Thursday, May 31, 2012

பிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்-அருண் தம்பிமுத்து!

Thursday,May,31,2012
இலங்கை::பிரிவினையை கண்டிக்கும் 'ஸ்ரீலங்காவுக்கான தமிழர்கள்' எனும் புதிய தமிழ் இயக்கமொன்றை ஜனாதிபதியின் ஆலோசகரான அருண் தம்பிமுத்து விரைவில் ஆரம்பிக்கவுள்ளார்.

தமிழீழ விடுதலை புலிகளினால் 1988ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாம் தம்பிமுத்துவின் மகனான அருண் தம்பிமுத்து, ஏனைய சமூகங்களை போல நாட்டு விவகாரங்களில் தமிழ் இளைஞர்களும் பங்குபற்றும் நிலைமையயை உருவாக்குவNது இந்த இயக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

சகல சமூகத்தி;னரும் சமாதானமாக வாழும் நல்லிணக்கத்தை கொண்டுவருவதே இந்த இயக்கத்தின் பிரதான நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் அபிவிருத்தியிலும் வேறு செயற்பாடுகளிலும் தாம் பங்குதாரர்களாகும் வகையிலும் உண்மையான சமாதானத்தை கொண்டுவருவதிலும் ஆர்வமுள்ள பெருமளவானோர் ஐரோப்பாவிலும் வேறு இடங்களிலும் உள்ளனர். இவர்களுக்கான அரங்கம் ஒன்றை ஏற்படுத்தவே இந்த அமைப்பை தோற்றுவிக்கவுள்ளதாக அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.

இவர்கள் தமது அபிலாஷைகளை தெரியப்படுத்த விரும்புகின்றனர். இதனால் தான் அவர்களின் கனவை நனவாக்க வேண்டும் என நான் நினைத்தேன் என அவர் குறிப்பிட்டார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அழுத்தங்களுக்கு பணிந்து போவதும் தீவிரவாத போக்கு மீண்டும் திரும்புவதும் கவலையளிக்கும் விடயங்களாகும் என அவர் தெரிவித்தார்.

பொது எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் இரா.சம்பந்தன் தேசிய கொடியை வைத்திருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மாவை சேனாதிராஜா இது தொடர்பில் வருத்தம் தெரிவித்ததோடு சகல நம்பிக்கைகளும் நொறுங்கிப் போயின என அருண் தம்பிமுத்து மேலும் குறிப்பிட்டார்.

யாழுக்கு விஜயம் செய்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்!

Thursday,May,31,2012
இலங்கை::உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்குச் சென்ற அவர் யாழ். பொது நூலகத்திற்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார். இதன்போது சிங்கப்பூர் அசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதியையும் அவர் பார்வையிட்டுள்ளார்...

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் தேவைகள் தொடர்பிலும் மாவட்டச் சிறார்களின் கல்வி மேம்பாடு தொடர்பிலும் எதிர்காலத்தில் சிங்கப்பூர் அரசு கவனம் செலுத்தும் என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் (31) விஜயம் மேற்கொண்ட சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் பொதுநூலகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இப்பயணம் மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. இங்குள்ள மக்களது வாழ்வு முன்னேற்றம் காண்பதற்கு எல்லோரது ஒன்றிணைந்த உழைப்பு முக்கியமானது.

இதனிடையே நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வு தற்போது பல்வேறு வகைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இருந்த போதிலும் இங்குள்ள சிறார்களது கல்வி மேம்பாடு மற்றும் இந்நூலகத்தின் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பிலான தேவைகள் தொடர்பில் சிங்கப்பூர் அரசு நிச்சயம் முழுமையான ஒத்துழைப்பு ஒத்தாசையும் வழங்கும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் வெளிவிவாகர அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் நூலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதுடன் தேவைகள் தொடர்பிலும் ஆராய்ந்தறிந்து கொண்டனர்.

அங்கு வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு யாழ் மாவட்டத்தினதும் நாட்டினதும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.

இதன்போது நாட்டில் வாழும் சகல மக்களின் நலன்களை முன்னிறுத்திய வகையிலும் நாட்டின் நலனையும் மக்களின் நலனையும் ஒரே தளத்தில் வைத்துக் கொண்டு தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன் சிங்கப்பூர் எவ்வாறு முன்னேற்றத்துடன் கூடியதான வகையில் அபிவிருத்தி அடைந்துள்ளதோ அதேபோன்று தமிழர் பகுதிகளும் முன்னேற்றம் காணவேண்டும் என்பதே தமது விரும்பம் எனவும் சுட்டிக் காட்டினார்.

முன்பதாக நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்திந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் அவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து வரவேற்றதைத் தொடர்ந்து சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்களின் அழைப்பின் பேரில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் சண்முகம் தலைமையிலான குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் நாளை மறுதினம் வரை தங்கியிருப்பர்.

இவ்விஜயத்தின் போது குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் மீள்குடியேற்றம் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களில் இக்குழுவினர் கவனம் செலுத்தவுள்ளனர்.

இதன்போது அவரது பாரியார் திருமதி சீதா சண்முகம் இலங்கைக்கான சிங்கப்பூர் தூதுவராலயத்தின் தூதுவர் சேவேசென் யாழ் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட இரு நாடுகளினதும் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.

புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாளை இலங்கை வருகை!

Thursday,May,31,2012
பிரித்தானியாவில் புகலிடம் மறுக்கப்பட்டு இன்று திருப்பி அனுப்பப்படவிருந்த இலங்கையர்கள் நாளை நாட்டை வந்தடைவார்கள் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களை ஏற்றிய விமானம் நாளை காலை ஏழு மணியளவில் இலங்கையை வந்தடையவுள்ளது.

அரசியல் புகலிடம்கோரி பிரித்தானியாவுக்குச் சென்ற குறித்த இலங்கையர்களை திருப்பி அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அவர்கள் நாட்டை வந்தடைந்ததும் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ச்சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர்களை தேசிய இரகசிய தகவல் பணியகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

45 நாள் தடை காலம் முடிந்தது : மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்!

Thursday,May,31,2012
வேதாரண்யம்::மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 12 ஆயிரம் பேர் நேற்றிரவு முதல் கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். 45 நாட்களுக்கு பிறகு மீன்பிடி தொழில் மீண்டும் களை கட்டி உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஏப்ரல், மே மாதங்களில் 45 நாள் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த மாதம் 15,ம் தேதி தொடங்கிய தடை காலம், நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு செல்ல ஆயத்தமாகினர். நேற்று மாலையே படகுகளை கடலுக்கு கொண்டு வந்து அதில் ஐஸ் பெட்டி, வலை உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்களை ஏற்றினர். பின்னர் கடற்கரையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 10 மீனவ கிராமத்தை சேர்ந்த 350 விசைப்படகுகளில் சுமார் 2000 மீனவர்கள் நேற்றிரவு கடலுக்கு சென்றனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து இன்று காலை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.

முதல்கட்டமாக 200 விசைப்படகுகளில் 1000 பேர் சென்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் துறைமுகங்களில் இருந்து 650 படகுகளில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நாகை, கோடியக்கரை, வேதாரண்யம், புதுப்பட்டினம், தரங்கம்பாடி, பழையாறு, பூம்புகார், வாணகிரி பகுதிகளில் உள்ள மொத்தம் 969 விசைப்படகுகளில் சுமார் 6 ஆயிரம் மீனவர்கள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு செல்லத் தொடங்கினர்.
இன்று கடலுக்கு சென்ற மீனவர்களில் பெரும்பாலானவர்கள் நாளை காலை கரைக்கு திரும்புவர். 45 நாட்களுக்கு பிறகு ஆழ்கடலுக்கு சென்றுள்ளதால் அதிக அளவு மீன்களுடன் மீனவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளா மற்றும் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து பெரிய வியாபாரிகள், ஏற்றுமதியாளர்களும் வரத் தொடங்கி விட்டனர். ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஒன்றரை மாதமாக மார்க்கெட்களில் அதிக அளவில் மீன்கள் வரவில்லை. கரையோரத்தில் பிடிக்கப்படும் சிறிய மீன்களும் ஆறு, ஏரிகளில் பிடிக்கப்பட்ட மீன்களும்தான் விற்பனைக்கு வந்தன. வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்ந்தது. இந்நிலையில் நாளை முதல் மீன்கள் வரத்து அதிகம் இருக்கும் என்பதால், விலையும் ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உன்னிச்சை அணைக்கட்டுப் பாலத்திற்குக் கீழே புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!

Thursday,May,31,2012
இலங்கை:: மட்டக்களப்பு – உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டுப் பாலத்திற்குக் கீழிருந்து நேற்று (செவ்வாய்) மாலை 5 மணியளவில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட
பெருந்தொகை ஆயுதங்கள் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன.
விமானத்தைத் சுடும் துப்பாக்கி 1, ரீ56 ரக துப்பாக்கிகள் 9, ரீ 81 மகஸின்கள் 29, ரீ 56 மகஸின்கள் 2, எம் 16 மகஸின்கள் 6, 9 எம்எம் மகஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.

மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உரப்பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிசாருக்குக் கொடுத்த தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின்பேரில் ஆயித்தியமலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். பண்டார மற்றும் வவுணதீவு விஷேட அதிரடிப்படை இரண்டாவது கட்டளையதிகாரி எஸ். எம். பிரேமச்சந்திர, விஷேட அதிரடிப்படை குண்டு செயலிழப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு ஆகியோர் ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளத்தின் அடியிலிருந்து மீட்டெடுத்தனர். சில ஆயுதங்கள் நீர் உட்புகாத கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டிருந்தன
.

சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் சம்பந்தன் கலந்துரையாட மாட்டார் – தமிழ் அரசுக் கட்சி!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கை தமிழரசுக்கட்சி மாநாடு முடிந்ததும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் சம்பந்தனுக்கு அனுப்பிய கடிதத்திற்கு அவரை சந்தித்து கலந்துரையாட வேண்டும் என தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தீர்மானித்திருந்தார்.

ஆனால் மாநாட்டிற்கு முன்னரும், மாநாட்டு அன்றும் இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட அந்த குழப்ப நிலையை அவதானித்த தலைவர் சம்பந்தன் தான் நினைத்ததிலிருந்து நீங்கிக்ககொண்டார் என இலங்கை தமிழரசுக்கட்சியினால் நேற்று (29.5.2011) மாலை மட்டக்களப்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்பரன் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் எவரையும் அழைத்து பேச தயாராக இருக்கின்றோம். தமிழ் அரங்கத்தை கூட சம்பந்தன் அழைத்துப்பேசினார். முன்னர் சம்பந்தன் முதலமைச்சருடன் பேச தீர்மானித்திருந்தார், அந்த நிலையிலேயெ மாநாடு வந்தது. மாநாடு முடியும் வரை எதிர் பார்திருந்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் இப்போது கூறுகின்ற வடக்கு கிழக்கு இணைப்பு சார்பாக கதைத்திருப்பேன் அதற்கத்தான் சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பினேன், அவர் தன்னுடன் கதையாததன் காரணமாகத்தான் மாநாட்டில் பிரதேசவாதத்தை காட்டினேன் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. அது முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைப்பது போன்று வெறும் பொய்யாகும்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாட்டை குழப்புவதற்கும் கறுப்புக்கொடிகளை கட்டுவதற்கும் காரணமாக இருந்தவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினராகும்.

இந்த மாநாடானது மட்டக்களப்பு மக்களுக்கு இன்னுமொரு வகையில் பெரும் எழுச்சியை கொடுத்திருக்கின்றது. இலங்கை தமிழரசுக் கட்சிதான் எங்கள் தாய்க்கட்சி என்பதனை தமிழ் மக்களுக்கு உணரச் செய்துள்ளது.

இந்த மாநாட்டுக்கு பல இடங்களிலிருந்து மக்கள் வருகை தந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பெருமளவிலான மக்கள் வருகை தந்து கலந்து கொண்டனர். மாநாட்டை ஒழுங்கு செய்யும்போது பல இடங்களிலிருந்தும் பல விதமான துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்தன. குறிப்பாக எமது மாவட்டத்தில் பிரதேச வாதத்தை தமது ஆயுதமாக கொண்டு கடமையாற்றும், மக்களை ஏமாற்றும் சிலர் அந்த துண்டுப்பிரசுரங்களுக்கும் தாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் கூறுகின்ற விடயங்களை விதைத்திருந்தார்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பெரிய மாநாட்டை நடாத்தினர். அவர்களின் மாநாட்டிற்காக சிங்கள மக்களை பொலனறுவையிலிருந்து அம்பாறையிலிருந்து பஸ் வண்டிகளில் ஏற்றி பறித்தார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களுக்கும் சென்று மக்களை பஸ் வண்டிகளில் ஏற்றிப்பறித்தர்கள். மாநட்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் மாதர்சங்கங்களுக்கு தைய்யல் இயந்திரங்கள், சீலைகள் விநியோகிக்கப்பட்டு அழைத்து வந்தார்கள். அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அழைத்தார்கள். அவ்வாறு அந்த மாநாட்டை நடாத்தினார்கள், இந்த வகையில் அவர்களின் மாநட்டை நாங்கள் குழப்பச்செல்லவில்லை.

மாநாடு நடாத்துவது அவர்களின் ஜனநாயகம், நாங்கள் அவர்களுக்கெதிராக ஒரு பிரசுரமும் நாங்கள் ஒட்டவில்லை. ஜனநாயகத்தை என்றும் நாங்கள் மதிப்பவர்கள் அந்தக்கட்சிக்கு ஜனநாயக உரிமை இருக்கின்றது, அவர்களின் அந்த மாநாட்டில் கூட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உங்கள் வீடுகளுக்கு வந்தால் ஈக்கில் கட்டுக்களை காட்டுங்கள் என கூறினார். அதற்கு கூட நாங்கள் துண்டுப்பிரசுரம் வெளியிடவில்லை.

அது அவர்களின் ஜனநாயக உரிமை அதற்கு மக்கள் தேர்லில் பதில் கொடுப்பார்கள். எங்களது மாநாட்டை குழப்ப நடவடிக்கை எடுத்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினிரிடம் அன்பாக கேட்கின்றேன், ஜனநாயக ரீதியாக எங்களோடு எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு உங்கள் ஆசனங்களை கைப்பற்றுங்கள் அதுதான் உங்களுக்கு வெற்றி. எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் உங்கள் திறமைகளை காட்டி அதில் நீங்கள் வெற்றி பெற்றால் மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் என நிருபிக்கப்படலாம்.

ஜனாதிபதி அவர்களிடம் சென்று இவ்வருடம் பங்குனி மாதத்தில் கலைய வேண்டிய பிரதேச சபை, மட்டக்களப்பு மாநகர சபை ஆகியவைகளை நீடிக்கச்சொல்லுவீர்களா என நான் கேட்கின்றேன். ஏன் இவற்றை நீடிக்கச்சொன்னீர்கள் மாவட்டத்திலுள்ள பிரதேச சபைகள் அத்தனையும் தமிழ் மக்கள் விடுதலைபபுலிகள் கட்சியிடமுள்ளன மட்டக்களப்பு மாநகர சபை அரசாங்க கட்சியிடம் இருக்கின்றது.

துணிச்சல் இருந்திருந்தால் அந்த தேர்தலை நடாத்தியிருக்கலாம். அத்தனை இடங்களையும் நீங்கள் கைப்பற்றியிருப்பீர்களாக இருந்திருந்தால் இந்த மட்டக்களப்பு மக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை நேசிக்கின்றார்கள் என்பது சர்வதேசத்திற்கு விளங்கக் கூடியதாக இருந்திருக்கும்.

தேர்தலில் எல்லாம் உங்களுக்கு வங்குரோத்து, ஆனால் மானமுள்ள தமிழர்கள் என துண்டுப்பிரசுரம் உங்களுக்கு இந்த நிலைமையில் தான் இவர்கள் நடந்து கொள்கின்றனர். யார் மானமுள்ள தமிழர்கள் ஒரு காலத்திலே கறுப்புச்சீலையை கண்ணிலும் முகத்திலும், தலையிலும் கட்டிக்கொண்டு திரிந்தவர்கள், அந்த சீலையை இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் கறுப்புக்கொடியாக கட்டுகின்றனர். இவர்கள் ஜனநாயக வழிக்கு வரவேண்டும்.

யுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஜனநாயம் ஏற்பட்டு விட்டது என்று அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகம் இல்லை என்பதற்கு நாங்கள் நடாத்திய மாநாட்டுக்கு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஏற்படுத்திய குந்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இலங்கை தமிழரசுக்கட்சியின் மாநாட்டில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு நடந்திருக்குமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. அந்தளவு மக்கள் வெள்ளம் சம்பந்தனை வரவேற்றனர்.

இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா தெரிவித்தார்,

பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் 14வது தேசிய மாநாடு வெற்றியை தந்துள்ளது இந்த மாநாட்டுக்கு அச்சுறுத்தல்கள் எவ்வளவு இருந்தாலும் மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றார்கள் என்பதை இந்த மாநாடு உணர்த்தியுள்ளது உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மாநாட்டுக்கெதிராக கறுப்புக்கொடிகளை கட்டினார்கள் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள் 26ம் திகதி நல்லிரவில் சில மூல வெடிச்சத்தங்கள் கேட்டன. இவை அனைத்தக்கும் காரணம் இந்த மாநாட்டுக்கு வரும் மக்களை பயமுறுத்தல் செய்து இந்த மாநாட்டில் மக்களை கலந்து கொள்ளாமல் செய்கின்ற ஒரு நோக்கமாக இருந்தது.

அது மட்டுமல்லாது பொய்ச்செய்திகளை பரப்பி மக்களை பயமுறுத்தல் செய்கின்ற நடவடிக்கைளிலும் கூட இவர்கள் செயல்பட்டிருந்தார்கள். உதாரணமாக பொலிசாருக்கு பல தகவல்கள் கிடைத்தன குறிப்பாக மாநாட்டு மண்டபத்தினுள்ளேயே குண்டு இருக்கின்றது என்ற செய்தி கூட கிடைத்திருந்தது. ஆனால் அது அப்பட்டமான பொய் என்று பொலிஸ் தரப்பு மட்டு மல்ல நாங்களும் உணர்ந்திருந்தோம் அதன் நோக்கம் மண்டபத்தினுள் குண்டு உள்ளது என்று சொன்னால் மக்கள் அதை அறிந்து கொண்டால் முண்டியடித்துக்கொண்டு போக வேண்டி ஏற்படும் அதனால் இந்த மாநாட்டை குழப்பி விடலாம் என்ற ஒரு அங்கலாய்ப்பு இருந்தது.

அந்த மண்டபத்தை மக்கள் வந்து கூடுவதற்கு முன்னர் பொலிசார் சோதணை செய்திருந்தார்கள் இவ்வாறு மக்களை எவ்வாறாவது மாநாட்டுக்கு செல்வதை தடை செய்யலாம் என்பதிலே அவர்கள் செயல்பட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
இந்த மாநாட்டில் இவ்வளவு அதிகமான மக்கள் கலந்து கொண்டார்கள் என்று சொன்னாள் அது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

அவர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் ஏன் இந்த மாநாட்டை இங்கு நடாத்த வேண்டும் என்று கூட கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ தெரியவில்லை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் காலத்துக்காலம் மாநாட்டை கூட்டி நிருவாகத்தை புதுப்பித்து கணக்கறிக்கைகள் காட்டி அவற்றை தேர்தல் ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்ப வேண்டும். இவற்றைக் கூட அறியாதவர்களாக அவர்கள் இருக்கின்றார்கள்.

ஏன் வடக்கிலிருந்து தலைமை தாங்க வரவேண்டும் கிழக்கிலிருந்து லோகேஸ்பரன் தலைமை தாங்கி இதை நடாத்தலாமே என்றும் கூட ஒரு துண்டுப்பிரசுரத்தில் எழுதப்பட்டிருந்தது. எம்மைப்பொறுத்தவரையில் இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற வடக்கு கிழக்கிலே முற்றுமுழுதாக பல கிளைகளை கொண்ட ஒரே அரசியல் கட்சி இந்த தமிழரசுக்கட்சி என்பதை மக்கள் அறிவார்கள்.

இந்த 14வது தேசிய மாநாட்டின் பொதுச்சபை கூட்டத்தில் முற்றுமுழுதாக 160 அங்கத்தவர்களும் கலந்து கொண்ட ஒரே ஒரு மாநாடு இந்த மட்டக்களப்பிலே நடைபெற்ற 14வது மாநாடு என்பதை நாங்கள் நிச்சயமாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

ஒரு தொகுதிக்கு ஐந்து பேர் என்ற அடிப்படையில் பொதுச்சபை அங்கத்தவர்கள் 160 பேர் உள்ளனர். அந்த 160 பேரும் 26ம் திகதி நடை பெற்ற பொதுச்சபை கூட்டத்திலே கலந்து கொண்டார்கள் என்றால் எங்களுக்கு இந்த மாநாடு நுறு வீதம் பூரண வெற்றியளித்த மாநாடு என்று கூறுகின்றோம். 13வது மாநாடு 2010ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடை பெற்ற போது இந்த பொதுச்சபை 160 உறுப்பினர்களில் அதிகமானவர்கள் கலந்து கொள்ளவில்லை. முழு நிறைவு இந்த மட்டக்களப்பு மாநாட்டில்தான் இருந்தது என்பதை நான் நிச்சயமாக சொல்ல வேண்டியுள்ளது. அந்தளவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டை திருப்திகரமாக நடாத்தியிருக்கின்றோம்.

மற்றவர்களை போல ஆசை வார்த்தைகளை கூறி மக்களை மாநாட்டுக்கு அழைத்து வந்தவர்கள் நாங்களல்ல. கறுப்பு கொடிகளை கூட மக்கள் அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் கறுப்புக்கொடி கட்டினார்கள் என்று ஆராயவில்லை. ஏனென்றால் அதை கட்டியவர்கள் யார் என்பது அந்த மக்களுக்கு புரிந்திருந்தது. மாநாட்டுக்கெதிரான துண்டுப்பிரசுரங்கள் பத்து பண்ணிரெண்று என்று வந்திருந்தாலும் கூட இது ஒருவரிடமிருந்துதான் அத்தனை துண்டுப்பிரசுரமும் வந்திருந்தது என்பதை மக்கள் உணர்ந்திருந்தார்கள்.

இந்த துண்டுப்பிரசுரங்களையோ கறுப்புக்கொடிகளையோ மக்கள் பெரிதாக அலட்டிக்கொல்லவில்லை என்பதுதான் உண்மை. நாங்கள் எந்தவித போக்குவரத்தும் ஏற்பாடு செய்யாமல் கூடிய மக்கள் அந்த மக்கள் என்பதை கூறி வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். அவர்கள் எதற்காக ஆசைப்பட்டும் வரவில்லை. வேஷ்ட்டிக்காகவோ சேலைக்காகவோ அவர்கள் ஆசைப்பட்டு இங்கு வரவில்லை. உணர்வின் நிமித்தம் தமிழன் என்கின்ற உணர்வின் காரணமாக வந்தார்களே தவிர வேறு எதற்காகவும் அவர்கள் வரவில்லை என்பதை தெளிவாக கூறவிரும்புகின்றேன்.

இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி.அரிய நேந்திரன் இந்த மாநட்டிற்கெதிராக பல வீதமான அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் துண்டுப்பிரசுர மூலமான அச்சுறுத்தல், சுவரொட்டிகள் மூலமான அச்சுறுத்தல், கறுப்புக்கொடிகளை கட்டிய அச்சுறுத்தல், மாநாடு நடை பெறயிருந்த மண்டபத்திற்கு தீ வைத்தது ஒரு அச்சுறுத்தல், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த பஸ் வண்டி மீது தாக்குதல் நடாத்திய அச்சுறுத்தல், களுதாவலையிலிருக்கக் கூடிய எமது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கணகசபையின் வாகணத்திற்கு பெற்றோல் குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இவர் இங்கு மாநாட்டில் இருந்து கொண்டிருக்கும் போதே அந்த குண்டுத்தாக்குதல் நடாத்திய குழு, இந்த மாநாட்டு குழுவிலிருந்த பலருக்கு தொலை பேசி மூலமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது அதன் இலக்கங்கள் கூட எம்மிடமுள்ளன. அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொடுத்துள்ளோம். ஆதரவாளர்கள் வரும் போது மாநாட்டுக்கு செல்ல வேண்டாமென அச்சுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான அச்சுறுத்தல்கள் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வந்திருப்பதென்பது ஒரு புதிய விடயமல்ல. இலங்கையில் 63 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அதில் இலங்கை தமிழரசுக்கட்சியும் ஒன்றாக உள்ளது. யாராவது எந்த விடயத்தையும் ஜனநாயக ரீதியாக எதிர்ப்புக்காட்டக்கூடிய ஒரே ஒரு கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சி என்பதை மீண்டுமொரு முறை அது நிருபித்துள்ளது.

எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு யாராவது கொடும்பாவி எரிக்கலாம். நாங்கள் தட்டிக்கேட்க மாட்டோம். எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கறுப்பு துணி காட்டமுடியும். அதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்கள் கட்சி ஆதரவாளர்கள் கல்லால் கூட எறியலாம் அவர்கள் ஆதரவாளர்களை கூட தாக்கலாம் ஏனென்றால் நாங்கள் ஜனநாயக ரீதியாக தந்தை செல்வாவின் வழியில் வந்த இந்தக்கட்சிக்கு இவ்வாறான நடவடிக்கைகள் செய்ய முடியும்

ஆனால் இதே நேரத்தில் வேறொரு கட்சிக்கு நடவடிக்கைகள் செய்தால் எந்த விளைவு வரும் என்பது அதில் தான் ஜனநாயகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாநாடு வெற்றிகரமாக முடிவுற்றுள்ளது. இந்த நாட்டின் மூலம் இன்னுமொரு செய்தியும் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஜனநாயகம் எந்தளவில் மட்டக்களப்பில் மதிக்கப்பட்டுள்ளது என்பதை வேறுவார்த்தையில் நாங்கள் சொல்லத் தேவையில்லை.

இலங்கையில் இப்பொழுது உள்ள சூழ் நிலையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டுமென்பதை துனிச்சலுடன் தட்டிக்கேட்கின்ற ஒரு கட்சியாக எங்களது கட்சி வளர்ந்திருக்கின்றது. ஜனநாயக ரீதியாக போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சிக்கு ஒரு தமிழ் பிரதேசத்திலே இன்னொரு தமிழ் குழுவினால் ஒரு அழுத்தம் வருவதென்பது உண்மையிலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகத்தான் இதை பார்க்க வேண்டியுள்ளது என நான் கருதுகின்றேன்.

இவ்வாறான இவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளைப்பற்று நாங்கள் கவலைப்படவில்லை. பீதியடைவில்லை மகிழ்ச்சியடைகின்றோம், ஏனென்றால் ஒரு ஜனநாயகக் கட்சி ஜனநாயகத்தில் வளர்ந்திருக்கின்றது ஜனநாயகத்தை பேனிப்பாதுகாக்கின்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் இந்த 14வது மாநாடு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது. இந்த மாநாடு என்பது இராஜதந்திர ரீதியாக எமத விடுதலைப்பயணம் சென்றதற்கு பிற்பாடு இடம் பெற்ற ஒரு மாநாடாகும்.

இந்த மாநாட்டுக்கு உதவியவர்கள் பலர் பொருளாதார ரீதியாக உதவியவர்கள் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த சகோதரர்கள், மட்டக்களப்பைச் சேர்ந்த புலம் பெயர்ந்தவர்கள் இதற்கு உதவியுள்ளார்கள். அதே போன்று பல இன்னல்களுக்கு மத்தியல் யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்தவர்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் அத்தோடு ஊடகங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறுகின்றோம்.

இனியாவது ஜனநாயகம் மதிக்கப்படல் வேண்டும் ஜனநாயகத்திற்குப்பின்னால் மக்கள் அணி திரளவேண்டும் என அவர் தெரிவித்தார்.

புலிகளின் தோல்விக்கு கிழக்கு முஸ்லிம்களின் மீதான தாக்குதல் முக்கிய காரணமாகும் – மாகாண சபை உறுப்பினர் ஜவாத்!

Thursday,May,31,2012
இலங்கை::வடக்கு எப்போது கிழக்கை இழந்ததோ அன்றிலிருந்து யுத்தத்தில் தோல்வியுற்றது. புலிகள் கிழக்கு முஸ்லிம்களை தாக்கித் துன்புறுத்தினார்களே அந்த வரலாற்றுத் தவறும் அவர்களின் தோல்விக்கு ஒருகாரணமாகும். என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.ஏ.ஜவாத் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா யூத் பரிமாற்று வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட ஸ்ரீ லங்கா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு நான்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்வு சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது,

இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமானதே தவிர, யாரும் பௌத்தர்களுக்குச் சொந்தமானது என்று கூறிவிட முடியாது. நாம் பெற்றிருக்கின்ற மார்க்கம்தான் வேறு இடத்திலிருந்து வந்தது. யாரும் தனிப்பட்ட உரிமை கோராமல் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற போதுதான் உண்மையான சுதந்திர வாழ்வு பிறக்கும்.

கிழக்கு மாகாணம் ஒரு முக்கியமான பிரதேசம். இங்குள்ள இளைஞர்களிடம் வீராப்பு, விவேகம், துடிப்பு குடி கொண்டிருக்கும். அதையாராலும் மாற்ற முடியாது. அவற்றை சரியாக வழிநடாத்தி இளைஞர்களாகிய நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகாண முனைய வேண்டும். தனது இலக்கை தூரமாக்கி மிக நீண்ட ஓட்டப்பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும். ஒரு இளைஞன் தான் ஒரு அரசியல்வாதியாக வர வேண்டும் என ஆசைப்படுவதைவிட ஜனாதிபதியாக வரவேண்டும் என்று நினைக்க

வேண்டும். அத்துடன் கடின உழைப்பும் வேண்டும். அப்போதுதான் நமது இலக்கை அடைய முடியும். திட்டமிடப்படாத எந்த முயற்சியும் வெற்றியளிக்காது.

இங்கு வந்துள்ள மேட்டுக்குடி வாசிகளான கண்டிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறந்த குணநலன்களை கொண்டவர்கள். அவர்களிடமிருந்து நாம் படிப்பினை பெறுவதோடு, எமது கிழக்கு மண்ணின் மகிமையையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

கல்முனை உவெஸ்லி என்ற தமிழ் பாடசாலையில் படித்த பெருமையும், யாழ்ப்பாணத்திற்குச் சென்று கல்வி கண்ட பெருமையும் என்னிடமுள்ளது. இவ்வாறு, எமது நாட்டின் எல்லா இடங்களுக்கும் இளைஞர்களாகிய நீங்கள் சென்று பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மிக இக்கட்டான வயதுப்பருவத்தில் நீங்கள் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். மிகக்கவனமாக நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். காதலைப்பற்றி இங்கு கூறப்பட்டது. சிறுவர்கள் தொட்டு முதியவர்கள் வரை மனிதர்களுக்குள்ளும் உலகிலும் உள்ள காதலினால்தான் இன்று உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. உணர்வுகளுக்குள் இருந்தால் அது காதலாக இருக்கும். உணர்ச்சிகளுக்குள் போனால் அது காமமாக மாறிவிடும். நீங்கள் இப்போது இருக்கின்ற பருவம் உணர்வுகளும் உணர்ச்சிகளும் கலக்கின்ற ஒரு பொல்லாப்பான காலமாகும். காதல் உணர்ச்சிகளுக்குள்ளாகி காமமாகி விடக்கூடாது. அப்படியான நிகழ்வுகளோடு சங்கமித்த நிலையில்தான் நானும் இங்கு பேசிக் கொண்டிருக்கின்றேன். நான் ஒரு சிறந்த தகப்பனாக இருக்க வேண்டும் என்று நினைத்து நடந்திருக்கின்றேன்.

இளைஞர்களின் இந்த பயணத்துக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி எமது பிரதேசமும் மக்களும் சிறந்தவர்கள் என்ற மனப்பதிவை இவர்கள் கொண்டு செல்லும் வகையில் எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். என்றார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மதகுருமார்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் உட்பட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட, மாகாணப் பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூவர் கைது!

Thursday,May,31,2012
இலங்கை::உப்புவெளி பொலிஸ் பிரிவில் கைக்குண்டொன்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உப்புவெளி பொலிஸ் பிரிவின் புதுக்குடியிருப்பு துவரங்காடு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக பொலிஸார் கூறினார்...

உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

அம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் தாய் சேய் சிகிச்சை நிலையம் திறப்பு!

Thursday,May,31,2012
இலங்கை::அம்பாந்தோட்டை காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாய் மற்றும் சேய்க்கான சிகிச்சை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.

அம்பாந்தோட்டைக்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் காவன்திஸ்ஸபுரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையத்திற்கான கட்டிடத் தொகுதியை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சகிதம் கலந்து கொண்டு நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிலையத்தின் மூலம் அப்பகுதியிலுள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

ப‌ந்‌த்- பெ‌ங்களூ‌ரி‌ல் 3 அரசு பேரு‌ந்துக‌ள் எ‌ரி‌ப்பு!

Thursday,May,31,2012
பெ‌ங்களூர்::‌முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌ம் காரணமாக க‌ர்நாடகா மா‌நில‌ம் பெ‌ங்களூ‌ரி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ‌தீ வை‌த்து எ‌ரி‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் அ‌ங்கு பெரு‌ம் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது.

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்வு க‌ண்டி‌த்து நாடு தழு‌‌வி ப‌ந்‌‌‌த் பாஜக ஆளு‌ம் பெ‌ங்களூ‌‌ரி‌ல் முழு அள‌வி‌ல் நட‌ந்து வரு‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் உ‌த்தரஹ‌ள்‌ளி, ஒச‌க்கோ‌ட்டை, கே.ஆ‌ர்.புர‌ம் ஆ‌‌கிய பகு‌திக‌ளி‌ல் மூ‌ன்று அரசு பேரு‌ந்துகளை ம‌ர்ம நப‌ர்க‌ள் ‌தீ வை‌த்து எ‌ரி‌த்தன‌ர். இதனா‌ல் உடனடியாக பேரு‌ந்து போ‌‌க்குவர‌த்து ‌நிறு‌த்‌த‌ப்ப‌ட்டது.

மேலு‌‌ம் அச‌ம்பா‌வித‌ங்க‌ள் ஏ‌ற்படாம‌ல் இரு‌க்க பெ‌ங்களூ‌ர் உ‌ள்பட 10 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள ப‌‌ள்‌ளிகளு‌க்கு ‌விடுமுறை அ‌‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. பெ‌ல்லா‌ரி‌யி‌ல் பேரு‌ந்துக‌ள் ‌மீது ம‌ர்ம நப‌ர்க‌ள் க‌ல்‌‌வீ‌சி தா‌க்‌‌கியதா‌ல் சேத‌ம் அடை‌ந்தது.

ஆனா‌ல் இர‌யி‌ல்க‌ள், ஆ‌ட்டோ‌க்க‌ள் வழ‌‌க்க‌ம் போ‌ல் இய‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கையாக பல இட‌ங்க‌ளி‌ல் போ‌லீசா‌ர் கு‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்!

Thursday,May,31,2012
இலங்கை::பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்கும் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக நிமால் சிறிபால டி சில்வாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாட்டின் சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணும் புதிய முனைப்புக்களுக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முனைப்புகளில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க முக்கிய பங்காற்றுவார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா!

Thursday,May,31,2012
இலங்கை::தடுத்து வைக்கப் பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வினைதிறனான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் - அமெரிக்கா:-

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் வரைவானதும், வினைதிறனானதுமான நீதிமன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பில் தமது நாடு அக்றை கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்பட வேண்டும் எனவும் அமெரிக்க கூறியுள்ளது.

இல.கணேச‌ன், பொ‌ன்.ரா‌தா‌கி‌ரு‌ஷ்ண‌ன் கைது!

Thursday,May,31,2012
செ‌ன்னை::பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

பெ‌ட்ரோ‌ல் ‌விலையை அ‌ண்மை‌யி‌ல் ம‌த்‌‌திய அரசு ‌லி‌ட்டரு‌க்கு ரூ.7.50 காசு உய‌ர்‌த்‌தியது. இ‌ந்த ‌விலை உய‌ர்வை ‌திரு‌ம்ப பெற வ‌‌லியுறு‌த்‌தி நாடு தழு‌‌விய வேலை ‌நிறு‌த்த‌த்த‌ி‌ற்கு பா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள் அழை‌ப்பு ‌விடு‌த்தன.

இதையடு‌த்து த‌மிழக‌ம் உ‌ள்பட நாடு முழுவது‌ம் இ‌ன்று முழு அடை‌ப்பு நட‌ந்து வரு‌கிறது. ஆனா‌ல் த‌மிழக‌த்‌தி‌ல் கோவை, ‌திரு‌ப்பூ‌ர், ஈரோ‌ட்டை த‌விர பெ‌ரிய அள‌வி‌ல் பா‌தி‌ப்பு இ‌ல்லை.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வை க‌ண்டி‌த்து செ‌ன்னை அ‌ண்ணாசாலை‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்ய மு‌ய‌ன்ற பா.ஜ.க. மா‌நில தலைவ‌ர் பொ‌ன்.ராதா‌கிரு‌ஷ்ண‌ன், மு‌ன்னா‌ள் தலைவ‌ர் இல.கணேச‌ன் உ‌ள்பட 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

செ‌ன்னை தா‌ம்பர‌ம் இர‌‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த 50 பா.ஜ.க.‌வினரு‌ம், ‌‌திரு‌வ‌ள்ளூ‌‌ர் மாவ‌ட்ட‌ம் ‌திரு‌நி‌ன்றவூ‌ரி‌ல் இர‌யி‌ல் ம‌றிய‌ல் செ‌ய்த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சியை சே‌ர்‌ந்த 50 பேரு‌ம் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

‌விழு‌ப்புர‌த்‌தி‌ல் இர‌யி‌‌லி‌ல் ஈடுப‌ட்ட மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சியை சே‌ர்‌ந்த 100 பே‌ர் கைது ச‌ெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

நீயா? நானா? போட்டி: (புலி)கூட்டமைப்புக்குள்ளும் ஏழரை! சுரேஸ் - சம்பந்தன் மோதல்!




Thursday,May,31,2012
இலங்கை::நீயா? நானா? போட்டி: (புலி)கூட்டமைப்புக்குள்ளும் ஏழரை! சுரேஸ் - சம்பந்தன் மோதல்:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை (புலிகளின்) பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார்.

அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பீபீசி தமிழோசையிடம் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் சம-பங்காளிகளாக கருதப்பட வேண்டும் என்றும் (புலி)சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் பொதுவான அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர்களை இப்போது தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் உள்வாங்கியிருப்பதன் மூலம் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிதான் பிரதானமானது என்று கருதுவது தவறு என்றும் (புலிகளின்)பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் தமிழரசுக் கட்சி அடிப்படையில் 3 பாராளுமன்ற உறுப்பினர்களையே வென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரா.சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றக் கட்சிகளிடத்திலும் மாறுபாடான கருத்துக்களே இருப்பதாகவும் (புலி)பிரேமச்சந்திரன் கூறினார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் நோக்கம் தம்மில் எவருக்கும் இல்லை என்று அந்தக் கூட்டமைப்புக்கும், அதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் தலைமை தாங்கும் இரா.சம்பந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

நாட்டுக்கு உள்ளேயும் சர்வதேச மட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்தியே நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுத்துவருவதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பில் நடந்தது தமிழரசுக்கட்சின் தேசிய மாநாடு, சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில் நீண்டகால அரசியல் வரலாற்றைக் கொண்டிருக்கின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது´ என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கஹவத்தை வரஹபிட்டிய பகுதியில் தீயில் எரிந்த வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன!

Thursday,May,31,2012
இலங்கை::கஹவத்தை வரஹபிட்டிய பகுதியில் தீயில் எரிந்த வீடொன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு சடலங்களும் 51 மற்றும் 58 வயதான சகோதரிகள் இருவருடையதென ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மேலும் இவர்கள் இருவர் மட்டுமே சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசித்துவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன

'சர்ச்சை புகழ்' ராணுவத் தளபதி வி.கே. சிங் இன்று ஓய்வு: ஆனால்.. விசாரணை ஆரம்பம்!

Thursday,May,31,2012
புதுடெல்லி::ராணுவத்திற்கு தீங்கு செய்வதாக ராணுவத் தளபதி வி.கே.சிங் மீது, முன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் அளித்த புகார் மனு மீது விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு செயாலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ராணுவ அமைச்சகத்துக்கு, தேஜிந்தர் அனுப்பிய புகார் மனுவில், '31-ம் தேதியுடன் ஓய்வு பெறும் வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ராணுவ ரகசியங்களை பகிரங்கமாக வெளியிட்டதன்மூலம் நாட்டிற்கு எதிராக சதி செய்து வருகிறார். அதற்கான ஆதாரங்களை இக்கடிதத்துடன் இணைத்துள்ளேன். எனவே அவர் மீது ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தாங்கள் ஆணையிட வேண்டும். வி.கே.சிங் மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் நான்கு பேர் மீது உடனடியாக ராணுவச் சட்டப்பிரிவு 63-ன் கீழ் முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தகுதியானவர் நீங்கள் தான்’ என்று கூறியிருந்தார்.

வி.கே.சிங் ஓய்வுபெறும் முன்னர் அவர்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே ராணுவ அமைச்சரிடம் புகார் செய்ததாகவும் தேஜிந்தர் குறிப்பிட்டுள்ளார். ராணுவச் சட்டப்பிரிவு 123-ன் படி ராணுவ அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் பணியிலிருக்கும்போது செய்யும் தவறுகளுக்காக, அவர்கள் ஓய்வுபெற்று 3 ஆண்டுகளுக்குள் வரை அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ராணுவ லெப்டினண்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் தனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக ராணுவ அதிகாரி வி.கே.சிங் மார்ச் 5-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஆதாரங்களுடன் புகார் கூறியிருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து தேஜிந்தர் சிங் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

தேஜிந்தர் சிங் ராணுவ புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்தபோது 2010-ம் ஆண்டு தொலைபேசி ஒட்டுக்கேட்பு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனது பதவிக் காலத்தின் கடைசி சில மாதங்களில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய இந்திய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங் இன்று (மே 31) ஓய்வு பெறுகிறார்.

62 வயதாகும் சிங், ராணுவத்தில் 42 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இதையடுத்து கிழக்கு பிராந்திய கமாண்டராக உள்ள ஜெனரல் விக்ரம் சிங், புதிய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்கிறார். அவர் இந்தப் பதவியில் 2 ஆண்டுகள் 3 மாதங்கள் இருப்பார்.

2010ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராணுவத் தலைமைத் தளபதியாக வி.கே. சிங் பொறுப்பேற்றார். நேர்மையான அதிகாரியான அவர், முதலில் வயது தொடர்பான சர்ச்சையில் சிக்கினார். ராணுவ செயலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1950 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், ஜெனரல் அலுவலகத்தில் அவரது பிறந்த தேதி மே 10, 1951 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து அவர் ஓய்வு பெறும் வயது குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே அவர் ஓய்வு பெற வேண்டும் என மத்திய அரசு சொல்ல, அடுத்த ஆண்டு தான் எனக்கு உண்மையான ரிடையர்மென்ட் ஏஜ் என்று பிடிவாதம் பிடித்தார் சிங். ஆனாலும் கடைசியில் அரசு சொன்னது போல இன்று ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து ராணுவத்தின் வலிமை குறித்து பிரதமருக்கு இவர் எழுதிய ரகசிய கடிதம் பத்திரிகைகளில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அடுத்ததாக தரக்குறைவான டாட்ரா கவச வாகனங்களை ராணுவத்துக்கு வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட தனக்கு ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தேஜிந்தர் சிங் ரூ. 14 கோடி லஞ்சம் அளிக்க முன்வந்தார் என்று கூறி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தினார் சிங்.

இவ்வாறு பல சர்ச்சைகளுக்கு இடையே தனது பதவிக் காலத்தின் கடைசி நாட்களைக் கடந்த சிங் இன்று ஓய்வு பெறுகிறார்.

இந் நிலையில் தேஜிந்தர் சிங் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய வி.கே. சிங் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆண்டனி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை: நவநீதம்பிள்ளை உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது-அரசாங்கம்!

Thursday,May,31,2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதான் அரசிற்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடுவதாகவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணிக்க அரசியல் தீர்வை ஏற்படத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சரவையின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில்,

உள்நாட்டில் 30 ஆவது ஆண்டு கால பயங்கரவாதத்தை ஒழித்து நிலையான சமாதானத்தையும் சுதந்திரத்தையும் இலங்கையில் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் முன்னேற்றங்களை காண்பதற்கான வழிமுறைகளை அரசு பல்வேறு துறைகளிலும் கையாண்டு வருகின்றது. சர்வதேசம் கூறுவது போன்று அவசரமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது.

குறிப்பாக தற்போது வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என்று பிரித்தானியா போன்ற நாடுகள் கூறி வருகின்றன. எந்தவொரு சர்வதேச நாட்டினதும் அழுத்தங்களையோ ஆலோசனைகளையோ அரசாங்கம் விரும்பவில்லை. எனவே பிரித்தானியா இலங்கையின் உள்ளார்ந்த விடயங்களில் தலையிடும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் 8 ஆயிரம் பேர் வரையிலானோரை புனர்வாழ்வு அளித்து அரசு விடுவித்துள்ளது. இது குறித்தும் சர்வதேச நாடுகள் தலையீடுகளை மேற்கொள்கின்றன. நீதிமன்ற பொறிமுறையின் அடிப்படையில் இடம்பெற வேண்டிய விடயங்களை பிறிதொரு நாடு வலியுறத்துகின்றமையானது கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

அந்நிய நாடுகள் கூறுவதைத்தான் செய்ய வேண்டுமென்றால் அரசியலமைப்போ சட்டங்களோ நாட்டிற்கு தேவையில்லை. எனவே அரசாங்கம் தேசிய கொள்கைகளில் நிலையான உறுதியுடனேயே இருக்கின்றது. ஜனநாயக நடவடிக்கைகளை உள்நாட்டில் முன்னெடுக்க பிரிதொருவரின் ஆலோசனை தேவையில்லை. நாட்டுக்குள் எந்தவொரு சர்வதேச நட்டவர்களும் வரலாம். அதற்கு எவ்விதமான தடைகளும் கிடையாது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இந்திய எதிர்க்ட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையில் சர்வக் கட்சிகளின் பாராளுமன்றக் குழுவினர் இலங்கை வந்துச் சென்றனர். இக் குழுவினர் உள்நாட்டின் முன்னேற்றங்களை வெளிப்படையாகவே பாராட்டி விட்டுச் சென்றனர். இதேபோன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இலங்கைக்கு வந்து விட்டுச்செல்லலாம். ஆனால் நவநீதம்பிள்ளையின் இலங்கை மீதான பார்வை ஓரக்கண் பார்வையாகவே காணப்படுகின்றது. எனவே இவரின் வருகையும் நிலைப்பாடும் நாட்டிற்கு எதிராக காணப்படுமாயின் அதனை அரசு அனுமதிக்காது என்றார்.

கருணாநிதி பிறந்தநாள்: சென்னை செல்ல அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனு!

Thursday,May,31,2012
புதுடெல்லி::திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த தினத்தையொட்டி சென்னை செல்ல அனுமதி கோரி அக் கட்சியின் எம்பி கனிமொழி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி, அந்த வழக்கு விசாரணைக்காக டெல்லியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவருடைய தந்தை கருணாநிதியின் பிறந்தநாள் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை செல்ல அனுமதி கோரி, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

டெல்லியில் கனிமொழி-ராசாவுடன் துரைமுருகன் சந்திப்பு:

முன்னதாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவைத் தமிழக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

ராசாவின் வீட்டில் சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலையான ராசா, நீதிமன்ற அனுமதியின்றி தமிழகத்துக்குச் செல்லக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இதையடுத்து அவரை தமிழகத்தில் இருந்து செல்லும் நூற்றுக்கணக்கான திமுகவினர் சந்தித்து வருகின்றனர்.

இந் நிலையில் அவரை துரைமுருகன் சந்தித்துப் பேசியுள்ளார். ராசா தமிழகத்துக்கு வர முடியாது என்பதால், அவரிடம் கட்சி விவகாரங்கள் குறித்து பேசுவதற்காக துரைமுருகனை கருணாநிதி அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது.

ராசாவை சந்தித்த துரைமுருகன் பின்னர் கனிமொழியையும் சந்தித்துப் பேசினார்.

பெகுரா, பல்வா வெளிநாடு செல்ல அனுமதி:

இதற்கிடையே, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் சித்தார்த்த பெகுரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா உள்பட 6 பேர் வெளிநாடு செல்ல டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் முடிவடையும் தருவாயில் – வடமாகான ஆளுனர் - ஜீ.ஏ சந்திர சிறீ!

Thursday,May,31,2012
இலங்கை::வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைய உள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களில் மீதமாக உள்ளவர்கள் இங்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும், வடமாகான ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திர சிறீ (ஓய்வு) நேற்று (மே 29) தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் மற்றும் மிதிவெடியகற்றள் நடவடிக்கைகளானது தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் சரிவர நிறைவேற்ற, மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஆளுனர் தனது நன்றிகளையும்,

பாராட்டுக்களையும் தெரிவித்தார். சர்வதேசத்தின் சில அமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 295,873 பேரையும் சிறப்பான முறையில் மீள்குடியமரத்த நடவடிக்கையெடுத்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நலன்புரி நிலையங்களில் மீதமாக 6,031 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தார். இவர்களுள் கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் 2,562 பேரும், ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் 3,469 பேரும் தங்கியுள்ளனர்.

இவர்களது பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் மிதிவெடியகழ்வில் ஏற்படும் தாமதமே மீள்குடியமர்தலில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் எனத் தெரிவித்தார். சின்னநகர், புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இம் மாத இறுதிக்குள் மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் பூரத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்பலவான் பொப்பானை, மந்தவில் முல்லைத்தீவு மேற்கு மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் ஜூலை மாத இறுதிக்குள் பணிகள் பூர்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
.

சிங்கப்பூர் இலங்கைக்கிடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் சுற்றுலாத் துறையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் ஆரம்பமான சிங்கப்பூர் - இலங்கை வர்த்தக சங்கத்தின் மாநாட்டிலும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலந்துகொண்டுள்ளார்.

இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமையும், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் பந்த்: பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை!

Thursday,May,31,2012
சென்னை::எதிர்க்கட்சிகள் பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன .இதையடுத்து தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பஸ்களை மறித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளார். பெட்ரோல்​ டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் இன்று 'பந்த்' போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆட்டோக்கள் ஓடாது என்று பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்புடன் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து பஸ் டெப்போக்கள், பஸ் நிலையங்களில் நள்ளிரவு முதலே போலீசார் நிறுத்தப்படுகிறார்கள். இன்று அதிகாலையில் இருந்து வழக்கம்போல் பஸ்களை இயக்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:​ 'பந்த்' என்ற பெயரில் வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகள் அடைக்கச் சொல்லி வற்புறுத்தினாலோ, பஸ்களை மறித்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பந்த் தொடர்பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் பிறப்பிக்கப்பட்டிருக்கும் உத்தரவில், எந்த சூழ்நிலையிலும் வன்முறைக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுளளது. சென்னையில் போலீஸ் கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் ஆகியோரது மேற்பார்வையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கோயம்பேடு பஸ்நிலையம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும் நடந்தது.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் - கரு ஜயசூரிய!

Thursday,May,31,2012
இலங்கை::தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை நடத்துவதற்கு முன்னர் பூரண அதிகாரம் கொண்ட சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவையும், அரச சேவை ஆணைக்குழுவையும் ஸ்தாபிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக அவர் கூறினார்.

இதேவேளை தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

அரசியலில் வெவ்வேறு கட்சிகள் என்ற ரீதியில் செயற்படுகின்ற போதிலும், தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெறும் விடயங்களில் அவருடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு சில கடமைகள் உள்ளதாகக் குறிப்பிட்ட கரு ஜயசூரிய, அவர் தைரியம் உடையவர் எனவும் அவர் தொடர்பில் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார்.

நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே அனைவரினதும் தற்போதைய தேவையாக உள்ளதெனவும் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கும் - தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கையின் விவசாயம், கடற்றொழில், கல்வித் துறை மேம்பாட்டுக்காக தாய்லாந்து பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. தாய்லாந்தின் பிரதமர் யின்லக் சினவத்ர இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் பெளத்த மத, கலாசார செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் நேற்றுக் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாட்டு வெளிவிவகார அமைச்சுகளுக்கு இடையில் அரசியல் கலந்துரையாடல் தொடர்பான ஒப்பந்தமும் குற்றச் செயல்களைப் பொறுத்தவரை அந்நியோன்ய சட்டரீதியான ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் இருதரப்பு ஒப்பந்தத்தை வலுவூட்டுவதே மற்றைய ஒப்பந்தமாகும்.

இலங்கை ஜனாதிபதி, தாய்லாந்து பிரதமர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாய்லாந்துக்கு நன்றி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அவதானம் கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக, முதலீட்டு மட்டங்களை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த குழுவை அமைப்பதன் அவசியம் பற்றியும் இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்தனர்.

தாய்லாந்தில் விசேட துறை கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை தொடர்பாகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் போது முக்கியமான துறைகள் பற்றி முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

மாணிக்கக்கல், ஆபரண துறை தொடர்பாகவும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. விவசாய, கடற்றொழில் துறைகளில் தாய்லாந்து பெற்ற முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கைக்கு தேவைப்படும் தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் தாய்லாந்தின் பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இதற்காக ஒன்றிணைந்த குழுவை நியமிக்கவும் தாய்லாந்து பிரதமர் யோசனை தெரிவித்தார். இலங்கையில் நிர்மாண முதலீடு தொடர்பாக ஊக்குவிப்பதை குறிப்பிட்ட ஜனாதிபதி, உல்லாசக் கைத்தொழிலில் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் விளக்கம் அளித்தார்.

வலய ஒத்துழைப்பு தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறினர். 2015-2017 மனித உரிமைகள் குழுவில் தாய்லாந்தின் பிரதிநிதித்துவத்துக்கு இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களின் செயற்பாடு தொடர்பாக கருத்துப் பரிமாறலில் ஒருமித்து செயற்படும் தேவை பற்றி இரு தலைவர்களும் அவதானம் செலுத்தினர்.

இலங்கையில் விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி தாய்லாந்து பிரதமருக்கு அழைப்பு விடுத்தார். இதனை அவர் ஏற்றுக்கொண்டார். இலங்கையின் இயற்கை வனப்பு, இலங்கையர்களின் நல்லெண்ணம் போன்றவை தொடர்பாகவும் பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இலங்கையில் ஜனாதிபதி சமாதானத்தை உருவாக்கியமைக்காக அவர் மகிழ்வையும் தெரிவித்துக்கொண்டார். அமைச்சர் விமல் வீரவன்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலர் லலித் வீரதுங்க, வெளி உறவுகள் அமைச்சின் செயலர் கருணாதிலக்க அமுனுகம, தாய்லாந்தின் இலங்கை தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்கு கொண்டனர்.


நாட்டின் அபிவிருத்திக்கு இடையூறான சட்டங்களை தளர்த்த அரசு நடவடிக்கை

மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நடைபெற்ற பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்ததன் பின்னர் தற்பொழுது இலங்கை அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய நாடாக இருக்கின்றது. அதன்மூலம் நாடு அபிவிருத்திப் பாதையில் பிரவேசித்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முதலீட்டுக்கு உள்ள தடைகள் அகற்றப்பட்டு நடைமுறையில் இருந்த சட்டங்களும் ஒழுங்குவிதிகளும் தளர்த்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்படியும் கேட்டுக்கொண்டார்.

நேற்று முன்தினம் (29) பிற்பகல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உள்ள புனித ரெஜிஸ் ஹோட்டலில் அந்நாட்டில் வாழ்கின்ற இலங்கையர்களைச் சந்தித்தபோது ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தாய்லாந்தில் தொழில் செய்கின்ற மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்ற பெரும் எண்ணிக்கையிலானவர்களும் அமைச்சர் விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் ஜெனரல் சாந்த கோட்டேகொட ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிவேகத்தை கடந்த இரண்டு ஆண்டுகளில் 8 வீதமளவில் பேணக்கூடியதாக இருந்தது. இக்காலப்பகுதியில் அரசாங்கம் வட மாகாணத்தின் அபிவிருத்திக்காக நடைமுறைப்படுத்திய வேலைத்திட்டங்களின் பெறுபேறாக அம்மாகாணத்தின் அபிவிருத்தி வேகம் 22% என்ற உயர்ந்த அளவில் உயர்ந்துள்ளது. உண்மை அதுவாக இருப்பினும் ஒருசில இணையத்தளங்கள் நாட்டின் உண்மை நிலையை திரிபுபடுத்தி சர்வதேசத்திற்கு தவறான பிரசாரத்தை முன்னெடுக்கின்றன.

உலகத்தில் எங்கு வாழ்ந்தாலும் இலங்கையர்கள் இந்நிலையை சரியான முறையில் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டும்.

எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அனைவரும் நாட்டை நேசிக்க வேண்டும். எதிர்கால சந்ததியினர் பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது அரசின் நோக்கம்.

வர்த்தகர்களுடன் சந்திப்பு தாய்லாந்தில் வாழ்கின்ற வர்த்தக சமூகத்தினரையும் தொழில் செய்கின்றவர்களையும் சந்திப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். உங்களிடமிருந்து பொருளாதாரத்திற்கு பெரும் சக்தி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக நமது நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி இன்று அனைத்து இனங்களும் ஒரே நாட்டில் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சமுதாயம் ஒன்று உருவாகியிருக்கின்றது.

அன்று வடக்கிற்கும் கிழக்கிற்கும் போகப் பயந்தவர்கள் இன்று பயமின்றி வடக்கு கிழக்கிற்குப் போவது மாத்திரமின்றி அங்கிருப்பவர்களும் தென்னிலங்கைக்கு வரக்கூடியதாக இருக்கின்றது. நாட்டில் அந்த நிலைமையை உருவாக்கியதன் பின்னர் எமக்கிருக்கும் சவால் அன்று இடம்பெயர்ந்திருந்த சுமார் 3 இலட்சம் மக்களை மீளக் குடியமர்த்துவதாகும். அதற்கும் முன்பிருந்த சவால் இப்பிரதேசங்களில் புதைக்கப்பட்டிருந்த இலட்சக்கணக்கான கண்ணிவெடிகளை அகற்றுவதாகும்.

அக்கண்ணிவெடிகளை அகற்றி அவர்களை மீளக் குடியேற்றி அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கியிருக்கின்றோம். இன்னும் சுமார் 5000 பேர் மாத்திரமே குடியமர்த்தப்படவிருக்கின்றனர்.

நீர், மின்சாரம் மாத்திரமல்ல, அழிக்கப்பட்டிருந்த பாலங்கள், மதகுகள், பாதைகள், புகையிரத பாதைகள் உள்ளிட்ட அழிக்கப்பட்ட அனைத்தும் மீள கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இலங்கை இப்பொழுது 8% அபிவிருத்தி வேகத்தைப் பேணிச் செல்கின்றது. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவ்வபிவிருத்தி வேகத்தைப் பேணக்கூடியதாக இருந்துள்ளது. வடக்கில்அபிவிருத்தி வேகம் 22% ஆக இருப்பதிலிருந்து நாம் வடக்கில் எவ்வளவு வேலைகளைச் செய்திருக்கிறோம் என்பது தெரிகிறது.

குறிப்பாக எமது முன்னேற்றப் பயணத்தை திரிபுபடுத்துகின்ற சமுதாயமே இன்று இருக்கிறது. ஒரு நிறுவனம் 8 இணையத்தளங்களை நிர்வகிக்கின்றது. இவை நாட்டுக்கு எதிராக சேறு பூசும் வேலைகளைத்தான் செய்கின்றன. வெளிநாட்டவர்கள் இலங்கையைப்பற்றிய செய்திகளைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்விணையத்தளங்கள்தான் இருக்கின்றன. இவற்றின் ஊடாக இலங்கையைப்பற்றி தவறான படத்தை சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.

நீங்கள் அவ்வளவு தூரத்தில் இல்லை. சிலர் இலங்கைக்கு வந்து இலங்கையில் சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கை தொடர்பிலான அவர்களுடைய அனுபவங்களை எடுத்துக் காட்டுவதுபற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமது தாய்நாட்டை நேசிக்க வேண்டும். நீங்கள் எங்கே வாழ்ந்தா லும் உங்களுக்கான அரசாங்கத்தின் கடமைகளை நாம் நிறைவேற்ற தயாராக இருக்கின்றோம். இந்த நாடு எப்படி அபிவிருத்தியடைந்திருக்கிறது என்பதை பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு வந்தபோது காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நாட்டின் அபிவிருத்தியைப் பார்க்கின்றபோது 30 வருட யுத்தத்தால் நாம் எவ்வளவு பின்னடைந்துள்ளோம் என்பது தெரிகிறது. எமது தாய்நாட்டை முன்னேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.

உங்கள் பிள்ளைகள் நாட்டுக்கு வந்து இது எனது தாயின் தாய்நாடு, இது எனது தந்தையின் தாய்நாடு என்று கூறி பெருமைப்படக்கூடிய நாடொன்றை உருவாக்குவதே எமது நோக்கமாகும். எமது பொறுப்பும் இலக்கும் அதுவாகும். அதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள வர்த்தகர்களை நமது நாட்டுக்கு அழைத்துவந்து நமது நாட்டில் அபிவிருத்திக்காக திறக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய பல்வேறு கைத்தொழில்களில் முதலீடு செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். சில நேரங்களில் இருக்கின்ற சட்டதிட்டங்கள் அபிவிருத்திக்கு இடை யூறாக இருக்கின்றன. வர்த்தகர்களுக்கு இடையூராக இருக்கின்றன.

அரசாங்கம் அத்தகைய சட்டதிட்டங்களைத் தளர்த்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. அவ்வாறு தளர்த்துவதன்மூலம் வர்த் தகர்களுக்கு இலங்கையை முதன் மையாகக்கொண்டு தொழில்முயற்சிகளையும் கைத்தொழில்களையும் ,விuபிக்க முடியும் என நம்புகிறேன்.

குறிப்பாக தமது நாட்டின் அபிவிருத்திக்கும் அதேபோன்று நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் செய்யக்கூடிய சேவையை தயங்காது நிறைவேற்ற வாருங்கள் என நான் உங்களை அழைக்கின்றேன். ஒரு சிலர் நாட்டைப்பற்றி செய்கின்ற பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நாட்டின் உண்மையான நிலைமையை நாட்டுக்கு வந்து பாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் பெருமிதமடையக்கூடிய நாடொன்றைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி உங்கள் அனைவருக்கும் நல்லதோர் எதிர்காலம் கிட்டுக என பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்றுக - பியசிறி விஜேநாயக்க!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இறைமை உடைய ஒரு நாடு எனவும், பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இல்லை எனவும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவாகக் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், இலங்கை படையினரை கட்டுப்படுத்துவதற்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு எந்தவொரு உரிமையும் இல்லையென பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.

வடக்கில் ஏன் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்த உயர்ஸ்தானிகருக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதகாவும் கூறினார்.

குறித்த உயர்ஸ்தானிகரை நாட்டிற்கு எதிராக செயற்பட்டமைக்காக உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்...

எந்த யோசனையும் நிறைவேற்றப்பட கூடாது!

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணை தொடர்பான சர்வதேசத்தின் எந்த யோசனையையும் நடைமுறைப்படுத்த கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜயநாயக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எங்களால் நிறுவப்பட்டது.

அதில் நாட்டிற்கு ஏற்புடையவற்றை மாத்திரமே நடைமுறைப்படுத்துவோம்.

அதேபோல் ஜெனிவாவில் நிறைவேற்ற்பட்ட பிரேரணையை மக்கள் எதிர்க்கின்றனர்.

ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடொன்றை செய்து தருமாறும் மக்கள் கோருவதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியா? பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம்

Thursday,May,31,2012
புதுடெல்லி::ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா? என பிரதமர் மன்மோகன்சிங்கிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தற்போது வகிக்கும் பதவியில் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று பதில் அளித்தார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியன்று முடிவடைகிறது. அதற்கு மறுநாள் புதிய ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும். இதற்கான தேர்தல் நடவடிக்கைகள் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என தெரிகிறது. காங்கிரஸ் சார்பாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்படலாம் என யூகங்கள் வெளியாயின. இதுகுறித்து அடுத்த மாதம் 4ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. முன்னாள் சபாநாயகரும்,

தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான பி.ஏ.சங்மா குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரதமர் மன்மோகன்சிங் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கடந்த வாரம் செய்திகள் வெளியானது. மியான்மரிலிருந்து நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மன்மோகன்சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இப்போது இருக்கும் பதவியில் தாம் சந்தோஷமாக இருப்பதாக மன்மோகன் பதில் அளித்தார்.

Wednesday, May 30, 2012

சைக்கிள் ரேஸ் வீரர்களுடன் 1833 கி.மீ. ஓடிய அசத்தல் நாய்!

Wednesday,May,30,2012
சீனாவில் சமீபத்தில் நடந்த சைக்கிள் ரேஸில் ஏராளமான வீரர்களுடன் சேர்ந்து நாய் ஒன்றும் பங்கேற்று 1,833 கி.மீ. தூரம் ஓடியது.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் இருந்து திபெத் வரை சைக்கிள் பயணப் போட்டி நடத்தப்பட்டது. பந்தயம் துவங்கும் முன்பு அப்பகுதியில் வாலாட்டியபடி நின்றிருந்தது சியாசோ என்ற நாய். சியாவோ யாங் என்ற வீரர் தன்னிடம் இருந்த பிஸ்கட், பிரட் ஆகியவற்றை போட்டுள்ளார். அதை சாப்பிட்ட நாய், அவர் பின்னாலேயே ஓடிவர தொடங்கியது. தங்கள் கூடவே நாய் வருவதை சில வீரர்கள் பார்த்தனர். சிறிது தூரம் வந்துவிட்டு, திரும்பி சென்றுவிடும் என்று நினைத்தார்கள். நாய் நிற்கவில்லை. மூச்சிரைக்க வெகு தூரம் ஓடி வருவதை பார்த்து பரிதாபப்பட்ட வீரர்கள், போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் ஆங்காங்கே நின்று அதற்கு உணவு, தண்ணீர் அளித்தனர். அதை சாப்பிட்ட நாய் மேலும் உற்சாகமானது. அவர்களுடன் சேர்ந்து இலக்கை எட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து சைக்கிள் பந்தய வீரர் சியாவோ யாங் கூறுகையில், ‘சியாசோ எங்களுடன் தொடர்ந்து ஓடிவந்து இந்த சாதனையை படைத்துள்ளது. தினமும் 60 கி.மீ. தூரம் செல்வோம். 12 மலைகள் ஏறியிருக்கிறோம். 24 நாட்களாக எங்களை பிரியாமல் மொத்தம் 1,833 கி.மீ. தூரம் ஓடிவந்திருக்கிறது. சியாசோவை இனிமேல் என்னுடனே வைத்துக் கொள்வேன். அதன் ரசிகர் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டிவிட்டது’ என்றார்.

கவர்ச்சி உடைகள் மீது மோகம் : இத்தாலியில் மனைவியை கொன்ற இந்தியர் கைது!

Wednesday,May,30,2012
ரோம்:இத்தாலியின் பசேலிகோட்யூஸ் வில்வேஜ் பகுதியை சேர்ந்தவர் சின்ஜ் குல்பிர் (37). இந்தியரான இவர் கடந்த 10 வருடங்களாக இத்தாலியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். குல்பீரின் மனைவி கவுர் பல்விந்தே (27). இவர்களுக்கு 5 வயதில் மகன் உள்ளான். தற்போது கவுர் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுர் திடீரென மாயமானார். கவுரின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். குல்பிரிடம் கேட்டபோது, தன்னுடன் வாழ பிடிக்காமல் கவுர் சென்றுவிட்டதாக கூறினார். இந்நிலையில், கவுரின் சடலம் அப்பகுதியில் உள்ள நதிக்கரையோரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் சடலத்தை கைபற்றி விசாரணை நடத்தினர். அதில் கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில், மனைவியை கொன்றதை ஒப்புக் கொண்டார். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ‘என் மனைவி கவுருக்கு இந்திய பாரம்பரிய ஆடைகள் பிடிக்கவில்லை. அவர் கவர்ச்சியான மேற்கத்திய பாணி உடைகளையே அணிந்தார். அது எனக்கு பிடிக்காததால் பலமுறை எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக கவர்ச்சி ஆடைகளையே அணிந்து வந்தார். இது என் கோபத்தை அதிகரித்தது. அதனால் அவரைக் கொலை செய்தேன்‘ என்று குல்பீர் கூறியுள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள TNAயே வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருகிறது - கோத்தபாய ராஜபக்ஷ!

Wednesday,May,30,2012
இலங்கை::வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது அங்கு வசிக்கும் மக்கள் அல்ல எனவும் வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவ்வாறான கோரிக்கை விடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம் - பொலன்நறுவை மாவட்டங்களில் அதிகளவான இராணுவ முகாம்கள் உள்ளன. எனினும் அங்குள்ள முகாம்களை அகற்றுமாறு மக்கள் கூச்சல் போடுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

தியத்தலாவ போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாலேயே அந்த பிரதேசம் பொருளாதார ரீதியில் வலுவடைந்து காணப்படுகிறது. இராணுவ முகாம்கள் இருப்பதால், அந்த பிரதேசங்களின் பொருளாதாரம் வலுவடையும். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் இராணுவத்தினருடனும் இராணுவ முகாம்களுடன் ஒத்துழைத்து வாழ்ந்து வருகின்றனர். இராணுவத்தினருக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் யாழ்ப்பாண மக்களிடம் இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. மீன்கள் வடக்கு மக்களிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இந்த முன்னேற்றத்திற்கு அரசியல் அமைப்புகள் அஞ்சுகின்றன. முகாம்கள் இலங்கைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் சில நாடுகள் தமது இராணுவ முகாம்களை வெளிநாடுகளில் அமைத்து கொண்டு இலங்கையில் உள்ள இலங்கையின் இராணுவ முகாம்களை அகற்றுமாறு கூறுகின்றன. அதேவேளை தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கில் உண்மையான மக்கள் பலமில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து தூர விலகி சென்றுள்ளனர். இராணுவத்தினர் மக்களை நெருங்கியுள்ளனர். வடபகுதி மக்களுக்கு ஈழம் தேவையில்லை. அவர்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. உண்மையான சுதந்திரத்துடன் மனிதர்களாக வாழும் சுதந்திரமே அவர்களின் தேவையாக உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

சென்னையில் தட்டுப்பாடு நீங்கியது பெட்ரோல், டீசல் சப்ளை சீரானது!

Wednesday,May,30,2012
சென்னை:.கப்பல்களில் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்பட்டதையடுத்து சென்னையில் தட்டுப்பாடு நீங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது. மத்திய அரசு பெட்ரோல் விலையை வரலாறு காணாத அளவில் கடந்த 23ம்தேதி லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே, விலை குறைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. அப்படிபட்ட சூழ்நிலை உருவானால் அதிக விலை கொடுத்து வாங்கிய பெட்ரோலை குறைத்து விற்க நேரிடும் என்பதால் பெட்ரோலை வாங்கி விற்க பங்க் உரிமையாளர்கள் தயக்கம் காட்டினர். எனவே, சென்னையில் உள்ள 80 சதவீதம் பங்குகளில் ‘நோ ஸ்டாக்’ போர்டு வைத்தனர். இதையடுத்து கடந்த 5 நாட்களாக சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தது.

இருந்தாலும் அதிக பணம் கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்கி சென்றனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடால் கடந்த 5 நாட்கள் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நிலைமையை சீராக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதை தொடர்ந்து, எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் கப்பல்கள் மூலம் பெட்ரோல், டீசல் சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று 2 கப்பல்கள் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தது. அதில் கொண்டு வரப்பட்ட பெட்ரோல், டீசலை பங்க்குக்கு கொண்டு செல்லும் பணி நேற்றிரவு முழுவதும் நடந்தது. மேலும் 3 கப்பல்கள் ஓரிரு நாளில் வருகிறது. பெட்ரோல், டீசல் கிடைக்கத் தொடங்கியதால் பங்க்குகளில் நேற்றிரவு முதல் படிப்படியாக கூட்டம் குறைந்தது. இன்று காலை முதல் பங்க்குகளில் கூட்டம் முழுமையாக குறைந்து நிலைமை சீரானது. பொதுமக்கள் வழக்கம் போல் தங்கள் வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பி சென்றனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது!

Wednesday,May,30,2012
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அமுல்படுத்த இலங்கையை வலியுறுத்த வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அர்த்தபூர்மாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென, மனித உரிமை கண்காணிப்பகம் அமெரிக்காவிடம் கோரியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனுக்கு அனுப்பி வைத்துள்ள இரகசிய கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீர்மானங்கள் உரிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பதனை அமெரிக்கா கண்காணிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் தீர்மானங்களை நிறைவேற்றாது, இழுத்தடித்துக் கொண்டிருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க தயாராக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கண்காணிப்பகத்தின் சார்பில் அந்த அமைப்பின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் நான்கு பக்க இரகசிய கடிதமொன்றை, அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் சில மனித உரிமை அமைப்புக்கள், தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்ட இலங்கைப் பிரஜைகள் உள்ளிட்ட பலருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அமுல்படுத்துவதில் இலங்கை முழு ஈடுபாட்டைக் காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிவில் அமைப்புக்களும், ஊடகங்களும் தொடர்ச்சியாக அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய தள ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்டுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு திரும்பிய இலங்கைத் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பான மருத்துவ சான்றிதழ் ஆதாரங்களுடன் தகவல்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுமாறு இலங்கையை அமெரிக்க வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறைமையொன்று உருவாக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தல்கள், காணாமல் போதல்கள், சட்டவிரோத படுகொலைகள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு, அவர் அமெரிக்காவிடம்
கோரியுள்ளார்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் - அமெரிக்கா!

Wednesday,May,30,2012
இலங்கை::தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி போராளிகளுக்கு எதிராக துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் மற்றும் ஏனைய கைதிகளுக்கு எதிராக விரைவானதும் நியாயமானதுமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நேற்றைய தினம் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் போராட்டம் நடத்திய நிலையில் அமெரிக்கத் தூதரகம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இதேவேளை, இலங்கை அரசாங்கத்தினால் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்ட செயற்திட்டத்தில், முன்னாள் விடுதலைப் புலி போராளிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இலங்கையில் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2011 ஆம் ஆண்டில் ஆட்கள் காணாமல் போன சம்பவங்கள் குறைந்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. ராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போகும் சம்பவங்கள் குறைந்துள்ள போதிலும் தற்போது இடம்பெறும் ஆட்கடத்தல் சம்பவங்கள் அரசியல் காரணமாக இடம்பெறுவதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

அத்துடன் கப்பம் பெறுதல் போன்ற குற்றச் செயல்களுக்காக ஆட்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் கடந்த வருடத்தில் இலங்கையில் ஆட்கள் காணாமல் போகும் சம்பவங்கள் தொடர்பில் எவ்வித பொறுப்புக் கூறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொலிஸார் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு அடித்தார்கள்; இளைஞர் முறைப்பாடு!

Wednesday,May,30,2012
இலங்கை::தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தமது கைகள், கால்கள் மற்றும் கண்களைக் கட்டி உயரத்தில் தொங்கவிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடுமையாக தாக்கியதாக, தாக்குதலுக்கு இலக்கான துசித்த ரத்னாயக்க எனும் குறித்த இளைஞர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.

எனினும், குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்ததாகவும் தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து எழுத்து மூல விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெறக் கோரி கருணாநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

Wednesday,May,30,2012
சென்னை::மத்திய அரசு பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் பால் விலை, பஸ், மின் கட்டணம் குறைக்காத தமிழக அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
மத்திய அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 என உயர்த்தியது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோல் விலையை குறைக்க கோரியும் தமிழக அரசின் பால் விலை உயர்வு, மின்சாரம் மற்றும் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மே 30ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்சென்னையில், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஆற்காடு வீராசாமி, ஆர்.எஸ்.பாரதி, செ.குப்புசாமி, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் எம்எல்ஏ, வசந்தி ஸ்டான்லி எம்.பி., உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும், பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின் கட்டண உயர்வை ஆகியவற்றை தமிழக அரசு திரும்ப பெறவேண்டும் என்பதையும் வலியுறுத்தி திமுகவினர் கோஷமிட்டனர். வடசென்னை மாவட்ட திமுக சார்பில், சென்ட்ரல் ரயில் நிலையம், மெமோரியல் ஹால் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி. சேகர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

போதைப் பொருள் கடத்திய ஈரான் பிரஜைகள் கைது!

Wednesday,May,30,2012
இலங்கை::துபாயில் இருந்து விமானம் மூலம் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவந்த ஈரான் பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள் குறித்த ஈரான் பிரஜைகளை சந்தேகத்தின்பேரில் சோதனைக்கு உட்படுத்தியபோது மெத்த எம்பிட்டமின் எனப்படும் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

இவர்களில் ஒருவரது பயணப் பொதியில் இரண்டு கிலோகிராமிற்கும் மேற்பட்ட போதைப் பொருள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தடுப்புக் காவல் உத்தரவின்பேரில் சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.