Tuesday, November 27, 2012
இலங்கை::உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளில் பயங்கரவாத செயற்பாடுகள் எதுவும் இல்லாததால் இங்குள்ள விஷேட அதிரடிப்படையினர் தமது நேரத்தை மக்களின் சேம நலன்களுக்காகக் கழிக்கின்றனர் என உன்னிச்சை விஷேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி ஹெட்டிகே தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை உன்னிச்சை, ஆயித்தியமலைப் பிரதேச சிவில் பாதுகாப்பு மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் பேதே அவர் மேற்படி தெரிவித்தார்.
அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
பொலிசாருடனும் விஷேட அதிரடிப்படையினருடனும் பொதுமக்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றுவதால்; இந்தப் பிரதேசங்களில் பயங்கரவாத செயற்பாடுகளும் ஏனைய குற்றச் செயல்களும் இடம்பெறுவதில்லை. பயங்கரவாத செயற்பாடுகள் எதுவுமில்லாததால் விஷேட அதிரடிப்படையினர் தமது நேரத்தை பொதுமக்களின் சேமநலன்களைக் கவனிப்பதிலும், சிரமதானப்பணிகளிலும், இடர் முகாமைத்துவ செயற்பாடுகளிலும் செலவழிக்கின்றனர். இது இப் பிரதேசத்தை நாமெல்லோரும் சேர்ந்து அபிவிருத்தி செய்வதற்கு உதவுவதுடன் மக்கள் அச்சமும் பீதியுமின்றி நிம்மதியாக வாழ்கின்றனரென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment