Thursday, May 31, 2012

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக வெளியேற்றுக - பியசிறி விஜேநாயக்க!

Thursday,May,31,2012
இலங்கை::இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணி தெரிவிக்கின்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கு எதிராக செயற்படுவதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை இறைமை உடைய ஒரு நாடு எனவும், பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இல்லை எனவும் பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவாகக் குறிப்பிடுவதாக அவர் கூறினார்.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், இலங்கை படையினரை கட்டுப்படுத்துவதற்கும் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு எந்தவொரு உரிமையும் இல்லையென பியசிறி விஜேநாயக்க குறிப்பிட்டார்.

வடக்கில் ஏன் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனத் தெரிவித்த உயர்ஸ்தானிகருக்கு கடும் எதிர்ப்பை வெளியிடுவதகாவும் கூறினார்.

குறித்த உயர்ஸ்தானிகரை நாட்டிற்கு எதிராக செயற்பட்டமைக்காக உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றுமாறு தேசிய சுதந்திர முன்னணியின் சார்பில் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்வதாக முன்னணியின் அரசியற்குழு உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்...

எந்த யோசனையும் நிறைவேற்றப்பட கூடாது!

இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணை தொடர்பான சர்வதேசத்தின் எந்த யோசனையையும் நடைமுறைப்படுத்த கூடாது என்று தேசிய சுதந்திர முன்னணி கோரியுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பியசிறி விஜயநாயக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதனிடையே, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எங்களால் நிறுவப்பட்டது.

அதில் நாட்டிற்கு ஏற்புடையவற்றை மாத்திரமே நடைமுறைப்படுத்துவோம்.

அதேபோல் ஜெனிவாவில் நிறைவேற்ற்பட்ட பிரேரணையை மக்கள் எதிர்க்கின்றனர்.

ஜெனிவாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடொன்றை செய்து தருமாறும் மக்கள் கோருவதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment