Wednesday, July 17, 2013

காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொட பெல்ஜியத்தில்!

Wednesday, July 17, 2013
இலங்கை::காணாமல் போனதாக கூறப்படும் ஊடகவியலாளர் ப்ரகீத் எக்னெலிகொட பெல்ஜியத்தில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை ஜே வீ பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தம்மிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
 
ப்ரகீத் எக்னெலிகொட தொடர்பான வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம் பெற்ற போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பான வாக்குமூலம் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோவிடம் நேற்றைய தினம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
 
இதனிடையே, பிரான்சில் வசிக்கும் ஊடகவியலாளர் மஞ்சுள வெடிவர்த்தன ப்ரகீத் எக்னெலி கொடவை காண்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
அன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணாண்டோ நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment