Thursday, November 29, 2012
ஜெய்சால்மர்::இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் ராஜஸ் தான் எல்லையில் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் உயிருடன் பிடிபட்டார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் இந்தோ பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்கு எல்லை பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்புக்காக ஆங்காங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகங்காநகர் ஏரியாவில் கண்காணிப்பு கோபுரம் நம்பர் 303 உள்ளது. இந்த கோபுரத்தில் பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு பாகிஸ்தான் பகுதியிலிருந்து 2 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வதை பார்த்தனர்.
உடனடியாக அவர்களை திரும்பி போகுமாறு வீரர்கள் எச்சரித்தனர். இதை மீறி அவர்கள் இந்திய பகுதிக்குள் வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை நோக்கி பாதுகாப்பு படையினர் சுட்டனர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து சரிந்தார். மற்றொருவர் இருளை பயன்படுத்தி ஓடி மறைந்தார். குண்டு காயமடைந்தவரை வீரர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. தப்பியோடிய நபரை பிடிக்க நாலாபக்கமும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது புதர் ஒன்றில் மறைந்திருந்த அந்த நபர் உயிருடன் பிடிக்கப்பட்டார். விசாரணையில் அவர் பாகிஸ்தானின் பவல்பூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் ஆயுதம் எதுவும் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.