Wednesday, July 17, 2013

அரசியல்வாதி அல்லாத ஒருவரை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியுள்ளதன் மூலம் கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியில் பிரச்சினைகளும் பலவீனமும் இருப்பது தெளிவாகியுள்ளது: தினேஷ் குணவர்த்தன!

Wednesday, July 17, 2013
இலங்கை::அரசியல்வாதி அல்லாத ஒருவரை வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கியுள்ளதன் மூலம் கூட்டமைப்புக்கு அரசியல் ரீதியில் பிரச்சினைகளும் பலவீனமும் இருப்பது தெளிவாகியுள்ளது. அதனால்தான் மக்களை கவரும் நோக்கில் கூட்டமைப்பு அரசியல்வாதி அல்லாத ஒருவரை களமிறக்கியுள்ளது என்று ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளர் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை நாம் அறியவில்லை. எவ்வாறெனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியை வழங்குவதற்கு ஆளும் கட்சி எதிர்பார்கின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பினர் போட்டியிடுவதற்கும் சுதந்திரமாக பிரசாரம் செய்வதற்குமான ஜனநாயக சூழலை எமது அரசாங்கமே ஏற்படுத்தியது. வடக்குத் தேர்தல் நடைபெறுவதானது ஜனநாயகத்துக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்குத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் வட மாகாணத்தில் மொத்தம் 36 உறுப்பினர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்

அரசியல்வாதி அல்லாத ஒருவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளது. இதன் மூலம் கூட்டமைப்பு அரசியல் ரீதியில் பலவீனமாகியுள்ளதும் பிரச்சினைகளுக்குள் சிக்கியிருப்பதையும் உணர முடிகின்றது. வடக்குத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக அரசியல்வாதி ஒருவரை நியமிக்க முடியாத அளவுக்கு கூட்டமைப்பு பலவீனடைந்துள்ளது.

அதனால்தான் அரசியல்வாதி அல்லாத ஒருவரை தேர்தலில் களமிறக்கி மக்களை கவர முயற்சிக்கின்றனர். விக்னேஸ்வரன் அரசியலுக்கு புதியவர். அரசியல் ரீதியில் அவரை எமக்குத் தெரியாது. எவ்வாறெனினும் வடக்குத் தேர்தலில் ஆரோக்கியமான போட்டியொன்றை வழங்குவதற்கு ஆளும் கட்சி எதிர்பார்க்கின்றது. அரசாங்கத்தை பொறுத்தமட்டில் வடக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். பயங்கரவாதத்தை தோற்கடித்து மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கியுள்ளோம்.

அந்த வகையில் தற்போது வடக்கில் புதிய அரசியல் பயணம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கணிசமான மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர். சில உள்ளூராட்சிமன்றங்களை நாங்கள் வெற்றிகொண்டோம். சிலவற்றில மிக அருகிலேயே தோல்வியடைந்தோம்.

தற்போதைய நிலைமையில் வடக்கில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. நாட்டில் மிக வேகமான அபிவிருத்தி செயற்பாடுகள் வடக்கிலேயே இடம்பெறுகின்றன. எனவே மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த மக்களுக்கு எமது அரசாங்கமே ஜனநாயக உரிமைகளை பெற்றுக்கொடுத்துள்ளது.

அந்த வகையில் வடக்குத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டமைப்புக்கு பாரிய ஆஆரோக்கியமான போட்டியை வழங்கும் என்றார்
 
 

No comments:

Post a Comment