Wednesday, November 28, 2012
இலங்கை::ஹம்பாந்தோட்டை – ரன்ன- வாடிகல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஹாராச்சி பயணம் செய்த ஜீப் வண்டியில் இருந்து கஞ்சா மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் வெதஹாராச்சி பயணம் செய்த ஜீப் வண்டியில் இருந்து போர12 என்ற ஆயுதமும், ஒரு ரிவால்வர் மற்றும் துப்பாக்கி ரவைகள் ஆறுடன், 36.6 கிராம் கஞ்சா என்பன மீட்கப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை – ரன்ன- வாடிகல பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பயணம் செய்த ஜீப் வண்டி, நேற்று அதிகாலை பேருந்து ஒன்றுடன் மோதுண்ட நிலையில், பாதையை விட்டு விலகி, வீதியோரத்தில் இருந்து பாதசாரி ஒருவரை மோதியது.
இதில் அந்த பாதசாரி அந்த இடத்திலேயே பலியனதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment