Thursday, November 29, 2012
சென்னை::காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கூடிய காவிரி ஆணைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் கர்நாடக அரசு பிரதமரின் உத்தரவை முழுமையாக அமுல்படுத்தவில்லை. குறைந்த அளவு தண்ணீரை திறந்து விட்டு அதன்பிறகு அணையை மூடிவிட்டனர்.
இதனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக இரு மாநில முதல்- அமைச்சர்களும் சந்தித்து பேசி தீர்வுகாணவேண்டும் என்ற ஆலோசனையை வழங்கி, வழக்கை 30-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
இதையடுத்து பெங்களூர் சென்று கர்நாடக முதல்- மந்திரி ஜெகதீஷ் ஷெட்டரை முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று பிற்பகலில் சந்தித்து பேசுகிறார்.
இதற்காக இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க பொதுப் பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் நேற்றிரவே பெங்களூர் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment