Thursday, May 31, 2012

மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் முடிவடையும் தருவாயில் – வடமாகான ஆளுனர் - ஜீ.ஏ சந்திர சிறீ!

Thursday,May,31,2012
இலங்கை::வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைய உள்ளதுடன், இடம்பெயர்ந்த மக்களில் மீதமாக உள்ளவர்கள் இங்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளதாகவும், வடமாகான ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திர சிறீ (ஓய்வு) நேற்று (மே 29) தெரிவித்தார்.

மீள்குடியேற்றம் மற்றும் மிதிவெடியகற்றள் நடவடிக்கைகளானது தீர்மானிக்கப்பட்ட நேரத்தில் சரிவர நிறைவேற்ற, மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்த அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு ஆளுனர் தனது நன்றிகளையும்,

பாராட்டுக்களையும் தெரிவித்தார். சர்வதேசத்தின் சில அமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் மற்றும் சந்தேகங்களுக்கு மத்தியில் இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின்போது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 295,873 பேரையும் சிறப்பான முறையில் மீள்குடியமரத்த நடவடிக்கையெடுத்தமை மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, நலன்புரி நிலையங்களில் மீதமாக 6,031 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளதாக தெரிவித்தார். இவர்களுள் கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் 2,562 பேரும், ஆனந்தகுமாரசுவாமி நலன்புரி நிலையத்தில் 3,469 பேரும் தங்கியுள்ளனர்.

இவர்களது பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் மிதிவெடியகழ்வில் ஏற்படும் தாமதமே மீள்குடியமர்தலில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் எனத் தெரிவித்தார். சின்னநகர், புதுக்குடியிருப்பு மேற்கு, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் இம் மாத இறுதிக்குள் மிதிவெடியகழ்வு நடவடிக்கைகள் பூரத்தி செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் புதுக்குடியிருப்பு கிழக்கு, அம்பலவான் பொப்பானை, மந்தவில் முல்லைத்தீவு மேற்கு மற்றும் அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களில் ஜூலை மாத இறுதிக்குள் பணிகள் பூர்தி செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்
.

No comments:

Post a Comment