Wednesday, July 17, 2013
புதுடெல்லி::புத்தகயாவில் குண்டுவெடித்த 2 தீவிரவாதிகள் யார் என்று அடையாளம் தெரிந்தது என்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். பீகார் மாநிலத்தில் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகயா கோயிலில் தீவிரவாதிகள் தொடர்குண்டு வெடித்தனர். இதில் 2 புத்த துறவிகள் காயம் அடைந்தனர். குண்டுவெடித்தவர்கள் பற்றி துப்புக்கொடுத்தால் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் புத்தகயாவில் குண்டுவெடித்த தீவிரவாதிகள் 2 பேர் அடையாளம் தெரியவந்துள்ளது என்று டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் இந்திய முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் இரண்டு பேர்களில் ஒருவர் பெயர் வாஹாஸ் என்ற அகமது. இவன் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்துகொண்டு நாசவேலையில் ஈடுபட்டு வந்தான். மற்றொருவன் பெயர் அசதுல்லா அஹ்தர் ஹத்தி என்ற தாப்ரெஜ். இவன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்துகொண்டு செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு மும்பையில் குண்டுவெடித்தனர். இவர்களை போலீசார் கைது செய்வதற்கு முன்பு தப்பிவிட்டனர்.
இவர்கள் இருவரும் மும்பையில் குண்டுவெடிக்க செய்த மாதிரியே கடந்த 2012-ம் ஆண்டு புனேயிலும் கடந்தாண்டு டெல்லியிலும் குண்டுவெடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. அதேசமயத்தில் புத்தகயாவில் இவர்கள் 2 பேரும் குண்டுவெடிக்க செய்துள்ளனர் என்று உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த இரண்டு தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றனர் என்று தீவிரவாதி சயீது மெஹ்பூல் தெரிவித்துள்ளார்.
இவன் புனே குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். மேலும் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தில் உள்ள தீவிரவாதிகளில் இந்த இரண்டு தீவிரவாதிகளுக்கு மட்டும்தான் தற்போது குண்டுகளை வெடிக்கச் செய்ய தெரியும் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் என்கவுண்டரிலும் தீவிரவாதி ஹத்திக்கு தொடர்பு உண்டு. கடந்த 2006-ம் ஆண்டு ஒளரங்காபாத்தில் ஆயுத குவியல் பறிமுதல் செய்யப்பட்டதில் வாகாஸூக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகின்றனர். மும்பை,புனே,புத்தகயா ஆகிய இடங்களில் வெடிக்காத டெடோனேட்டர்களில் உள்ள வெடிமருந்து பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தன என்றும் அந்த உயரதிகாரி மேலும் கூறினார்.:
No comments:
Post a Comment