Tuesday, July 16, 2013
இலங்கை::அண்மையகால வரலாற்றில், தாய் நாட்டுக்கு எதிரான பயங்கரமான சவாலை, வெற்றிக்கொண்டு, நாட்டுக்கு சுதந்திரத்தை உரித்தாக்கி கொடுத்த ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு
செல்ல வேண்டும் எனக் கூறும் கெல்லம் மெக்ரேவுக்கு உந்து சக்தியை கொடுத்து செயற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் மற்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.இலங்கை::அண்மையகால வரலாற்றில், தாய் நாட்டுக்கு எதிரான பயங்கரமான சவாலை, வெற்றிக்கொண்டு, நாட்டுக்கு சுதந்திரத்தை உரித்தாக்கி கொடுத்த ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு
அவ்வாறு இவர்கள் மன்னிப்பு கோரவில்லை என்றால், 22 மில்லியன் மக்களின் சுதந்திரத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் என, முழு நாட்டு மக்களின் சாபத்திற்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். கண்டி ஸ்விஸ் விடுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மூன்று தசாப்தங்களாக இருந்து வந்த பிரபாகரனின் மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தில் இருந்து முழு நாட்டை விடுவித்து, சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களுக்கு உண்மையான எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் உள்ள அப்பாவி சிறுவர்களிடம் பிரபாகரன் கொடுத்த துப்பாக்கிக்கு பதிலாக, அவர்களின் கைகளில் பாடப் புத்தகங்களை கொடுத்து, சுத்நதிரமான கல்விக்கு அவர்களை உரிமையாளர்களாக்கியதுடன், பிரபாகரனின் இரும்பு பாதணிகளுக்கு கீழ், கழுத்தில் சயனைட் குப்பிகளை அணிந்திருந்த இளைஞர்களை அதில் இருந்து மீட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் மேலாக வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக அங்கு தேர்தல் நடத்தி மக்களுக்கு வாக்குரிமையை பெற்றுக்கொடுத்தமைக்காக மெக்ரே, சிறிதரன், மங்கள போன்றவர்கள், ஜனாதிபதியையும், பாதுகாப்புச் செயலாளரையும் மின்சார நற்காலிகளுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனரா எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடூரமான பயங்கரவாதிகளிடம் இருந்து தாய் நாட்டை மீட்ட போர் குற்றம் என இவர்கள் கருதுவார்களேயானால், தாய் நாட்டின் சகல மக்களுக்கு சுதந்திரத்தை உருவாக்கி கொடுத்ததும் போர் குற்றமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment