Wednesday, May 30, 2012

வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள TNAயே வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருகிறது - கோத்தபாய ராஜபக்ஷ!

Wednesday,May,30,2012
இலங்கை::வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுப்பது அங்கு வசிக்கும் மக்கள் அல்ல எனவும் வடபகுதி மக்களின் அரசியல் அதிகாரத்தை விழுங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அவ்வாறான கோரிக்கை விடுப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களை விட அனுராதபுரம் - பொலன்நறுவை மாவட்டங்களில் அதிகளவான இராணுவ முகாம்கள் உள்ளன. எனினும் அங்குள்ள முகாம்களை அகற்றுமாறு மக்கள் கூச்சல் போடுவதில்லை என்பதை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு தான் சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார்.

தியத்தலாவ போன்ற பிரதேசங்களில் இராணுவ முகாம் மற்றும் இராணுவத்தினர் இருப்பதாலேயே அந்த பிரதேசம் பொருளாதார ரீதியில் வலுவடைந்து காணப்படுகிறது. இராணுவ முகாம்கள் இருப்பதால், அந்த பிரதேசங்களின் பொருளாதாரம் வலுவடையும். யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் இராணுவத்தினருடனும் இராணுவ முகாம்களுடன் ஒத்துழைத்து வாழ்ந்து வருகின்றனர். இராணுவத்தினருக்கு தேவையான காய்கறிகள் மற்றும் உணவு பொருட்கள் யாழ்ப்பாண மக்களிடம் இருந்தே கொள்வனவு செய்யப்படுகின்றன. மீன்கள் வடக்கு மக்களிடம் இருந்தே பெறப்படுகின்றன. இதனால் இந்த முன்னேற்றத்திற்கு அரசியல் அமைப்புகள் அஞ்சுகின்றன. முகாம்கள் இலங்கைக்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ளன. முகாம்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்களிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

எனினும் சில நாடுகள் தமது இராணுவ முகாம்களை வெளிநாடுகளில் அமைத்து கொண்டு இலங்கையில் உள்ள இலங்கையின் இராணுவ முகாம்களை அகற்றுமாறு கூறுகின்றன. அதேவேளை தற்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கில் உண்மையான மக்கள் பலமில்லை. அவர்கள் மக்களிடம் இருந்து தூர விலகி சென்றுள்ளனர். இராணுவத்தினர் மக்களை நெருங்கியுள்ளனர். வடபகுதி மக்களுக்கு ஈழம் தேவையில்லை. அவர்கள் மீண்டும் போரை விரும்பவில்லை. உண்மையான சுதந்திரத்துடன் மனிதர்களாக வாழும் சுதந்திரமே அவர்களின் தேவையாக உள்ளது எனவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. உங்கள் பிளக்கரை ஒரு சிறந்த இணையதளமாக குறைந்த செலவில் வடிவமைக்க எம்மை நாடுங்கள்....
    எமது பிளாக்கர் வடிவமைப்புக்கள். சில ..
    http://everscenes.blogspot.com/
    http://tamilamazingnews.blogspot.com/
    http://tamilanews.blogspot.com/
    http://tamilgnn.blogspot.com/
    http://www.aayul.com/
    http://www.cinemapicx.com/


    Adsulagam@gmail.com

    ReplyDelete