இலங்கை::இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை கண்டித்தும், அதை தடுத்து நிறுத்துவதற்கு விரைவான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளுமாறு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.டி.பியின் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை உள்ளிட்ட மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், கடற்றொழிலாளர்கள் பேரணியை நடாத்தி இம் மகஜரை கையளித்தனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கான கோரிக்கை மனுவினை ஏற்றுக்கொண்ட ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அங்கு உரையாற்றும் போது எமது கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளை சுதந்திரமாகவும், இயல்பாகவும் மேற்கொள்ள வேண்டும். இதன்மூலமே எமது கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் மேம்பாடு அடையும். அந்தவகையில் எமது பகுதிகளில் அத்துமீறியதும், தடைசெய்யப்பட்டதுமான இந்திய மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களது தொழில்நடவடிக்கைகளால் எமது பகுதி கடற்றொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஊடாக இவ் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் இதற்கு சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வெண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினது மகஜரினை யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரிடம் கையளித்தார்.
இதில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, சட்டத்தரணி ரெங்கன் தேவராஜன் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment