Tuesday, November 27, 2012
இலங்கை::நாட்டு மக்கள் எதிர்நோக்கி வரும் மொழிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளைய தினம் முதல் இந்த விசேட தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
1956 என்னும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மொழிப் பிரச்சினை தொடர்பான முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரச்சினையால் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் இந்த தொலைபேசி இலக்கத்தின் உடாக அமைச்சிற்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்க நிறுவனங்களில் தங்களது தாய்மொழியில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாதவர்கள் இந்த இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என குறிப்பிடப்படுகிறது. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் வாழும் மக்கள் தங்களது தாய் மொழியில் அரசாங்க நிறுவனங்களில் சேவைகளை பெற்றுக் கொள்ள உரித்துடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment