Wednesday, November 28, 2012
இலங்கை::கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப மையம் கிளிநொச்சி பாதுகாப்புப் படையினரால் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கொமேஷல் வங்கியுடன் இணைந்து இச் சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தகவல் கொழில்நுட்ப மையத்தில் 8 கணணிகள் உள்ளதுடன், இக் கணணிகள் அண்மையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோள்களுக்கமைவாக பிரதான அனுசரனையாளர்களான கொமேஷல் வங்கியால் இக் கணணிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கொமேஷல் வங்கியின் பிரதானி, சிரேஷ்ட வங்கி அதிகாரிகள், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி, சிரேஷ்ட பாதுகாப்புப் படை அதிகாரிகள், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டனர்.
முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு கண் கிளினிக் மருத்துவ முகாம்
கந்தளாய் ஈச்சிலம்பத்து கஷ்ட பிரதேச வைத்தியாசாலையில் நடமாடும் கண் மருத்துவ கிளினிக் முகாமொன்று அண்மையில் 222ஆவது கந்தளாய் படைப்பிரிவினரால் நடாத்தப்பட்டது.
முன்னாள் புலி உறுப்பினர்களின் குடும்பத்தினர் உட்பட பொதுமக்கள் கலந்துக்கொண்ட இம் மருத்துவ முகாமில் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்.டி.ஆர்.எதரிசிங்கவின் தலைமையில் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கலந்துக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 30 நோயாளிகள் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு இராணுவத்தினரால் இடம்மாற்றப்பட்டனர்.
இந் நலன்புரி சேவையானது 222 ஆவது படைப்பிரிவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் நலன்கருதி கழிவறை தொகுதி நிர்மாணம்
அலிகம்பி தமிழ் கலவன் பாடசாலையின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக அக்கரைப்பத்து விசேட படைப்பிரிவு-3 தலைமையத்தால் புதிய கழிவறைத் தொகுதியொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
இப் பாடசாலையின் நீண்ட நாள் தேவையைக் கருத்திற்கொண்டு, படையினர் தாமாகவே முன்வந்து இச் நலன்புரி சேவையை மேற்கொண்டுள்ளனர். இதற்கு மொத்தமாக 130,000/= செலவு செய்யப்பட்டுள்ளது.
இதனை கையளிக்கும் நிகழ்வில் மதத்தலைவர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துக்கொண்டனர்.
வாசிப்பு முகாம்
கடந்த நவம்பர் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் உடுத்துரை மகா வித்தியாலயத்தில் 55ஆவது வெத்திலங்கேனி படைப்பிரிவினரால் இரண்டு நாட்களை கொண்ட வாசிப்பு முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மருந்தங்கேனி பிரதேசம் உள்ளடங்களாக பல பாடசாலைகளைச் சேர்ந்த 125க்கு மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் கலந்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment