Thursday, November 29, 2012

நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்!

Thursday, November 29, 2012
இலங்கை::இலங்கையில் தமது பணியினை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலுாஜ் இன்று கைத்தொழில், வணிகத் துறை  அமைசச்ர றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையில் தாம் பணியாற்றும் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்ததாகவும், மக்களுடன் கலந்துரையாடியதாகவும் அவர்களது தேவைகள் குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் உயர் ஸ்தானிகர் அமைச்சரிடத்தில் எடுத்துரைத்தார்.

குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் வரிசையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிகள் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதாகவும், மக்களுக்கு பணியாற்றும் விதம் தம்மை பெரிதும் கவர்ந்ததாகவும் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலுாஜ் அமைச்சரிடத்தில் குறிப்பிட்டார்.
இலங்கை -பாகிஸ்தான் இரு தரப்பு வர்த்தகம் மிகவும் நெருக்கமாகவுள்ளதால் ஆடைத் தொழிற் துறை, மாணிக்கற்களைக் கொண்டு நவீன வடிவமைப்பு செய்யும் தொழில் நுட்பம் குறித்தும் தமது நாடு இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாகவுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர் கூறினார்.

இலங்கையின் யுத்த காலத்தில் பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைழைப்புக்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், உயர் ஸ்தானிகர் இலங்கையில்  ஆற்றிய பணிகள் மிகவும் சிலாகிப்புக்குள்ளானது என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்களின் வாழ்வாதாரம், அடிப்படை தேவைப்பாடுகள் என்பனவற்றை தொடர்ந்து பெற்றுக் கொடுக்கும் திட்டங்களை பாகிஸ்தான் முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் றிசாத் பதியுதீன் உயர் ஸ்தானிகர் இடத்தில் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment