Wednesday, July 17, 2013
இலங்கை::வடக்கு, கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்காக ஒரு கோடியே 16 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்கு குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன் பிரகாரம் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் 1,395 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகளும் 1,640 குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
No comments:
Post a Comment