Monday, July 15, 2013
சென்னை::இன்று தாக்குதல் நடத்தப்படும் என விடுக்கப்பட்ட அச்சுறுத்தலால் சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இனந்தெரியாத குழுவான்றினால் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னையிலுள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் சபருல்லாஹ் கான் தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுறுத்தல் அடங்கிய அட்டையொன்று கடந்த வெள்ளிக்கிழமை தமக்கு கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படும் என குறித்த அட்டையில் தமிழ மொழியில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல் அடங்கிய தபால் அட்டை தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.
இதற்கமைய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தை சூழவுள்ள பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு தமிழக பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் இத்தகைய அநாமதேய கடிதங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புக்கள் இந்தியாவில் ஒரு சில இடங்களுக்கு கிடைகின்றமை அண்மைக்காலமாக அதிகளவில் இடம்பெறுவதால் தபால் அட்டையின் நோக்கம் தொடர்பில் உறுதியாக எதனையும் கூறமுடியாது எனவும் பிரதி உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment