியமான போட்டியை வழங்கும் என்றார்
 
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Wednesday, July 17, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சியினால் முன்வைக்கப்பட்ட இரண்டு நிபந்தனைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
வடக்கு மாகாண
சபைத் தேர்தல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நிபந்தனைகளை விதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இராணுவத்தினரை முகாம்களுக்கு மட்டும் வரையறுத்தல் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
 
எனினும், வடக்கில் பக்கச்சார்பற்ற தேர்தலை நடாத்துமாறும், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுமாறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
 
858  புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை விடுதலை செய்யத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
 
இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலின் போது பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவசர நிலைமைகளின் போது தேவை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
 
தேசியப் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொட பெல்ஜியத்தில்!

Wednesday, July 17, 2013
இலங்கை::காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொட பெல்ஜியத்தில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை ஜே வீ பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
 
ப்ரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம் பெற்ற போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான வாக்குமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோவிடம் நேற்றைய தினம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இதனிடையே, பிரான்சில் வசிக்கும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன ப்ரகீத் எக்னெலி கொடவை காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோ நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க கோரி தமிழ்நாடு முழுவதும் 8ம் தேதி (புலி ஆதரவு) டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம்!

Wednesday, July 17, 2013
சென்னை::இலங்கை அரசமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், மத்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்பதை, வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அடுத்த மாதம், 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, (புலி ஆதரவு) டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில், "டெசோ' கூட்டம் நேற்று நடந்தது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண, 1987ல் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. ராஜிவ், ஜெயவர்த்தனேவும், கையெழுத்திட்ட, அந்த உடன்பாட்டின்படி, மாகாண கவுன்சிலர்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழி வகை செய்யும் வகையில், இலங்கை அரசியல்அமைப்புச் சட்டத்தில், 13வது திருத்தம் செய்யப்பட்டது.

தற்போதைய ராஜபக்ஷே அரசு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்த, 13வது சட்டத் திருத்தம், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு, முழு அரசியல் தீர்வாக அமையாது. இருப்பினும் தற்காலிகத் தீர்வாக, ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என, டெசோ அமைப்பு கருதுகிறது.
 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், மத்திய அரசு பங்கேற்கக் கூடாது.தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, "டெசோ' சார்பில், அடுத்த மாதம், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கூட்டத்தில் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

புத்தகயா வெடிப்பு: 2 தீவிரவாதிகள் அடையாளம் தெரிந்தது!

Wednesday, July 17, 2013
புதுடெல்லி::புத்தகயாவில் குண்டுவெடித்த 2 தீவிரவாதிகள் யார் என்று அடையாளம் தெரிந்தது என்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகயா கோயிலில் தீவிரவாதிகள் தொடர்குண்டு வெடித்தனர். இதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். குண்டுவெடித்தவர்கள் பற்றி துப்புக்கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இந்தநிலையில் புத்தகயாவில் குண்டுவெடித்த தீவிரவாதிகள் 2 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது என்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர்களில் ஒருவர் பெயர் வாஹாஸ் என்ற அகமது. இவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துகொண்டு நாசவேலையில் ஈடுபட்டு வந்தான். மற்றொருவன் பெயர் அசதுல்லா அஹ்தர் ஹத்தி என்ற தாப்ரெஜ். இவன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்துகொண்டு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு மும்பையில் குண்டுவெடித்தனர். இவர்களை போலீசார் கைது செய்வதற்கு முன்பு தப்பிவிட்டனர்.
 
இவர்கள் இருவரும் மும்பையில் குண்டுவெடிக்க செய்த மாதிரியே கடந்த 2012-ம் ஆண்டு புனேயிலும் கடந்தாண்டு டெல்லியிலும் குண்டுவெடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதேசமயத்தில் புத்தகயாவில் இவர்கள் 2 பேரும் குண்டுவெடிக்க செய்துள்ளனர் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றனர் என்று தீவிரவாதி சயீது மெஹ்பூல் தெரிவித்துள்ளார்.
 
இவன் புனே குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகளில் இந்த இரண்டு தீவிரவாதிகளுக்கு மட்டும்தான் தற்போது குண்டுகளை வெடிக்கச் செய்ய தெரியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் என்கவுண்டரிலும் தீவிரவாதி ஹத்திக்கு தொடர்பு உண்டு. கடந்த 2006-ம் ஆண்டு ஒளரங்காபாத்தில் ஆயுத குவியல் பறிமுதல் செய்யப்பட்டதில் வாகாஸூக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். மும்பை,புனே,புத்தகயா ஆகிய இடங்களில் வெடிக்காத டெடோனேட்டர்களில் உள்ள வெடிமருந்து பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தன என்றும் அந்த உயரதிகாரி மேலும் கூறினார்.:

யுத்த வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “விக்ரம சம்மான” பதக்கம் அணிவித்து கௌரவிப்பு!

Wednesday, July 17, 2013
இலங்கை::மனிதாபிமான நடவடிக்கைகளின் போது தமது உயிரைப் பணயம் வைத்து முன்னேறிச் சென்று, பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கும் முயற்சியில் வெற்றி கொண்டு, சிறந்த சேவையாற்றிய யுத்த வீரர்களுக்கு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் “விக்ரம சம்மான” பதக்கம் அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (ஜூலை 15) அலரி மாளிகையில் இடம் பெற்றது.
 
முப்படைகளையும் சேர்ந்த 19,158 படைவீர்ர்கள் பதக்கங்கங்ளைப பெறத்தகுதி பெற்றிருந்தனர். அவர்களுள் தரைப்படையைச் சேர்ந்த 147 வீரர்களுக்கும், கடற்படையைச் சேர்ந்த 43 வீரர்களுக்கும், விமானப்படையைச் சேர்ந்த 26 வீரர்களுக்குமாக 216 வீரர்களுக்கு ஜனாதிபதியவர்களால் வைபவரீதியாக பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன.
 
ஜனாதிபதியவர்கள் முதலில் படைகளின் தளபதிகளுக்கு பதக்கங்களை அணிவித்தார். இப்பதக்கங்களுள் 156 விக்ரம விபூசன விருதும், 2232 ரன விக்ரம பதக்க விருதும், 16,770 ரனசூர பதக்க விருதும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
இந்நிகழ்வின்போது பிரதமர் கௌரவ டீ.எம் ஜயரத்ன, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு. கோடாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரிகள், முப்டைத்தளபதிகள்,பொலீஸ் மா அதிபர் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். 

Tuesday, July 16, 2013

ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற குழுவொன்று இலங்கைக்கான ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளது!

Tuesday, July 16, 2013
இலங்கை::ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற குழுவொன்று நேற்று இலங்கைக்கான ஒரு வாரகால உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய காரியாலயம் தெரிவித்துள்ளது.
 
இந்த குழுவுக்கு தென்காசிய உறவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழுவின் தலைவர் ஜீன் லெம்பர் தலைமைதாங்குகிறார்.
ஐரோப்பிய நாடாளுமன்ற குழு, அரசாங்க தரப்பினர், எதிர்கட்சியினர் மற்றும் பிற அரசியல் கட்சி பிரதிநிதிகளை எதிர்வரும் நாட்களில் சந்திக்கவுள்ளனர்.
 
எதிர்வரும் உத்தேச வடமாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்ற குழுவின் விஜயம் அமைந்துள்ளது.

 

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார்: அரசாங்கம்!

Tuesday, July 16, 2013
இலங்கை::பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர்
சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
இதேவேளை, பிரித்தானியாவின் சார்பில் யார் பங்கேற்பார்கள் என்பது பற்றிய இறுதித் தீர்மனம் இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளும் தங்களது பிரதிநிதிகளை இலங்கை அமர்வுகளுக்கா அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் நிலைமைகளை நேரில் கண்டறிவதற்கு இந்த அமர்வு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கெல்லம் மெக்ரேவுக்கு உந்து சக்தி கொடுக்கும் சிறிதரன் - மங்கள மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்: கெஹெலிய ரம்புக்வெல்ல!

Tuesday, July 16, 2013
இலங்கை::அண்மையகால வரலாற்றில், தாய் நாட்டுக்கு எதிரான பயங்கரமான சவாலை, வெற்றிக்கொண்டு, நாட்டுக்கு சுதந்திரத்தை உரித்தாக்கி கொடுத்த ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும் எனக் கூறும் கெல்லம் மெக்ரேவுக்கு உந்து சக்தியை கொடுத்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 
அவ்வாறு இவர்கள் மன்னிப்பு கோரவில்லை என்றால், 22 மில்லியன்  மக்களின் சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என, முழு நாட்டு மக்களின் சாபத்திற்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டி ஸ்விஸ் விடுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
 
மூன்று தசாப்தங்களாக இருந்து வந்த பிரபாகரனின் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தில் இருந்து முழு நாட்டை விடுவித்து, சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கு உண்மையான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
 
வடக்கில் உள்ள அப்பாவி சிறுவர்களிடம் பிரபாகரன் கொடுத்த துப்பாக்கிக்கு பதிலாக, அவர்களின் கைகளில் பாடப் புத்தகங்களை கொடுத்து, சுத்நதிரமான கல்விக்கு அவர்களை உரிமையாளர்களாக்கியதுடன், பிரபாகரனின் இரும்பு பாதணிகளுக்கு கீழ், கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருந்த இளைஞர்களை அதில் இருந்து மீட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
 
இவற்றுக்கெல்லாம் மேலாக வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக அங்கு தேர்தல் நடத்தி மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தமைக்காக மெக்ரே, சிறிதரன், மங்கள போன்றவர்கள், ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் மின்சார நற்காலிகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனரா எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கொடூரமான பயங்கரவாதிகளிடம் இருந்து தாய் நாட்டை மீட்ட போர் குற்றம் என இவர்கள் கருதுவார்களேயானால், தாய் நாட்டின் சகல மக்களுக்கு சுதந்திரத்தை உருவாக்கி கொடுத்ததும் போர் குற்றமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் 53 நாடுகளினதும் அரச தலைவர்கள் கலந்துகொள்வார்கள்: ஜீ.எல். பீரிஸ்!

Tuesday, July 16, 2013
இலங்கை::எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் 53 நாடுகளினதும் அரச தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு இருக்கின்றது.இந்த மாநாட்டில் கலந்துகொள்ளமாட்டோம் என்று எ ந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு நடைபெறுவது என்பது பாரிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். யுத்தத்தின் பின்னரான இலங்கையின் கள நிலைமையை காண்பதற்கு உலகத் தலைவர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் இதன்மூலம் கிடைக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகளுக்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல, அனுர பிரியதர்ஷன யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம, மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியதாவது,

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவது என்பது நாம் பெருமையடையக்கூடிய விடயமாகும். நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டின் ஊடாக எமது நாடு பாரிய முக்கியத்துவமான நிலையை சர்வதேச மட்டத்தில் அடையவுள்ளது. குறிப்பாக அடுத்த இரண்டு வருடங்களுக்கு இலங்கையே பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவத்தை வகிக்கவுள்ளது.

இது எவ்வித சந்தேகமுமின்றி சர்வதேச மட்டத்தில் எமக்கு சிறந்த முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் மாநாடாகும். 1976 ஆம் ஆண்டு அணிசேரா நாடுகள் மாநாடு இந்த நாட்டில் நடைபெற்றதன் பின்னர் நடைபெறும் விசாலமான மாநாடு பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு என்றே கூறலாம். அத்துடன் 24 வருடங்களின் பின்னர் ஆசிய நாடு ஒன்றுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை தொடர்பில் நாம் பெருமையடையலாம்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அரசாங்க மட்டத்தில் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Tuesday, July 16, 2013
இலங்கை::ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை செப்டெம்பர் 30 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி  கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது.

இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை கடந்த 3 ஆம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.

இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.

புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் ஏகமனதாக தெரிவு!

Tuesday, July 16, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்..
 
எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டமெனக் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் இந்த குறைப்பாடுகளை நீக்குவதற்கு தான் அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக கூறினார்.

முதலமைச்சர் பதவியின் இயல்பினை கருத்தில் கொண்டு உள்நாட்டில் வெளிநாட்டிலும் உள்ள தனது நண்பர்கள் பலர் தன்னைக் கேட்டுக்கொண்டதனாலேயே தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் உடன்பாட்டுடன் மட்டுமே முதலமைச்சரால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பங்குதாரர்களிடையே ஏகமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே நான் போட்டியிடுவதற்கு விரும்பினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தமானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இது வலது கையால் கொடுத்து இடது கையால் எடுப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு பொறுப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் பற்றி சரியாக அறியாதவர்களே அதனை விமர்சிக்கின்றனர். ஆளுநரின் உடன்பாடின்றி முதலமைச்சரால் எதுவும் செய்யமுடியாது.

தான் அரசியலில் கற்றுக்குட்டியாயினும் மக்களின் பிரச்சினைகள் தனக்கு தெரியுமென்றும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, தமது புதல்வியை, வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ. விக்னேஸ்வரனின் புதல்வர் திருமணம் செய்திருப்பது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது. அது இன ஒற்றுமைக்கு ஒரு பாலமாகவே அமையும் என இன நல்லிணக்க மொழி நல்லிணக்க துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Monday, July 15, 2013

இன்று தாக்குதல் நடத்தப்படும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Monday, July 15, 2013
சென்னை::இன்று தாக்குதல் நடத்தப்படும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவான்றினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள இலங்கையின்  பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லாஹ் கான் தெரிவித்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் அடங்கிய அட்டையொன்று கடந்த வெள்ளிக்கிழமை தமக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படும் என குறித்த அட்டையில் தமிழ மொழியில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் அடங்கிய தபால் அட்டை தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

இதற்கமைய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழவுள்ள பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இத்தகைய அநாமதேய கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு கிடைகின்றமை அண்மைக்காலமாக அதிகளவில் இடம்பெறுவதால் தபால் அட்டையின் நோக்கம் தொடர்பில் உறுதியாக எதனையும் கூறமுடியாது எனவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

13 ஆவது உடன்படிக்கை உருவாகக் காரணமாயிருந்த ஜே.ஆரும் -ராஜீவ் காந்தியும் இன்று உயிரோடு இல்லை. எனவே, அதனை தொடர்ந்து பாதுகாப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது:அத்தே ஞானசார தேரர்!

Monday, July 15, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக இந்தியாவின் அழுத்தமும் அச்சுறுத்தலும் எதிர்காலத்தில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென்ற எச்சரிக்கையை பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுத்துள்ளார். 
 
எனவே, நாட்டுக்காக எதிர்கட்சிகள் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டுமென்றும் தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞானசார தேரர் மேலும் தெளிவு படுத்துகையில்,
13 ஆவது உடன்படிக்கை உருவாகக் காரணமாயிருந்த ஜே.ஆரும் -ராஜீவ் காந்தியும் இன்று உயிரோடு இல்லை. எனவே, அதனை தொடர்ந்து பாதுகாப்பதில் எந்த விதமான அர்த்தமும் கிடையாது.
எனவே, அதனை முழுமையாக ஒழித்துவிட வேண்டும். அதன் மூலம் நாட்டுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை.
 
வடமாகாண சபை தேர்தலுக்கு முன்பு பொலிஸ், காணி அதிகாரங்களை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டுமென்றும் அரசைக் கோரினோம்.
அதற்கமைய அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும். இது அவர்களது கடப்பாடாகும். அரசாங்கத்திற்காகவல்ல, நாட்டுக்காக இக்குழுவில் பங்குகொள்ள வேண்டும். இதற்காக நாம் எதிர்கட்சிகளை வலியுறுத்துவோம். 
 
அதேவேளை அரசாங்கமும் 13 தொடர்பில் பிழை செய்துவிட்டது. ஆரம்பத்திலேயே அரசுக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பயன்டுத்தி இதனை ஒழித்திருக்க வேண்டும். இப்பெரும்பான்மை இருப்பது நாட்டுக்குத் தேவையில்லாதவற்றை ஒழிப்பதற்கே தவிர விறகு வெட்டுவதற்காக அல்ல.
 
16 ஆவது நூற்றாண்டு காலம் தொடக்கம் இந்தியா எமக்கு எதிரான நாடாகும். எமது நாட்டை பல முறை ஆக்கிரமித்தது.
எனவே, இன்று சிவ்சங்கர் மேனனின் வருகையும் இந்தியாவின் அச்சுறுத்தலும் அழுத்தமும் பயங்கரமானது.
எந்த நேரத்திலும் எமது நாட்டுக்கு எதிரான செயற்பாட்டை இந்தியா எடுக்கலாம். எனவே, எதிர்கட்சிகள் நாட்டை பாதுகாக்க தெரிவுக் குழுவில் பங்குகொள்ள வேணடுமென்றும் தேரர் தெரிவித்தார்.

ஜெனிவா மனித உரி­மைகள் பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் எதிர்­வரும் வட­மா­காண சபை தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது: தேசிய சுதந்­திர முன்­னணி!

Monday, July 15, 2013
இலங்கை::ஜெனிவா மனித உரி­மைகள் பேரவை மாநாட்டில் இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் எதிர்­வரும் வட­மா­காண சபை தேர்­தலில் கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளாக செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என்று தேசிய சுதந்­திர முன்­னணி அர­சிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

இது குறித்து அக்­கட்சி விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளதாவது;

வடமேல், மத்­திய மற்றும் வட­மா­காண சபை தேர்­தல்கள் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மாக நடத்­தப்­பட வேண்­டு­மென்­பதே எமது கட்­சியின் எதிர்­பார்ப்­பாகும். இந்­நி­லையில் இத்­தேர்­தலின் போது சர்­வ­தேச நாடு­களின் பிர­தி­நி­திகள் கண்­கா­ணிப்பில் ஈடு­ப­டு­வது குறித்து அனை­வ­ரி­னதும் கவனம் திரும்­பி­யுள்­ளது.
கடந்த காலங்­களில் ஐ.நா. மனித உரி­மைகள் மாநாட்டின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் இடம்­பெற்­ற­தாக கூறி இலங்­கைக்கு எதி­ராக வாக்­க­ளித்த மேற்­கத்­தேய நாடு­களின் பிரதி நிதிகள் இக்­கண்­கா­ணிப்பு குழுவில் இடம்­பெ­று­கின்­றனர். ஆகவே குறித்த நாடு­களின் பிர­தி­நி­திகள் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது.
 
குறித்த பிரதிநிதி­களை தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்கு இட­ம­ளித்­தோ­மே­யானால் இந்த தேர்தல் குறித்து பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சர்­வ­தே­சத்­துக்கு எடுத்துச் செல்ல இவர்கள் முற்­ப­டு­வார்கள்.
இது குறித்து கடந்த வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இடம்­பெற்ற தேர்தல் ஆணையாளருடனான கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கியுள்ளோம். சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறித்து அனைத்து கட்
சிகள் மற்றும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.

வடக்குத் தேர்தல் விடயத்தில் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் மக்களின் அழுத்தங்களுக்கு அமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் இடம்பெறுகின்றன: பஷில் ராஜபக்ஷ!

Monday, July 15, 2013
இலங்கை::வடக்குத் தேர்தல் விடயத்தில் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழ் மக்களின் அழுத்தங்களுக்கு அமையவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் இடம்பெறுகின்றன. மாறாக கூட்டமைப்பின் முடிவுகள் வடக்கை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவில்லை என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினாலும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடக்கில் ஐந்து மாவட்டங்களுக்கும் வேட்பாளர் அணித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். முதலமைச்சர் யார் என்பதனை மக்களே தீர்மானிக்கவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேசிய பிரச்சினையை தீர்க்காமல் அதில் தொடர்ந்து அரசியல் செய்யவேண்டும் என்ற நோக்கத்தினாலேயே பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் கலந்துகொள்ளாமல் உள்ளன. இறுதி நேரத்திலாவது அந்தக் கட்சிகள் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

வடக்குத் தேர்தலுக்கான தயார் நடவடிக்கைகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது

வட மாகாண சபைத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குழப்பத்தில் உள்ளதாக தெரிகின்றது. ஆனால் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட விடயமாகும். அதில் தலையிட நாங்கள் விரும்பவில்லை.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ள ஆளும் கட்சி தயாராக உள்ளது. வடக்குத் தேர்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்கள் வடக்கை அடிப்படையாகக்கொண்டு இடம்பெறவில்லை.

மாறாக வடக்குத் தேர்தல் குறித்த கூட்டமைபபின் முடிவுகளும் தீர்மானங்களும் புலி ஆதரவு புலம் பெயர் மக்களினால் தீர்மானிக்கப்படுகின்றது. அவர்களின் பிரதிநிதிகளாகவே கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றது. வடக்கு மக்களின் நிலைமைகள் குறித்து வெளியில் இருந்து தீர்மானிக்கப்படுவது ஆரோக்கியமானதாக அமையாது. வடக்கு மக்களின் விவகாரங்கள் குறித்து வடக்கு மக்களே தீர்மானம் எடுக்கவேண்டும். ஆனால் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் வெளியில் இருந்தே தீர்மானங்கள் வருகின்றன. ஆனால் அரசாங்கமானது வடக்கு மக்களின் ஆணையையே கோரி நிற்கின்றது.

இதேவேளை 13 ஆவது திருத்தச்சட்டம் உள்ளிட்ட அரசியலமைப்பு திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்துகொள்ளாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் இறுதி நேரத்திலாவது தெரிவுக்குழுவில் இணைந்துகொண்டு தேசிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தமது பங்களிப்புக்களை வழங்கும் என்று நம்புகின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் தேசிய பிரச்சினைக்கு ஒரு உரிய தீர்வு கிடைப்பதை விரும்பவில்லை என்றே தெரிகின்றது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதன் மூலம் தாங்கள் அரசியலை செய்யவே இந்தக் கட்சிகள் எதிர்பார்க்கின்றன.

அன்று புலிகளை தோற்கடிக்கும் செயற்பாட்டிலும் எதிர்க்கட்சிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவில்லை. எனினும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசு வெற்றியை அடைந்தது. அதேபோன்று தற்போதைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்காது உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் வந்தாலும் வராவிட்டாலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நாங்கள் முன்னெடுப்போம். எம்மால் ஒரு தீர்க்கமான முடிவுக்கு செல்ல முடியும். ஆனால் இறுதி தருணத்திலாவது இந்த இரண்டு கட்சிகளும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறும் என்று நம்புகின்றோம்.

எதிர்க்கட்சிகள் கலந்துகொண்டு தெரிவுக்குழுவுக்கு பங்களிப்பு வழங்காவிட்டாலும் மக்களிடம் தேவையான கருத்துக்களை பெற்று நாங்கள் ஒரு முடிவுக்குவருகின்றோம். தேசிய பிரச்சினை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொறுப்பின்றி செயற்படுகின்றமை நன்றாக தெரிகின்றது என்றார்.

வடக்கில் 1,600 க்குமேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகம்!

Monday, July 15, 2013
இலங்கை::வடபகுதி தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்பதிவு திணைக்களமானது சுமார் 1,600 க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை நடமாடும் சேவை மூலம் கடந்த வாரம் விநியோகம் செய்துள்ளது.
 
பொது மக்கள் தமது பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, கடவுச்சீட்டு, போன்ற முக்கியமான ஆவணங்களை எவ்வாறு பெறுதல் தெடர்பான விழிப்புணர்வு கூட்டம் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இடம் பெற்றது. நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார அரச அதிகாரிகள், பொதுமக்களைத் தேடிச் சென்று தமது சேவைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
கபே நிறுவனத்தின் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தெரிவிக்கும் போது முதல் மூன்று நாட்களிலும் 1,600 க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நடமாடும் சேவையானது வார இருதி நாட்களைத்தவிர ஏனைய நாட்களில் ஒரு மாத காலத்துக்கு இடம் பெறும் எனத் தெரிவித்தார்.
 
யாழ்ப்பான மாவட்டத்துக்கான நடமாடும் சேவையானது செவ்வாய் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களுக்கன நடமாடும் சேவையானது இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
 
அண்மைய ஆய்வொன்றின்படி சுமார் 80,000 பேர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எவ்வித ஆவணங்களும் இல்லாதவர்களாக உள்ளனர். 35,000 பேர் தேர்தலுக்கு முன்னதாகவே அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள எதிர் பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Saturday, July 13, 2013

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது: ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த!

Saturday, July 13, 2013
இலங்கை::வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களின் அவசியம் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 
நாட்டின் அரசியல் கட்சிகள் உள்நாட்டு கண்காணிப்பு பொறிமுறைமை குறித்து நம்பிக்கை கொள்ள வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் தீய நோக்கங்களின் அடிப்படையிலேயே வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு கோரி வருவதாகவும், குறிப்பாக வடக்கு தேர்தல்களில் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென கோரி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
ஏன் உள்நாட்டு பொறிமுறைமைய நம்ப முடியாது எனவும், நாம் எதனால் கண்காணிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கின் சகல நிர்வாக நடவடிக்கைகளும் சிவிலியன்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் இழுபறி மீண்டும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிற்போடப்பட்டது!

Saturday, July 13, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் நேற்றிரவு 8மணியளவில் (12.07.2013) ஆரம்பமாகி நடைபெற்றது.
 
தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் சேனாதிராஜா, சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் சங்கையா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில்  சுரேஸ் பிரேமச்சந்திரன், சர்வேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா, ஹென்ரி மகேந்திரன், புளொட் சார்பில் அதன் தலைவர் த.சித்தார்த்தன், க.சிவநேசன் (பவன்), ராகவன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதன்போது முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் ஒரு முடிவெடுக்க முடியாமல் கூட்டம் கலைந்ததுடன், தொடர்ந்து இதுபற்றி பேசுவதற்கு இன்றையதினம் (13.07.2013) மீண்டும் கூடுவதென்று தீர்மானிக்கப்பட்டது.
 

புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளானது!

Saturday, July 13, 2013
புகலிடக் கோரிக்கையாளர் படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன . இலங்கையர்கள் உள்ளிட்ட 97 பேர் இந்தப் படகில் பயணித்துள்ளனர். விபத்துக்குள்ளான படகில் பயணித்த 88 பேர் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர்.
 
படகில் பயணித்த குழந்தையொன்றின் சடலத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேஷியாவிற்கும் இடையிலான பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
 
படகு உடைந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

தவறிழைத்தவர் குற்றவாளியென்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வது நிராகரிக்கப்படும்:கெஹெலிய ரம்புக்வெல்ல!

Saturday, July 13, 2013
இலங்கை::தவறிழைத்தவர் குற்றவாளியென்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வது நிராகரிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறையமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
 
இடம்பெறும் சம்பவத்தைப் பொறுத்து சந்தேக நபர், குற்றவாளியென இரு பிரிவினர் உள்ளனர். அப்பாவிகள் கூட சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்தேகிக்கப்படலாம் என்பதனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆட்சேபனை இல்லை. இருப்பினும் குறித்த நபர் குற்றவாளியென நீதிமன்றம் நிரூபிக்குமாயின் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க முடியாதெனவும் அமைச்சர் கூறினார்.
 
கடந்த சில காலமாக மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார்களா? என்பது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
இருப்பினும் பாடசாலை ஆசிரியையை முழந்தாலிட வைத்த வடமேல்
மாகாண சபை உறுப்பினர் தொடர்பிலான விவகாரம் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு விதிவிலக்கு எனக் கூறிய அமைச்சர் குறித்த மாகாண சபை உறுப்பினர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கல்வியமைச்சர் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டியதொரு விடய மெனவும் தெரிவித்தார்.
 
குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஊடகங்களில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் மீது கொலை முயற்சி வழக்கு : கவர்னரை சந்திக்க எம்.எல்.ஏ.,க்கள் முடிவு!

Saturday, July 13, 2013
சென்னை::தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது தொடர்பாக, கவர்னரை சந்தித்து முறையிட, அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தயாராகி வருகின்றனர்.

அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கடந்த, 1ம் தேதி நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜரானார். அப்போது, வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அரசு வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், நேற்று முன்தினம், விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.ரிஷிவந்தியம் தொகுதியில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகம் திறந்து, நலத்திட்ட உதவி வழங்க சென்ற, விஜயகாந்திற்கு, வழக்கு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விழாவை பாதியில் முடித்துக் கொண்டு, அவசரமாக அவர் அங்கிருந்து, பெங்களூரு புறப்பட்டு சென்றார்.

கோபம் :

இவ்வழக்கில், அவரை கைது செய்ய, போலீசார் தயாராகி வருவதால், முன் ஜாமின் பெற்ற பிறகே, பெங்களூருவில் இருந்து சென்னை திரும்ப, விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, விஜயகாந்த் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது, அக்கட்சி நிர்வாகிகளிடம் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதை கண்டித்து, போராட்டம் நடத்தவும், மக்கள் மத்தியில் பிரச்னையை விளக்கவும், தே.மு.தி.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். கவர்னரிடம் முறையிட, எம்.எல்.ஏ.,க்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, தே.மு.தி.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
 
கடந்த ஆகஸ்ட் மாதம், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் பிரச்னை பற்றி பேசியதற்காக, விஜயகாந்த் மீது, 30க்கும் மேற்பட்ட, அவதூறு வழக்குகளை அரசு போட்டது. இவ்வழக்குகள் தொடர்பாக, ஒவ்வொரு கோர்ட்டிலும், விஜயகாந்த் நேரில் ஆஜராகி, விளக்கமளித்து வருகிறார். அனைத்து வழக்குகளையும், சட்டப்படி எதிர்கொள்ள, அவர் தயாராக இருக்கிறார். இச்சூழலில், கோர்ட்டில் நடந்த பிரச்னைக்காக, அவர் மீது கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் புகார்தாரரான அரசு வழக்கறிஞர், "விஜயகாந்த் என்னை முறைத்தார்' என்று மட்டுமே தெரிவித்தார். விஜயகாந்த் முறைத்திருந்தாலும், அதற்காக அவர் மீது, கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருப்பது, எந்த வகையிலும் நியாயம் இல்லை.

முறையீடு:

விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் என்பதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்னையை, மக்களிடம் கொண்டு செல்ல, முடிவு செய்துள்ளோம்; போராட்டம் நடத்த உள்ளோம். கவர்னர் ரோசய்யாவை சந்தித்து, எம்.எல்.ஏ.,க்கள் முறையிட உள்ளனர். முடிந்தால், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்தும், பிரச்னைகளை விளக்குவோம்.இந்த சந்திப்பிற்கு, விஜயகாந்த் தலைமை ஏற்பாரா என்பதை இப்போது சொல்வதற்கில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

விஜயகாந்த் முன்ஜாமின் மனு :

கொலை முயற்சி வழக்கில், முன் ஜாமின் கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், மீண்டும் மனு தாக்கல் செய்தார்.கடந்த, அக்., 14ம் தேதி, நாகர்கோவில் பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெ., பற்றி அவதூறு பேசியதாக, விஜயகாந்த் மீது, அரசு வழக்கறிஞர் ஞானசேகர், நாகர்கோவில் முதன்மை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக, ஜூலை 1ம் தேதி, விஜயகாந்த் கோர்ட்டில் ஆஜரானார்.அப்போது, கோர்ட்டில், வேறு வழக்கு விசாரணை நடந்தது. விஜயகாந்தை பார்க்க வந்த தொண்டர்கள், கோஷம் எழுப்பியதால், "கோர்ட் நடவடிக்கையை அமைதியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நீதிபதியிடம், அரசு வழக்கறிஞர் ஞானசேகர் கோரினார்.
 
இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க., - அ.தி.மு.க., வழக்கறிஞர்களுக்கிடையே, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து, அரசு வழக்கறிஞர், "மற்றொரு வழக்கு விசாரணையின் போது, கோர்ட்டுக்குள் வந்த விஜயகாந்தை வெளியேற்றும்படி, நீதிபதியிடம் கூறினேன். இதை கேட்ட விஜயகாந்த், என்னை முறைத்தார். அவருடன் வந்தவர்கள், என்னை தாக்கினர்' என, போலீசில் புகார் செய்தார்.இதன்படி, விஜயகாந்த் உட்பட, நான்கு பேர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில், மதுரை ஐகோர்ட் கிளையில், விஜயகாந்த் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு:நானும், என் ஆதரவாளர்களும், அரசு வழக்கறிஞரை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்ததாக, வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, நான் முன்ஜாமின் கோரி, மனு செய்தேன். "என் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.தற்போது, உள்நோக்குடன் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா!

Saturday, July 13, 2013
நியூயார்க்::அமெரிக்காவுடனான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா நம்பிக்
கை தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் சார்பில் நியூயார்க் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது சர்மா இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறியதாவது, 
 
இந்தியாவை சர்வதேச அளவில் உற்பத்தி மையமாக்குவதற்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்கேற்ப உற்பத்தி துறையில் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக பல்வேறு கொள்கைகளை வகுத்து வருகிறது. இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளது. 
 
விமான போக்குவரத்து, அணுசக்தி பாதுகாப்பு, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு வர்த்தக உறவு மேலும் வலுவடையும். அதே போல இரு தரப்பு பரஸ்பர முதலீடும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 1.92 லட்ம் கோடியையும், இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் ரூ. 78 ஆயிரம் கோடியையும் முதலீடு செய்துள்ளன. அன்னிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் தேசிய முதலீட்டு மற்றும் உற்பத்தி மண்டலங்கள் மற்றும் முதலீட்டுக்கான ஒற்றை சாளர ஒப்புதல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 
 
மிகப் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் அளித்து செயல்படுத்துவதற்கு வசதியாக பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் முதலீட்டுக்கான மத்திய அமைச்சரவை குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு இந்தியாவுக்கு கடினமானதாக அமைந்தது. எனினும் இந்தியாவின் பொருள்களுக்கான தேவை, முதலீடு, சேமிப்பு ஆகியவை வலிமையாக உள்ளன. இதனால் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய
 
நிலைக்கு திரும்பும் என்றார். சி.ஐ.ஐ. தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும், டி.சி.எம். ஸ்ரீராம் நிறுவன நிர்வாக இயக்குனருமான அஜய் ஸ்ரீராம் தலைமையில் சி.ஐ.ஐ. தலைமை இயக்குனர் சந்திரஜித் பானர்ஜி, பார்தி குழும தலைவர் சுனில் மிட்டல், மேக்ஸ் இந்தியா தலைவர் அனல்ஜித் சிங் உள்ளிட்ட தொழிலதிபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Friday, July 12, 2013

தாய்ப்பால் குடித்த போது கடித்ததால் குழந்தை முகத்தில் 90 முறை கத்திரியால் குத்திய தாய் சீனாவில் பயங்கரம்!!

Friday, July 12, 2013
பீஜிங்::தாய்ப்பால் ஊட்டும் போது கடித்த குழந்தையின் முகத்தில் 90 முறை கத்தரிக்கோலால் தாய் குத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. முகமெல் லாம் வீங்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் சுசௌ  நகரை சேர்ந்த ஒரு பெண்ணின் 8 மாத ஆண் குழந்தை ஜியோ போ. சில தினங்களுக்கு முன்பு குழந்தை ஜியோ போ வீட்டில் ரத்த வெள்ளத்தில்  கிடந்தது. அதன் முகமெல்லாம் காயங்கள் இருந்தன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் மாமா அதனை உடனடியாக மருத்துவமனைக்கு  கொண்டு சென்றார்.

உயிருக்கு போராடிய குழந்தையை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு 100க்கும் மேற்பட்ட தையல்கள்  போடப்பட்டன. தற்போது அதன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின் றனர். இது குறித்து விசாரித்தபோது,  குழந்தையை தாயே கத்தரியால் குத்தியது தெரியவந்தது. குழந்தை பால் குடிக்கும் போது அடிக்கடி கடித்து வைத்துள்ளான். இதனால் கோபம்  அடைந்த அவனது தாயார் ‘கடிப்பியா, கடிப்பியா’ எனக் கேட்டப்படியே குழந்தையின் முகத்திலும், உடலிலும் நறுக் நறுக் கென்று கத்தரியால்  குத்தியுள்ளார் என்று குழந்தையின் மாமா தெரிவித்தார். முகத்தில் 90க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திரி குத்து விழுந்துள்ளது. அந்த பெண்  மனநிலை பாதித்தவரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சீனாவில் பல பெண்களுக்கு மனநோய் காணப்படுவதாகவும், அவர்கள் போதுமான சிசிக்சை பெறாமல் இருப்பதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட  ஆய்வில் தெரியவந்தது.இந்நிலையில், 8 மாத குழந்தையை தாய் 90 முறை கத்தரியால் குத்திய சம்பவம் சீனாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.