Wednesday, November 28, 2012
இலங்கை::யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எரிக் பெரேரா அத தெரணவிற்கு தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையின் காரணமாக அவ் ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் அங்கு சென்றதாக அவர் தெரிவித்தார்.
தற்போது யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பதற்றநிலை நிலவுவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தான் அறிந்ததாகவும் ஆனால் அங்குள்ள மேலதிக நிலைமை குறித்து தகவல் பெற முடியாதுள்ளதாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்ஜீவ பண்டார அத தெரணவிடம் தெரிவித்தார்.
பல்கலைக்கழக வாயில் கதவை மூடி மாணவர்கள் இன்று பகல் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிற்கும் மீது பொலிஸாருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டதால் பொலிஸார் மாணவர்கள் மீது தடையடி நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment