Thursday,May,31,2012
இலங்கை:: மட்டக்களப்பு – உன்னிச்சைக் குளத்தின் அணைக்கட்டுப் பாலத்திற்குக் கீழிருந்து நேற்று (செவ்வாய்) மாலை 5 மணியளவில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்ட
பெருந்தொகை ஆயுதங்கள் பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டன.
விமானத்தைத் சுடும் துப்பாக்கி 1, ரீ56 ரக துப்பாக்கிகள் 9, ரீ 81 மகஸின்கள் 29, ரீ 56 மகஸின்கள் 2, எம் 16 மகஸின்கள் 6, 9 எம்எம் மகஸின் 1, மோட்டார் பியுஸ் 2, லிங்க் 21உட்பட 18 வகையான ஆயுத உதிரிப்பாகங்களும் கண்டெடுக்கப்பட்டன.
மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் பாலத்திற்குக் கீழே உரப்பைகளில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு ஆயித்தியமலைப் பொலிசாருக்குக் கொடுத்த தகவலின் பேரிலேயே மேற்படி ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் அபேசிரி குணவர்தனவின் உத்தரவின்பேரில் ஆயித்தியமலைப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். பண்டார மற்றும் வவுணதீவு விஷேட அதிரடிப்படை இரண்டாவது கட்டளையதிகாரி எஸ். எம். பிரேமச்சந்திர, விஷேட அதிரடிப்படை குண்டு செயலிழப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். பொதேஜு ஆகியோர் ஆயுத மீட்பு அணியினர் இந்த ஆயுதங்களை உன்னிச்சைக் குளத்தின் அடியிலிருந்து மீட்டெடுத்தனர். சில ஆயுதங்கள் நீர் உட்புகாத கொள்கலன்களில் பொதி செய்யப்பட்டிருந்தன.

No comments:
Post a Comment