
இலங்கை::தங்கச் சங்கிலி ஒன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் தற்போது தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தம்புத்தேகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் தமது கைகள், கால்கள் மற்றும் கண்களைக் கட்டி உயரத்தில் தொங்கவிட்டு இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கடுமையாக தாக்கியதாக, தாக்குதலுக்கு இலக்கான துசித்த ரத்னாயக்க எனும் குறித்த இளைஞர் நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவிடம் வினவியபோது, குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார்.
எனினும், குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை விடுதலை செய்ததாகவும் தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து எழுத்து மூல விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment