Saturday, July 13, 2013
இலங்கை::தவறிழைத்தவர் குற்றவாளியென்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வது நிராகரிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறையமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இலங்கை::தவறிழைத்தவர் குற்றவாளியென்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வது நிராகரிக்கப்படுமென அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத்துறையமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.
இடம்பெறும் சம்பவத்தைப் பொறுத்து சந்தேக நபர், குற்றவாளியென இரு பிரிவினர் உள்ளனர். அப்பாவிகள் கூட சந்தர்ப்ப சூழ்நிலையில் சந்தேகிக்கப்படலாம் என்பதனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வது தொடர்பில் அரசாங்கத்துக்கு ஆட்சேபனை இல்லை. இருப்பினும் குறித்த நபர் குற்றவாளியென நீதிமன்றம் நிரூபிக்குமாயின் அந்நபர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இடமளிக்க முடியாதெனவும் அமைச்சர் கூறினார்.
கடந்த சில காலமாக மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பல்வேறு குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டனர். இவர்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவார்களா? என்பது தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய வினாவுக்கு பதிலளிக்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இருப்பினும் பாடசாலை ஆசிரியையை முழந்தாலிட வைத்த வடமேல்
மாகாண சபை உறுப்பினர் தொடர்பிலான விவகாரம் அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு விதிவிலக்கு எனக் கூறிய அமைச்சர் குறித்த மாகாண சபை உறுப்பினர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கல்வியமைச்சர் உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடி எடுக்கப்பட வேண்டியதொரு விடய மெனவும் தெரிவித்தார்.
குறித்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஊடகங்களில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment