Monday, July 15, 2013
இலங்கை::வடபகுதி தேர்தலுக்கு முன்னதாகவே ஆட்பதிவு திணைக்களமானது சுமார் 1,600 க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளை நடமாடும் சேவை மூலம் கடந்த வாரம் விநியோகம் செய்துள்ளது.
பொது மக்கள் தமது பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, கடவுச்சீட்டு, போன்ற முக்கியமான ஆவணங்களை எவ்வாறு பெறுதல் தெடர்பான விழிப்புணர்வு கூட்டம் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இடம் பெற்றது. நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.எஸ் சரத்குமார அரச அதிகாரிகள், பொதுமக்களைத் தேடிச் சென்று தமது சேவைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கபே நிறுவனத்தின் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தெரிவிக்கும் போது முதல் மூன்று நாட்களிலும் 1,600 க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்நடமாடும் சேவையானது வார இருதி நாட்களைத்தவிர ஏனைய நாட்களில் ஒரு மாத காலத்துக்கு இடம் பெறும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பான மாவட்டத்துக்கான நடமாடும் சேவையானது செவ்வாய் கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை முல்லைத்தீவு, மன்னார், வவுனியா போன்ற மாவட்டங்களுக்கன நடமாடும் சேவையானது இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அண்மைய ஆய்வொன்றின்படி சுமார் 80,000 பேர் அடையாளத்தை உறுதிப்படுத்தும் எவ்வித ஆவணங்களும் இல்லாதவர்களாக உள்ளனர். 35,000 பேர் தேர்தலுக்கு முன்னதாகவே அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள எதிர் பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment