Wednesday, July 17, 2013

இலங்கையை இந்தியா நிர்ப்பந்திக்க கோரி தமிழ்நாடு முழுவதும் 8ம் தேதி (புலி ஆதரவு) டெசோ சார்பில் ஆர்ப்பாட்டம்!

Wednesday, July 17, 2013
சென்னை::இலங்கை அரசமைப்பு சட்டத்தின், 13வது திருத்தத்தை, முழுமையாக நிறைவேற்ற வேண்டும்; இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில், மத்திய அரசு கலந்து கொள்ளக் கூடாது என்பதை, வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், அடுத்த மாதம், 8ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, (புலி ஆதரவு) டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில், அறிவாலயத்தில், "டெசோ' கூட்டம் நேற்று நடந்தது. இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண, 1987ல் ஓர் உடன்பாடு ஏற்பட்டது. ராஜிவ், ஜெயவர்த்தனேவும், கையெழுத்திட்ட, அந்த உடன்பாட்டின்படி, மாகாண கவுன்சிலர்களுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ள, வழி வகை செய்யும் வகையில், இலங்கை அரசியல்அமைப்புச் சட்டத்தில், 13வது திருத்தம் செய்யப்பட்டது.

தற்போதைய ராஜபக்ஷே அரசு, அதை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதில் தீவிரமாக இருக்கிறது. இந்த, 13வது சட்டத் திருத்தம், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு, முழு அரசியல் தீர்வாக அமையாது. இருப்பினும் தற்காலிகத் தீர்வாக, ராஜிவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பயன்பட வேண்டும் என, டெசோ அமைப்பு கருதுகிறது.
 
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், மத்திய அரசு பங்கேற்கக் கூடாது.தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும். இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, "டெசோ' சார்பில், அடுத்த மாதம், 8ம் தேதி, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, அக்கூட்டத்தில் தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment