Wednesday, November 28, 2012
இலங்கை::சிறைச்சாலைகளில் புலனாய்வு உத்தியோகத்தாகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறைச்சாலைகளில் ஒழுக்கத்தை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் இவ்வாறு புலனாய்வு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
புலனாய்வு அதிகாரிகளை சேவையில் இணைத்துக் கொள்ளும் திட்டத்திற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதியளித்துள்ளது. புலனாய்வு அதிகாரிகளுக்கு முழுமையான பயிற்சி அளித்து, நாடு முழுவதிலும் உள்ள முக்கிய சிறைச்சாலைகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் வெலிக்கடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டதுடன், 40 பேர் காயமடைந்திருந்தனர். சிறைச்சாலைகளில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment