Tuesday, November 27, 2012
இலங்கை::மொரீசியஸ் தீவிலிருந்து இலங்கையை நோக்கி செலுத்தப்பட்ட கப்பல் ஒன்றின் கெப்டன், கொழும்பு துறைமுகத்தை அண்மித்த கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கப்பலை கடற்படையினர் சோதனையிட்டபோது அதிலிருந்து துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை!
வெடிமருந்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் சீன பிரஜை ஒருவரை கொழும்பு துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடலில் வைத்து கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
மீன்பிடிப் படகுடனையே இவர் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரிஷியஸ் நாட்டுக்குச் சொந்தமான இந்தப் படகை கடற்படையினர் சோதனையிட்டபோது, அதிலிருந்து எம் - 16 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களையும் அதற்கு பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்

No comments:
Post a Comment