Tuesday, July 16, 2013

தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் ஏகமனதாக தெரிவு!

Tuesday, July 16, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் வட மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளராக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவர்  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்..
 
எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலுக்கான தமிழ் தேசிய (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் நீதியரசர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டமெனக் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் இந்த குறைப்பாடுகளை நீக்குவதற்கு தான் அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக கூறினார்.

முதலமைச்சர் பதவியின் இயல்பினை கருத்தில் கொண்டு உள்நாட்டில் வெளிநாட்டிலும் உள்ள தனது நண்பர்கள் பலர் தன்னைக் கேட்டுக்கொண்டதனாலேயே தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கு முன்னர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் உடன்பாட்டுடன் மட்டுமே முதலமைச்சரால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டமைப்பின் பங்குதாரர்களிடையே ஏகமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே நான் போட்டியிடுவதற்கு விரும்பினேன் என்றும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தமானது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது. இது வலது கையால் கொடுத்து இடது கையால் எடுப்பது போன்றதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விடயங்களுக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு பொறுப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் பற்றி சரியாக அறியாதவர்களே அதனை விமர்சிக்கின்றனர். ஆளுநரின் உடன்பாடின்றி முதலமைச்சரால் எதுவும் செய்யமுடியாது.

தான் அரசியலில் கற்றுக்குட்டியாயினும் மக்களின் பிரச்சினைகள் தனக்கு தெரியுமென்றும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, தமது புதல்வியை, வடமாகாண தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சீ.வீ. விக்னேஸ்வரனின் புதல்வர் திருமணம் செய்திருப்பது எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது. அது இன ஒற்றுமைக்கு ஒரு பாலமாகவே அமையும் என இன நல்லிணக்க மொழி நல்லிணக்க துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment