இலங்கை::ஜெனிவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் கண்காணிப்பாளர்களாக செயற்படுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடமேல், மத்திய மற்றும் வடமாகாண சபை தேர்தல்கள் நீதியானதும் நியாயமானதுமாக நடத்தப்பட வேண்டுமென்பதே எமது கட்சியின் எதிர்பார்ப்பாகும். இந்நிலையில் இத்தேர்தலின் போது சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பில் ஈடுபடுவது குறித்து அனைவரினதும் கவனம் திரும்பியுள்ளது.
கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக கூறி இலங்கைக்கு எதிராக வாக்களித்த மேற்கத்தேய நாடுகளின் பிரதி நிதிகள் இக்கண்காணிப்பு குழுவில் இடம்பெறுகின்றனர். ஆகவே குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் தேர்தலை கண்காணிப்பதற்கு இடமளிக்கக்கூடாது.
குறித்த பிரதிநிதிகளை தேர்தலை கண்காணிப்பதற்கு இடமளித்தோமேயானால் இந்த தேர்தல் குறித்து பொய்யான குற்றச்சாட்டுக்களை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்ல இவர்கள் முற்படுவார்கள்.
இது குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற தேர்தல் ஆணையாளருடனான கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கியுள்ளோம். சர்வதேச கண்காணிப்பாளர்கள் குறித்து அனைத்து கட்
சிகள் மற்றும் அமைப்புகள் கவனம் செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment