Thursday, January 31, 2013
இலங்கை::போர் குற்றம் தொடர்பான, நியாயமான விசனங்களை கருத்திலெடுத்து செயற்படத் தவறிவிட்டதாக இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க செனட்டர்கள் இருவர் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளிநாட்டுக் கொள்ளை தொடர்பில் பிரதான பேச்சாளர்களான செனட்டர்கள் பற்றி லீஹி, பொப் கேசி ஆகியோர் இலங்கை தானே அமைத்துகொண்ட கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தவறிவிட்டது என கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன் அண்மையில் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமைபற்றி இந்த செனட்டர்கள் தமது விசனத்தை வெளியிட்டதோடு அதிகாரம் வாய்ந்தோர் ஊடகங்களை பயமுறுத்தினர் என்ற மனித உரிமைக் குழுக்களின் குற்றச்சாடையும் முக்கியப்படுத்தியுள்ளனர்.
இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் உறுதியான ஜனநாயகத்துக்கும் முதற்படியாக பொறுப்புக்கூறுதல் வரவேண்டும்' என இவர்கள் கூறியுள்ளனர்.
கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயன்முறை பக்கச்சார்புகள், இழுத்தடிப்புகளின் தாக்கம் கொண்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புலிகளை தோற்கடித்த இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு, 40,000 வரையான சிவிலியன்களை கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை என கூறி சர்வதேச விசாரணைகளை இலங்கை மறுத்து வருகிறது.
ஓபமா அரசாங்கம் ராஜபக்ஷ தொடர்பில் பொறுமை இழந்து வருகிறது.இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இரண்டாம் தடவையும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என அமெரிக்கா அதிகாரிகள் கொழும்பில் திங்கட்கிழமை அறிவித்தனர்.