Monday, March 31, 2014

புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது!



Monday, March 31, 2014
இலங்கை::
புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை தடை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் செயற்பட்டு வரும் புலி ஆதரவு அமைப்புக்களை தடை செய்வதற்கான முனைப்புக்கள் முன்னெடுக்கப்பட உள்ளது. குறிப்பாக வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறான அமைப்புக்கள் குறித்த நாடுகளின் அரசியல் கட்சிகள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதுடன், இலங்கைக்கு எதிராக சர்வதேச அரங்குகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் நிறுவனங்களை தடை செய்வதற்கு வெளிநாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது,

2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக 
 
புலிகள் தோற்கடிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் ; புலிகளின் செயற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அரசாங்கம் சில திட்டங்களை வகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போதும் சில புலி ஆதரவு அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தன என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் புலி ஆதரவு அமைப்புக்களுக்கு இடையில் பிளவு காணப்பட்டாலும், சில முக்கியமான தருணங்களில் ஒன்றிணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து திருச்சிக்கு ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய சென்னை ஆசாமிகள்!!

Monday, March 31, 2014திருச்சி::இலங்கையில் இருந்து ஆசனவாயில் மறைத்து தங்கம் கடத்திய சென்னை ஆசாமிகள், திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டனர்.
 
இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை திருச்சி வந்தது. விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளை வான்நுண்ணறிவு பிரிவு மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். 2 பயணிகளை சோதனை செய்த போது ஸ்கேனரில் இருந்து வித்தியாசமான ஒலி வந்தது. அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்திய போது,
 
ஆசனவாயில் மறைத்து 100 கிராம் அளவுள்ள தலா 2 தங்க கட்டிகள் வீதம் 4 தங்க கட்டிகள் கொண்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 400 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த நசீம் (40), அப்துல்லா (38) என்பது தெரியவந்தது. அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம் பெயர்ந்தோர் அமைப்பிற்கு அடிமையாகியுள்ளது: சுதர்சண நாச்சியப்பன்!

Monday, March 31, 2014
சென்னை::தமிழ் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்த புலிகள் ஆதரவு  அமைப்பிற்கு அடிமையாகியுள்ளதாக இந்திய குற்றம் சுமத்தியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் வர்த்தக அமைச்சர் சுதர்சண நாச்சியப்பன் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே, ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், இந்தியாவின் பிரதிபலிப்பு சாதாரணமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்காமை தொடர்பில் இந்தியா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

எனினும் இதற்கு பதிலளித்த நாச்சியப்பன், தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காவிட்டால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதனிடையே, இலங்கை மீதான சுயாதீன விசாரணையை இந்தியா நிராகரிப்பதாகவும், இவ்வாறான ஒரு நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என்றும் நாச்சியப்பன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை!

Monday, March 31, 2014
இலங்கை::இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 78 தமிழக மீனவர்களும் அவர்களது 20 படகுகளும் இன்று இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய 13 படகுகளுடன் 58 மீனவர்கள் காங்கேசந்துறைக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய இந்திய அதிகாரிகளினால் விடுவிக்கப்பட்ட10 படகுகளும் இலங்கை அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளன.
அத்துடன் இந்தியவாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து இலங்கை மீனவர்களும் அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தவிர மேலும் 20 தமிழக மீனவர்களும் அவர்களது ஏழு படகுகளும் இன்று தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
இதனிடையே, இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட 19  தமிழக மீனவர்கள் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர்.இவர்கள் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தை நேற்று மாலை சென்றடைந்ததாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து தமிழக மீனவர்களும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைய கடந்த வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் கடந்த 26 ஆம் திகதி கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட மீனவர்களே தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
இந்த மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன.    

இந்தியா புறக்கணிப்பு அதிர்ச்சி அளிக்கிறது: வாசன்!!

Monday, March 31, 2014சென்னை::இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சி அளிக்கிறது,'' என, மத்திய அமைச்சர் வாசன் கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகன் தலைமையில், தேர்தல் பிரசார, "சிடி'க்கள் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

சிடி' வெளியீடு : மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் வாசன், சிடி'களை வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

வாசன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக காங்கிரஸ் கட்சி, 38 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எங்கள் வேட்பாளர்கள் மகிழ்ச்சியுடன், தேர்தலை சந்திக்கின்றனர். அவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவர். கடந்த, 10 ஆண்டுகளில், மத்திய அரசு செய்த சாதனை திட்டங்களை முன்னிலைப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வோம்.
 
காங்கிரசுக்கு, தமிழக மக்கள் வாக்களிப்பர். எம்மதமும் சம்மதம்; நிலையான ஆட்சி; நாட்டின் ஒற்றுமை. ஒருமைப்பாட்டை காங்கிர சால் மட்டுமே காப்பாற்ற முடியும் என, மக்கள் நம்புகின்றனர். பிரதமர் யார் என, சொல்ல முடியாத நிலையில், தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் தேர் தலை சந்திக்கின்றன. இது கேப்டன் இல்லாமல், கப்பல் செலுத்துவதற்கு சமம். இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா புறக்கணித்துள்ளது. இதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது.

முன்னர் ஆதரவு : இலங்கை பிரச்னையில், ஐ.நா., கொண்டு வந்த தீர்மானத்தை, ஏற்கனவே, மத்திய அரசு ஆதரித்துள்ளது. இந்த முறை நடுநிலை வகித்தது. இந்தியா எடுத்த முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. வரும் நாட்களில் மத்திய அரசு உறுதியோடு செயல்பட்டு, இலங்கை அரசு மீது கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

சேதுசமுத்திர திட்டம் : சேதுசமுத்திர திட்டத்திற்கு, தமிழக அரசு எதிர்ப்பாக செயல்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் திட்டங்கள் முக்கிய காரணம். சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் பயன்படும்.ஆனால், தமிழகத்தின் வளர்ச்சிக்கு, தமிழக அரசு தடையாக, இருப்பது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு, வாசன் கூறினார்.

இறுதிகட்ட போரின் போது இந்திய வம்சாவளித் தழிழர்கள் புலிகளின் சார்பில் முக்கிய பங்காற்றியிருந்தனர்: நார்வேயின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை : சம்பிக்க ரணவக்க!

Monday, March 31, 2014
இலங்கை::
தடைகளுக்கு அஞ்சி நாட்டின் எதிர்காலத்தை காட்டிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தேசிய இனத்தையோ, வரலாற்று சிறப்பு மிக்க அடையாளங்களையோ தாரை வார்க்க வேண்டியதில்லை. எவ்வாறான தடைகள் விதிக்கப்பட்டாலும் நாம் அனைவரும் இணைந்து செயற்பட்டால், தடைகளை முறியடிக்க முடியும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இம்முறை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சற்று வலுவானது. கடந்த காலங்களில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச் செயல்கள் பற்றியே வலியுறுத்தப்பட்டது. எனினும், தற்போதைய தீர்மானத்தில் மத நல்லிணக்கம், ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.

சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை குறித்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. உள்ளக ரீதியிலான விசாரணைகளே நடத்தப்பட வேண்டும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை நார்வே வடக்கில் குடியேற்றியது.

இறுதிகட்ட போரின் போது இந்த இந்திய வம்சாவளித் தழிழர்கள் புலிகளின் சார்பில் முக்கிய பங்காற்றியிருந்தனர். எனவே நார்வேயின் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சம்பிக்க கோரியுள்ளார். பத்தரமுல்லவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இன மத பேதங்களைக் களைந்து மக்கள் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர்- பிரதமர் ஜயரட்ன!

Monday, March 31, 2014
இலங்கை::
இன மத பேதங்களைக் களைந்து மக்கள் அரசாங்கத்தை வெற்றி பெறச் செய்துள்ளதாக பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இன, மத, கட்சி பேதமின்றி நாட்டின் அனைத்து மக்களும் இம்முறை மாகாணசபைத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு ஆதரவளித்துள்ளனர்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அபிவிருத்தியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். சில தரப்பினர் நாட்டை துண்டாடுவதற்கு முயற்சிக்கின்றனர். எனினும், நாட்டை நேசிக்கும் பலர் அதனை எதிர்க்கின்றார்கள் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் வெளிச்சமாகியுள்ளது.
 
ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நல அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பிரதமர் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அமெ­ரிக்­காவின் தீர்­மானம்: சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை: ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக!

Monday, March 31, 2014
இலங்கை::ஜெனி­வா
நவ­நீ­தம்­பிள்ளை தலை­மை­யி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை. இதனை இலங்கை அர­சாங்கம் முழு­மை­யாக நிரா­க­ரிக்­கின்­றது என ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக தெரி­வித்தார்.
மாகாண சபைத் தேர்தல் முடி­வுகள், வெளி­நா­டு­களின் அழுத்­தங்கள் தொடர்­பாக ஆராய்ந்து ஜெனிவாவில் அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பாக அர­சாங்கம் முடி­வெ­டுக்­கு­மென்றும் அவர் கூறினார்.
ஜெனி­வாவில் அமெ­ரிக்­காவின் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது தொடர்பில் அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு தொடர்­பாக கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­ப­தியின் பேச்­சாளர் மொஹான் சம­ர­நா­யக இவ்­வாறு தெரித்தார்.
இது தொடர்­பாக அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் இலங்­கைக்கு எதி­ராக கொண்டு வரப்­பட்ட பிரே­ர­ணை­யா­னது அர­சியல் நோக்கம் கொண்­ட­தாகும்.
அது மட்­டு­மல்­லாது தமிழ், சிங்­கள முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­க­ளி­டையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­கத்தின் முயற்­சி­க­ளுக்கும் இப்­பி­ரே­ர­ணை­யா­னது முட்­டுக்­கட்டை போடு­வ­தா­கவே உள்­ளது.
முப்­பது வருட கால யுத்­தத்தின் பின்னர் அர­சாங்கம் பல பிரி­வு­க­ளாக மீள் கட்­ட­மைப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது.
முத­லா­வ­தாக, இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கு வாழ்­வி­டங்­களை அமைத்துக் கொடுத்து அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்திக் கொடுப்­பதில் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யது.
தற்­போது அனைத்து இனங்­க­ளுக்கும் இடையே தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.
அவ்­வா­றா­னதோர் சூழ்­நி­லையில் ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணையை நிறை­வேற்­றி­ய­தா­னது தேசிய நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் அரசின் முன்­னெ­டுப்­புக்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­துள்­ளது.
அதேவேளை, இலங்­கையின் தமிழ் மக்­களின் நலன்­களில் இந்­தியா அதிக அக்­கறை கொண்­டுள்­ளது.
எனவே தான் இலங்கை அர­சாங்கம் இனங்­க­ளி­டையே நல்­லி­ணக்­கத்தை ஏற்­படுத்தும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­வதால் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்க வேண்­டு­மென்றும் இலங்கை அர­சாங்கம் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க சந்­தர்ப்­பங்­களை வழங்க வேண்­டு­மெனக் கூறி ஜெனி­வாவில் வாக்­க­ளிப்­ப­தி­லி­ருந்து விலகிக் கொண்­டது.
உண்­மை­யி­லேயே இது தமிழ் மக்­களின் நலன்­களைக் கருத்தில் கொண்ட தீர்­மா­ன­மாகும். 
நவ­நீ­தம்­பிள்ளை ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் நாயகம் நவ­நீ­தம்­பிள்ளை பக்­கச்­சார்பு கொண்­டவர்.
எனவே அவர் தலை­மை­யி­லான சர்­வ­தேச விசா­ரணை என்ற பேச்­சுக்கே இட­மில்லை.
அத்­தோடு இறை­யாண்மை கொண்ட நாடென்ற ரீதியில் சர்­வ­தேச விசா­ர­ணையை நிரா­க­ரிக்­கின்றோம். இதுவே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும்.
நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல் முடி­வு­க­ளோடு 2012ம் 2013 ஆம் ஆண்டு தேர்­தல்கள் முடி­வு­களை ஒப்­பீடு செய்து பார்ப்­ப­தோடுஇ வெளி­நாட்டு அழுத்­தங்கள் பொரு­ளா­தார விட­யங்கள் தொடர்­பாக ஆராய்ந்து அடுத்த ஜெனிவா கூட்டத் தொட­ருக்கு முகம் கொடுப்­பது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மென்றும் மொஹான் சமரநாயக தெரிவித்தார்.

அரசாங்கத்தை தோற்கடிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளி;க்கவில்லை: பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி!

Monday, March 31, 2014
இலங்கை::
அரசாங்கத்தை தோற்கடிக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சி வெற்றியளி;க்கவில்லை என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசாங்கத்தை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் தீவிர முனைப்பு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மக்கள் தொடர்ந்தும் பேராதரவு வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொடர்ந்தும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளமை புலனாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக் கட்சியினால் ஈட்பட்டுள்ள வெற்றி தற்காலிகமானது என சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

 

கருணாநிதியின் பேச்சுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்!

Monday, March 31, 2014
சென்னை::பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பிரசாரத்துக்காக கட்சி நிர்வாகியும் நடிகருமான ராஜ்குமார் கொள்கை விளக்க பாடல்களை சி.டி.யாக தயாரித்துள்ளார். இதில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஜோகன் இசையமைத்துள்ளார். கார்த்திக் பாடல்களை எழுதியுள்ளார்.

இதே போல் ஜோதி ராமலிங்கமும் ஒரு சி.டி. தயாரித்துள்ளார். இந்த சி.டி. வெளியீட்டு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. மாநில தலைவர் ஞானதேசிகன் தலைமை தாங்கினார். மத்திய மந்திரி ஜி.கே.வாசன் குறுந்தகடுகளை வெளியிட்டார். அதை ஜெயந்தி நடராஜன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:_

தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருப்பது மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்கள்தான். இதை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த தேர்தல் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மாற்றத்தையும், மாற்றாம் தாய் மனப்பான்மையுடன் செயல்படாத நிலையையும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

நாட்டில் நிலையான ஆட்சியும், தொடர் வளர்ச்சியும், எம்மதமும் சம்மதம் என்றும் இருப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். இதை காங்கிரசால் மட்டுமே கொண்டு வரமுடியும்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா புறக்கணித்து உள்ளது. அதற்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில் இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டதற்கு மாற்றுக் கருத்து இல்லை. எனவே இந்தியா எடுத்த முடிவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

வரும் நாட்களில் மத்திய அரசு உறுதியோடு செயல்பட்டு இலங்கை அரசு மீது கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

காங்கிரசில் நல்ல வேட்பாளர்கள் பலர் இருக்கிறார்கள். காங்கிரஸ் மிகப் பெரிய தேசிய கட்சி. இதில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். எனவே வாய்ப்பு கிடைக்காதவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.

பின்னர் அவரிடம் காங்கிரஸ் நன்றிகெட்ட கட்சி என்றும், மதச்சார்பின்மையை ஏற்று மனம் வருந்தி வந்தால் ஆதரவு தருவதாக கருணாநிதி கூறி இருப்பது பற்றி நிருபர்கள் கேட்ட போது, தமிழ்நாட்டில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். எங்கள் பாதை வெற்றிப் பாதை. இந்தியாவில் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும்தான். மதவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க எங்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் குமரி அனந்தன், பொருளாளர் கோவை தங்கம், யசோதா, சக்தி வடிவேல், வில்லிவாக்கம் சுரேஷ், சுரேஷ் பாபு, டி.என்.அசோகன், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஞானசேகரன், மக்கள் தேசம் தலைவர் சாத்தை பாக்கியராஜ், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோர் ஜி.கே.வாசனை சந்தித்து காங்கிரசுக்கு ஆதரவு 

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது!

Monday, March 31, 2014
ஜெனீவா::ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத் தொடரின் போது முன்வைக்கப்பட்ட ஐந்து பிரேரணைகளைத் தனித்து எதிர்த்து அமெரிக்கா தோல்வி கண்டுள்ளது.

பலஸ்தீன விவகாரம் தொடர்பான பிரேரணைகளே அவையாகும்:-
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் கோலன் பிரதேசத்தில் மனித உரிமைகள்" என்ற பிரேரணை 33 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தது. 13 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமே எதிர்த்தது.
 
மேலும் -
"பலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமை"
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்"
 
"ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீன நிலத்தில் மனித உரிமைகள்"
 
"காசா (Gaza) பிணக்கிற்கான சர்வதேச உண்மைகள் கண்டறியும் ஆணைக்குழு"
 
ஆகிய நான்கு பிரேரணைகளும், 46 நாடுகள் ஆதரவாக வாக்களித்து நிறைவேறின. வாக்களிக்கும் தகுதியுடைய 47 நாடுகளில் எந்த நாடும் வாக்களிப்பைத் தவிர்க்கவில்லை. அமெரிக்கா மட்டும் இவற்றை எதிர்த்து வாக்களித்தது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது: தினேஷ் குணவர்தன!

Monday, March 31, 2014
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய வீழ்ச்சியை இந்த இரு மாகாணங்களுக் குமான தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
 
அதேவேளை எதிர்க் கட்சிகள் தொடர்பில் மக்கள் கொண்டுள்ள அதிருப்தியையும் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அமோக வெற்றியாக இத் தேர்தல் வெற்றியைக் கருத முடியும் என தெரிவித்த அமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் அமோக வெற்றியினை ஈட்டிக்கொள்ள முடிந்துள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் முன்பிருந்ததைவிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளதையும் அதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கு முன்பிருந்த மக்கள் ஆதரவு இல்லாமற் போயுள்ளதையும் காண முடிகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
 
பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி:
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி காலி மாவட்டத்தில் பாரிய வெற்றியை ஈட்டிக் கொண்டுள்ளது. காலி தேர்தல் தொகுதியைத் தவிர மாவட்டத்தின் ஏனைய அனைத்துத் தொகுதிகளிலும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளுக்கு காலி மாவட்ட மக்கள் வழங்கிய அங்கீகாரமாக இந்த வெற்றியை குறிப்பிட முடியும்.
 
அமைச்சர் மஹீந்த அமரவீர :-
 
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதாக எதிர்க் கட்சிகளிடமிருந்தோ அல்லது தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து கூட புகார்கள் வரவில்லை எனவும் அந்தளவு நீதியான தேர்தலை அரசாங்கம் நடத்தி முடித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
 
லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன :-
 
இரு மாகாணங்களிலும் அரசாங்கத்துக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதுடன் குறிப்பாக மாத்தறை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து இரண்டு மேலதிக ஆசனங்களையும் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. மொத்தமாக பத்து ஆசனங்கள் பெற்றுள்ளமை என்பது பெரு வெற்றியாகும். அத்துடன் எதிர்க் கட்சி ஒரு ஆசனத்தை இழந்துள்ளதையும் குறிப்பிட வேண்டும்.
 
அரசாங்கம் வெற்றிகரமாக தமது பயணத்தை முன்னோக்கித் தொடர இந்த மகத்தான வெற்றி உறுதுணை புரியும்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலையையும் இந்த தேர்தல் முடிவுகளில் காணமுடிகிறது.

தனித்துப் போட்டியிட்ட சிறுபான்மை கட்சிகளின் வாக்குகளில் பெருமளவு சரிவு!
 
தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்ட சிறுபான்மைக் கட்சிகள் தாம் எதிர்பார்த்தளவு வாக்குகளைப் பெறவில்லையென அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஓரிரு ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டன. மேல் மாகாணத்தில் போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்தவொரு ஆசனத்தையும் பெற்றிருக்கவில்லை.
 
மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி மேல் மாகாணத்தில் மொத்தமாக 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இரண்டு ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளது.
 
தென் மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோதும் 1419 வாக்கு களைப் பெற்றிருந்தது. எனினும் ஆசனங்கள் எதனையும் பெறமுடியவில்லை.
இந்தக் கட்சிகள் எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லையென அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அட்டாளைச்சேனையில் இலங்கை இராணுவ தலைமையகம் நடாத்திய கரப்பந்தாட்டப் போட்டி!

Monday, March 31, 2014
இலங்கை::இலங்கை இராணுவத்தின் பாதுகாப்புப் படை தலைமையகத்தினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாண இராணுவப் படைப் பரிவுகளுக்கு இடையில் இடம்பெற்ற கரப்பந்தாட்டப் போட்டியில் 23 ஆவது படைப் பரிவு சம்பியன் கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.

கடந்த இரு வாரங்கலாக நடைபெற்று வந்த இந்த சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவப் படைப் பிரிவில் 10 அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் 22 ஆவது படைப் பிரிவு அணியினரும் 23 ஆவது படைப் பிரிவு அணியினரும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.

இப்போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு 24 ஆவது படைப் பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி லெப்டிணன் கேணல் ஹரீன் வீரசிங்க தலைமையில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் இரவு நேர விளையாட்டுப் போட்டியாக (29) சனிக்கிழமை நடைபெற்றது. 5 இக்கு 3 என்ற அடிப்படையில் நடாத்தப்பட்ட இந்த இறுதிச் சுற்றுப் போட்டியில் (25:22, 25:19, 25:24) என்ற புள்ளிகள் அடிப்படையில் 23 ஆவது படைப் பிரிவு சம்பியனாகியது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட கமாண்ட பிரிகேடியர் எச்.கே.பீ.பிரீஸ், 241 பிரிகட் கமாண்ட கேணல் பிரியந்த கமகே, 242 பிரிகட் கமாண்ட கேணல் சிறிசாந்த, மேஜர்களான நவரட்ண, பிரசாத் உள்ளிட்ட பல இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

நிந்தவூரில் சர்வமத தலைவர்கள் சந்திப்பு!

Monday, March 31, 2014
இலங்கை::மதங்களுக்கு இடையில் நட்புறவினை ஏற்படுத்தி அதன் மூலம் சிறந்த சமூகங்களை உருவாக்கும் நோக்கில் சர்வ மத சந்திப்பு நிகழ்வு  (29.03.2014) காலை நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் எம்.ஏ.எம்.றசீன் தலைமையில் இடம்பெற்றது.
 
இதில் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி எச்.பி.பீரிஸ், கேர்ணல் ஸ்ரீசாந்த, அம்பாறை பிராந்திய கட்டளைத் தளபதி பிரியந்த கமகே, அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதி லெப்டினன் கேர்ணல் எச். வீரசிங்க, மேஜர் நவரட்ன மற்றும் மேஜர் பிரசாத் ஆகியோர்களும் அவர்களுடன் பள்ளிவாசல்கள், விகாரைகள், கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களின் தலைவர்களும் சமூகவியலாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
 
இதேவேளை இந்த சந்திப்பின் இறுதியில் அண்மையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறக்கப்பட்ட நிந்தவூர் ஜும்மா பள்ளிவாசலையும் படை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக நடிகர் - நடிகைகள் பிரசாரம்!!!!

Monday, March 31, 2014
மதுரை::சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் நடிகர்,நடிகைகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதேபோல் தலைவர்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள். 
பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் பாதி இடங்களில் பிரசாரம் செய்து முடித்துவிட்டார். அடுத்து வரும் நாட்களில் அவர் கோவை, தஞ்சாவூர், திருச்சி போன்ற இடங்களில் பிரசாரம் செய்ய உள்ளார். சுட்டெரிக்கும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. வேட்பாளர்களுக்காக விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, காங்கிரசுக்காக ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் போன்ற தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
 
மற்ற கட்சிகளுக்கு நடிகர்கள் பெரும்பாலும் பிரசாரம் செய்யவில்லை. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்காக நடிகர்,நடிகையர் பட்டாளமே களத்தில் குதித்துள்ளது. ச.ம.க.தலைவர் சரத்குமார், ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வை தாக்கி வருகிறார். இதேபோல் நடிகர் ராமராஜன், ஆனந்த்ராஜ், குண்டு கல்யாணம், வையாபுரி போன்றவர்களும் அ.தி.மு.க.வை ஆதரித்து பேசி வருகிறார்கள். சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்த நடிகை ஆர்த்தியும் பிரசார களத்தில் குதித்து உள்ளார். பிரபல பாடகி அனிதா குப்புசாமி பாட்டுப்பாடி ஓட்டு வேட்டையாடி வருகிறார். இதே நடிகை விந்தியா விஜயகாந்தை கிண்டல் அடித்து பேசி வருகிறார். தலைவர்களும் அ.தி.மு.க.வை ஆதரித்து பேசி வருகிறார்கள்.
 
குறிப்பாக தே.மு.தி.க.வில் இருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்தை கிண்டல் அடித்து பேசி வருகிறார். இதேபோல் தி.மு.க.வில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, ம.தி.மு.க.வில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத் மற்றும் செ.கு. தமிழரசன் போன்ற தலைவர்களும் தி.மு.க.வின் ஊழலையும் கச்சத்தீவை தாரை வார்த்து கொடுப்பதற்கு துணையாக இருந்த கருணாநிதியையும் விமர்சித்து பேசி வருகிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அந்தந்த தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் தமிழக தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது. 

மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து, மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர்: ஹிஸ்புல்லாஹ்!

Monday, March 31, 2014
இலங்கை::நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது இந்த நாட்டு மக்கள் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் முழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையும் உணர்த்துகின்றது.
இவ்வாறு பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாணத் தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து வெளியிடுகையில் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்; தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்டுள்ள இச் சூழ்நிலையில் நாம் அரசுடனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடனும் இருக்கின்றோமென்ற செய்தியை சர்வதேச சமூகத்திற்கு இத்தேர்தல் மூலம் அறிவித்துள்ளனர்.
குறிப்பாக மேல் மற்றும் தென் மாகாணங்களின் தலைநகரங்களில் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி வந்த பெருமளவு மக்கள் இத்தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை வைத்து அதிகப்படியான வாக்குகளை அளித்துள்ளனர். நாம் இந்த ஆதரவுக்கு பாராட்டுவதுடன் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இத்தேர்தலூடாக மக்கள் ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச சமூகத்திற்கும் இலங்கைக்கெதிராக செயல்படும் அமெரிக்கா, அதன் நேச நாடுகளுக்கும், தோற்கடிக்கப்பட்ட  புலிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் சிறந்;த பதிலடி வழங்கப்பட்டுள்ளது.

மிக நேர்மையாக நடைபெற்ற இத்தேர்தலில் அரசின் ஆதரவை குறைக்க எதிர்க்கட்சிகள் பல்வேறுபட்ட முயற்சிகளை எடுத்துக்கொண்ட போதிலும் அரசுக்கு பெருமளவு ஆதரவினை மக்கள் வழங்கியுள்ளனர். பல தேர்தல்களில் வெற்றி கொண்ட அரசு மக்கள் எதுவித அச்சமுமின்றி வாக்களிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இத்தேர்தல்களில் அமோக ஆதரவினை வழங்கிய இந்நாட்டு மக்களின் பொருளாதாரம் வளரவும் வறுமையை ஒழிக்கவும் தொடர்ச்சியாக முன்னின்று பாடுபடுமென்றும் இந்த அமோக ஆதரவினை வழங்கிய மக்களுக்கு பிதரி அமைச்சர் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும் என்று தெரிவித்தார்.

இராணுவத்தின் உதவிகரம்: பல்கலைக்கு தெரிவான வறிய மாணவர்களுக்கு 36 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில்!

Monday, March 31, 2014
இலங்கை::இம்முறை அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட 10 வரிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு  திருக்கோவில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக இலங்கை இராணுவத்தின் 24 ஆம் படைப்பிரிவின் அம்பாறை மாவட்ட சிவில் பாதுகாப்பு பொறுப்பதிகாரி லெப்டிணல் கேணல் ஹரீன் வீரசிங்க மற்றும் கோமாரி 242 ஆம் படைப்பரிவின் கேணல் சிறிசாந்த ஆகியோர் கலந்து கொண்டு 36 ஆயிரம் ரூபா பண வவுச்சரை தலா ஒருவர் வீதம் 10 பேருக்கு வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் பல்கலைக்கழகம் செல்ல தெரிவு செய்யப்பட்ட 10 வரிய மாணவர்களில் அக்கரைப்பற்று, பாணம, கோளாவில் ஆகிய பிரதேசங்களில் தலா 2 பேர் வீதமும், அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை, சாகாமம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தலா 1 பேர் வீதம் இந்த புலமைப் பரிசிலை குன ஜய பதனம நிருவனத்தின் அணுசரனையில் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Commander of the Navy attends IONS 2014!

Monday, March 31, 2014
Colombo::Commander of the Navy, Vice Admiral Jayanath Colombage attended the Indian Ocean Naval Symposium (IONS) 2014 Seminar and Conclave of Navy Chiefs held in Australia. The seminar was held from 26th to 27th March 2014 under the theme, "Protecting the ability to trade in the Indian Ocean Maritime Economy" while the conclave attended by participating Chiefs of Navies was held on 28th March. The Commander was accompanied by Navy Seva Vanitha Unit President, Mrs. Srima Colombage. 
 
The biennial event was hosted by the Royal Australian Navy, which will hold the IONS chairmanship for the next two years. Between the sessions, the Navy Commander was able to meet a number of high ranking defence and naval officials that included Australian Defence Minister, Hon.  David Johnston, His Excellency the High Commissioner for Sri Lanka in Australia, Admiral Thisara Samarasinghe, Chiefs of Naval Staff Pakistan Navy, Admiral Muhammad Asif Sandila, Chief of Staff of the Japan Maritime Self-Defense Force, Admiral Katsutoshi Kawano, Commander-in-Chief Royal Thai Navy, Admiral Surasak Rounroengrom, Chief of Australia Navy, Vice Admiral Ray Griggs, Chiefs of Naval Staff Bangladesh Navy, Vice Admiral M Farid Habib and Australia Aborginal leader.
IONS is a voluntary initiative that seeks to increase maritime co-operation among navies of the littoral states of the Indian Ocean Region. It provides an open and inclusive forum for discussion of regionally relevant maritime issues. At present, there are 35 member Navies, which have been geographically grouped into four sub-regions namely, South Asian Littorals, West Asian Littorals, East African Littorals and South East Asian & Australian Littorals. 

Sunday, March 30, 2014

சேது சமுத்திர திட்டத்தால் எந்த நன்மையும் ஏற்படாது: முதல்வர் ஜெயலலிதா !

Sunday, March 30, 2014
சென்னை::தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதால், சேதுசமுத்திர திட்டத்தை அ.தி.மு.க. எதிர்த்தது என்றும், மக்களுக்காகவே திட்டங்கள் என்று அ.தி.மு.க. கருதுவதாகவும், அதே நேரத்தில்
திட்டங்களுக்காகவே மக்கள் என்று தி.மு.க. நினைப்பதாகவும் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:_
இன்றைய சூழ்நிலையில் நம் முன் தலையாய பிரச்சனையாக விளங்குவது தமிழக மீனவர்கள் பிரச்சனை. இலங்கை கடற்படையின் தொடர் துன்புறுத்தல், சிறைபிடிப்பு காரணமாக தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.  
இந்தச் சூழ்நிலையில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25.3.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்பு இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை நான் விதித்து இருந்தேன். ஆனால், இலங்கை அரசோ மேலும் சில தமிழக மீனவர்களை சிறைபிடித்தது. இதன் காரணமாக 25.3.2014 அன்று நடைபெறுவதாக இருந்த இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், நேற்று 77 தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மீதமுள்ள 21 மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்ட பின் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். 
கடந்த 10 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழக மீனவர் பிரச்சனைக்கு ஏதாவது தீர்வு கண்டதா என்றால் நிச்சயமாக இல்லை.  
தங்களுக்கு வேண்டிய வளம் கொழிக்கும் இலாகாக்களைப் பெற்றுக் கொள்வதில் காட்டிய அக்கறையில், நூறில் ஒரு பங்கையாவது மீனவர் பிரச்சனையில் காட்டினாரா தி.மு.க. தலைவர் கருணாநிதி? இல்லையே! 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இந்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியது தி.மு.க.  தி.மு.க_வின் இந்த ஊழலினால் இந்திய நாட்டின் கஜானா சுரண்டப்பட்டது என்றால், சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் நிர்மூலம் ஆக்கப்படும். 
சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் காரணமாக, ஆர்.கே.பச்சவுரி தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அமைத்தது. இந்த வல்லுநர் குழு பல்வேறு ஆய்வுகளை நடத்தி தனது அறிக்கையை மத்திய அரசுக்கு  சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் திட்டம் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது.  ஆனால், இந்த அறிக்கையை புறக்கணிக்க முடிவு செய்து சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  
சேது சமுத்திர திட்டத்தை நான் முதலில் ஆதரித்ததாகவும், பின்னர் அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே வழக்கு தொடுத்ததாகவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 
சேது சமுத்திரத் திட்டத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன்பு ஆதரித்தது; நான் ஆதரித்தேன் என்பது உண்மை தான். நான் முதலமைச்சராக முதன் முறை இருந்த சமயத்தில் 1994_ஆம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிகள் நிறுவனம் மூலம் இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க சொன்னேன். 
இந்த நிறுவனம் இதன் அறிக்கையை 1996_ஆம் ஆண்டு அரசுக்குச் சமர்ப்பித்தது. 
இந்தத் திட்டத்தினை என்இஇஆர்ஐ அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் ஆய்வு செய்தன. 
இந்த ஆய்வுகளில் சேது சமுத்திரக் கால்வாய் அமைய உள்ள இடத்தில் 12 மீட்டர் ஆழம் மட்டுமே தோண்ட இயலும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.  
2004_ஆம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்தவுடன் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை வகுத்துள்ள விதிமுறைகளின்படி சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு மாநில அரசின் தடையின்மைச் சான்றிதழ் பெறப்பட வேண்டும். இதன்படி தடையின்மைச் சான்றிதழ் கோரி மத்திய அரசு தனது கருத்துருவினை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியது. இந்தக் கருத்துருவின் மேல் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் உள்ள அம்சங்களை ஆய்வு செய்யும் வகையில் வல்லுநர் குழு ஒன்றை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அமைத்தது. சுற்றுச்சூழல் பாதிப்பினை விரிவாக ஆய்வு செய்த இந்த வல்லுநர் குழு தனது அறிக்கை+யினை அரசுக்கு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையில் சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன்னதாக, விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என எச்சரித்திருந்தது. சேதுசமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என்று தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தால், அதாவது என்இஇஆர்ஐ அமைப்பினால் தெரிவிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் பல குறைபாடுகள் இருப்பதாகவும் இந்த வல்லுநர் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறது. அகழ்வுப் பொருட்கள் கொட்டப்படும் இடத்தைக் கருத்தில் கொண்டு, அகழ்வுப் பணிகள் காரணமாகவும், அகழ்வுப் பொருட்களைக் கொட்டுவதாலும் அப்பகுதியில் ஏற்படக் கூடிய பாதிப்பு பற்றிய மதிப்பீடு, கால்வாய்ப் பணி நிறைவுற்று போக்குவரத்து நடைபெறும் காலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பு, எண்ணெய் சிந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்பு போன்ற பல்வேறு ஆய்வுகள், நவீன தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்த வல்லுநர் குழு திட்டவட்டமாகப் பரிந்துரைத்து இருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் முற்றிலும் புறக்கணித்துவிட்டு இத்திட்டத்திற்கான தடையில்லா சான்றிதழைக் கூட மாநில அரசிடம் இருந்து பெறாமல் இந்தத் திட்டம் 2005_ஆம் ஆண்டு மத்திய அரசால் அவசர கதியில் தொடங்கப்பட்டது. 
விரிவான ஆய்வு நடத்தப்பட்டு இருந்தால், சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச்சூழலை பாதிக்கும், மீனவர்களை பாதிக்கும் என்பது தெளிவாகி இருக்கும்.  ஆனால், இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கான அகழ்வுப் பணிகள் பாக் ஜலசந்தி பகுதியில் மேற்கொள்ளப்பட்டன. அகழ்வுப் பணியில் ஈடுபட்ட கப்பல்களின் நடமாட்டத்தால் அப்பகுதியில் மீன்களைப் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் சேதம் அடைந்தன. மீன்கள் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்யும் இடங்களான கடல் புதர்கள், கடலுக்குள் வளருகின்ற செடி கொடி முதலான கடல்வாழ் தாவரங்கள் அகழ்வுப் பணியால் அழிக்கப்பட்டன. சேதுசமுத்திரப் பணிகளின் விளைவாக ஆழ்கடல் பகுதியின் இயற்கைச் சூழலே மாறி, மீன் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிக அளவு இறால் மீன்கள் கிடைத்த நிலை மாறி, இறால் மீன் கிடைப்பதே அரிது என்ற நிலை ஏற்பட்டது. கடல்வாழ் உயிரினங்களும், அரிய வகை மீன்களும் இடம் பெயரத் தொடங்கின.
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கடலின் இயல்பு பாதிக்கப்படும் என்றும், பாரம்பரியமாக நடந்து வரும் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படும் என்றும், கப்பல் செல்லும் பாதையில் மீன் பிடிக்கக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்றும், பவளப் பாறைகள் அழிக்கப்படும் என்றும், மீன்வளம் குறையும் என்றும், மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் என்றும் மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர். இது நியாயமானது தான்.  
சேது சமுத்திரக் கால்வாயின் ஆழம் 12 மீட்டர். ஆனால், அதில் பயணிக்கும் கப்பலின் ஆழம் 10 மீட்டருக்கு மேல் இருக்கக் கூடாது என்ற வகையில் தான் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்தக் கால்வாயில் 20,000 டன் எடை கொண்ட கப்பல்கள் தான் செல்ல முடியும். 30,000 டன் எடை கொண்ட கப்பல்களை எடுத்துக் கொண்டால் தற்போதுள்ள கப்பல்களில் ஒரு சில கப்பல்கள் மட்டுமே இந்தக் கால்வாயில் செல்ல முடியும். ஏனெனில், ஒரு சில கப்பல்கள் தான் 10 மீட்டர் ஆழத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதற்கு மேல் எடை கொண்ட கப்பல்கள் இந்தக் கால்வாயில் செல்ல முடியாது. தற்போது உலகில் ஆழம் அதிகம் கொண்ட கப்பல்கள் தான் பெரும்பாலும் வடிவமைக்கப்படுகின்றன. 2011_2012 ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சென்ற கப்பல்களின் எண்ணிக்கை 1,492 ஆக இருந்தாலும், இதன் எண்ணிக்கை 
2012_2013 ஆம் ஆண்டு 1,294 ஆகக் குறைந்துவிட்டது. இந்த எண்ணிக்கை குறைந்ததற்குக் காரணம் பெரிய கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்தது தான். 
இந்தப் பெரிய கப்பல்கள் சேது சமுத்திரக் கால்வாய் வழியாக செல்லவே முடியாது. 
எனவே சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தால் பெரிய கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வர முடியும் என்பது வடிகட்டிய பொய். இந்தத் திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து போகும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதும் பொய். 
தமிழ்நாட்டின் மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியில் உள்நாட்டிலிருந்து பெறப்படும் நிலக்கரி ஒடிசாவில் உள்ள பரதீப், மேற்கு வங்காளத்தில் உள்ள ஹால்டியா, ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் போன்ற கிழக்கு துறைமுகங்களில் இருந்து, எண்ணூர் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு எடுத்து வரப்படும் நிலக்கரியில் 30 விழுக்காடு நிலக்கரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்து சேருகிறது. இந்தப் பணி பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த  கப்பல்களின் ஆழம் 10.9 மீட்டர் முதல் 13.5 மீட்டர் வரை உள்ளது. சேது சமுத்திரக் கால்வாயில் 10 மீட்டர் ஆழம் உள்ள கப்பல்கள் மட்டுமே பயணிக்க முடியும். எனவே, பூம்புகார் கப்பல் போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயின் வாயிலாக செல்ல இயலாது. தமிழகத்திற்குத் தேவையான நிலக்கரியை எடுத்து வரும் கப்பல்கள் கூட சேது சமுத்திரக் கால்வாயில் பயணிக்க முடியாது. இந்தத் திட்டத்தினால் யாருக்கு என்ன பயன்?  
சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்தப்படும் இடம் தூத்துக்குடியின் வட பகுதியில் உள்ளது. ஆனால், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து ஐரோப்பா, மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் தென்பகுதி வழியாக பயணிக்கின்றன. இதற்கும் இந்தத் திட்டத்தினால் பயன் இல்லை. இப்படி, எதற்கும் பயன் இல்லாத திட்டம் தேவை தானா?
சேது சமுத்திரக் கால்வாய் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளையும், கிழக்குக் கடற்கரை பகுதிகளையும் இணைக்கும் என்பது தான் உண்மை. அதன் காரணமாக தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது உண்மையல்ல.  அப்பொழுதும் கப்பல் போக்குவரத்தில் சரக்குகள் அனுப்பப்படுமா என்பது சந்தேகமே! ஏனெனில், மேற்கு கடற்கரை துறைமுகங்களில் இருந்து உள் நாட்டுக்கு சரக்குகளை லாரிகள் மூலமே கொண்டு செல்ல இயலும்.  
சிறிய கப்பல்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய சேது சமுத்திர கால்வாய் பகுதியில், ஒரு கப்பல் சென்ற பின் மண் அரிப்பு ஏற்பட்டு கால்வாயின் ஆழம் குறையும் என்பதால், அக்கால்வாயில் தூர்வாரும் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சேது கால்வாய்க்குள் கப்பலை ஓட்டிச் செல்ல சிறப்புக் கால்வாய் மாலுமிகளை கூடுதல் செலவு செய்து அமர்த்த வேண்டும். இந்தக் கப்பலுக்கு என்று ஒரு டடுங்ச்சி நகீடுஙீ செல்ல வேண்டும்.  இதற்கெல்லாம் மிக அதிக அளவில் கூடுதல் செலவு ஏற்படும். இந்தத் திட்டத்தால் எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக சுற்றுச்சழல் பாதிப்பு ஏற்பட்டு, மீன் வளம் குறைந்து, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். 
இந்தத் திட்டத்தினால் தென் தமிழகம் எந்த விதத்திலும் வளர்ச்சி அடையாது.  மாறாக மீனவர்களின் வாழ்வாதாரம் தான் பாதிக்கப்படும். சுற்றுச்சழல் பாதிப்பு ஏற்படும்.  எனவே தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவற்றையெல்லாம் மீறி கருணாநிதி இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வது எதற்காக? யாருடைய நன்மைக்காக? என்பதை உங்களின் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.  ஏற்கெனவே இந்தத் திட்டத்திற்காக கிட்டத்தட்ட 830 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுவிட்டது. 
அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். அப்பாவி மீனவர்களை நிர்கதியாக்கத் துடிக்கும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மீன் வளத்தை பாழ்படுத்துகின்ற திட்டம் சேது சமுத்திரத் திட்டம். மொத்தத்தில் தமிழக மக்களுக்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காத திட்டம்.
மக்களுக்காகவே திட்டங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. திட்டங்களுக்காகவே மக்கள் என்று தி.மு.க. கருதுகிறது.  இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 
தென் தமிழகம் உண்மையிலேயே வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், தென் தமிழகத்தில் தொழில் தொடங்க முனைவோருக்கு ஆயத் தீர்வை நீக்கம் உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அளிக்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசில் அங்கம் வகிக்கும் போது, இது போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற உறுதியை இந்தத் தருணத்தில்  உங்களுக்கு நான் அளிக்கிறேன். 
தன்னலத்திற்காக திட்டங்களைத் தீட்டும் தி.மு.க_வினரையும், அதற்கு வக்காலத்து வாங்கும் காங்கிரஸ் கட்சியையும் இந்தத் தேர்தலில் நீங்கள் படுதோல்வி அடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க_வையும் மீறி தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் இல்லை என்பது தான் விடை.  நிச்சயமாக இல்லை. மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது.  உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் உள்ளது.  இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு.  
இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. இந்த காங்கிரஸ் கட்சியை மத்திய ஆட்சியிலிருந்து அகற்ற நீங்கள் எல்லாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
கச்சத் தீவினை மீட்பதற்காக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்த அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. அதோடு நின்றுவிடவில்லை. கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியே அல்ல என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. இப்படி தமிழர்களுக்கு எதிராக செயல்படும் காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் இந்தத் தேர்தலின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சிக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க_வுக்கும் பாடம் புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு இந்தத் தேர்தலின் மூலம் உங்களுக்கு கிடைத்து இருக்கிறது.  இந்த வாய்ப்பை நீங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.   
வருகின்ற மக்களவைத் தேர்தல் வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல.  இந்தியாவின் வளர்ச்சியை மாற்றி அமைக்கும் தேர்தல்.  இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி எழுதப்போகிற தேர்தல்.  அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காக்கும் தேர்தல்.    
கடந்த பத்தாண்டு காலமாக விலைவாசி உயர்வு, பண வீக்கம், பெட்ரோலியப் பொருட்களின் தொடர் விலை உயர்வு, உர விலை உயர்வு என பல்வேறு பிரச்சனைகளுக்கு நீங்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறீர்கள். இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக விளங்குவது மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் தான். 
மத்திய அரசின் இது போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக இந்திய நாட்டில் முதலீடுகள் குறைந்துள்ளன. ஏற்றுமதி குறைந்துள்ளது. நடப்புக் கணக்கில் அதிகமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரமே சின்னாபின்னம் ஆக்கப்பட்டுவிட்டது. அதன் சுமை ஏழைகளின் மீது சுமத்தப்பட்டுள்ளது. 'இந்த சுமையிலிருந்து விடுபட தேவை மாறுதல்! அதற்கு வழிவகுக்க இருப்பது வருகின்ற மக்களவைத் தேர்தல்!' என்பதை  மறந்துவிடாதீர்கள். 
எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது தான் காங்கிரஸ் ஆட்சியின் தாரக மந்திரம்.  2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டை நடத்தியதில் ஊழல், விமானங்களுக்கு எஞ்ஜின் வாங்கியதில் ஊழல் என, ஊழல் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.  இதில் 2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை முன்னின்று நடத்திய கட்சி தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள்.  இப்படிப்பட்ட மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் அரசை ஆட்சியிலிருந்து தூக்கி எறிவது நம் எல்லோருடைய ஜனநாயகக் கடமையாகும். 
கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ் நாட்டிற்கு எதையாவது செய்ததா? இல்லையே.  'மக்கள் நலம்' 'மக்கள் நலம்' என்று சொல்லி உங்களின் வாக்குகளைப் பெற்றார் திரு. கருணாநிதி. ஆட்சியில் அமர்ந்தவுடன் உங்கள் நலத்தை மறந்துவிட்டார். இப்படிப்பட்ட கட்சிக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்; சரியான பாடம் புகட்ட வேண்டும்; மக்கள் விரோத காங்கிரஸ் கட்சிக்கும், திமுக_வுக்கும் இந்தத் தேர்தலில் மீண்டும் எழுந்திருக்க முடியாதபடி மரணஅடியை நீங்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இந்த நேரத்தில் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள், நான் சொல்வதை கவனமாகக் கேட்க வேண்டும்.  அதை மனதில் இறுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் வாக்கு என்பது உங்கள் உரிமை.  உங்கள் வாக்கு என்பது இந்த நாட்டின் சொத்து.  உங்கள் வாக்குதான் இந்தியாவின் தலைவிதியையே மாற்றி அமைக்கப் போகிறது.  அத்தகைய சக்தி படைத்தது உங்கள் வாக்கு.  அந்த வாக்கை வீணாக்கிவிடாதீர்கள்.  இந்தத் தேர்தலில் பல கட்சிகள் களம் இளங்கியுள்ளன.  அந்தக் கட்சிகளெல்லாம் உங்களிடம் வந்து வாக்கு கேட்கின்றன.  வேறு கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.  நீங்கள் வாக்களித்தாலும் அந்தக் கட்சிகள் வெற்றிபெறப் போவதில்லை.  வாக்குகள் சிதறிவிடும்  அவ்வளவுதான்.  உங்கள் வாக்கு வீணாகிவிடும்.  எனவே, உங்கள் வாக்குகளை வீணாக்கிவிடாதீர்கள்.  மாறாக, வருகின்ற மக்களவை தேர்தலில் தமிழக வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் அனைவரும் 40 தொகுதிகளிலும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அளித்த வெற்றிச் சின்னமாம் இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்தால், மத்தியிலே இந்தியாவை வல்லரசாக்கக் கூடிய வலிமையான ஆட்சி அமையும்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சி மத்தியிலே அமைந்தால், இந்த நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் வந்து குவியும்.  
எனவே, மறவாமல், தவறாமல் வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் 40 மக்களவை தொகுதிகளிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அவர்களை மகத்தான வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால், தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வழங்க வேண்டும்.  எனது கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
உங்களின் ஆதரவோடு உங்கள் ஆட்சி மத்தியில் அமையப் பெறும் போது, 
இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் வகையில் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், இறக்குமதியை தேவைக்கேற்ப செய்யவும்;  
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்;
அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணவும்;  
தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலை சிரமமின்றி மேற்கொள்ளவும்;  
இலங்கை போரின் போது இனப் படுகொலை செய்தவர்களை ஐக்கிய நாடுகள் சபை மூலம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும், அதற்கு இந்தியாவே தீர்மானம் முன்மொழியவும்;  
மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்க வழிவகை செய்யவும்; 
தமிழ் மொழியை ஆட்சி மொழி ஆக்கவும்; 
சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை ஆக்கவும்; 
வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்திய ராணுவத்தை, தரைப்படையை, 
கப்பற் படையை, விமானப் படையை நவீனமயம் ஆக்கவும்;
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அறவே ஒழியவும்;
வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்கவும்; 
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நிலக்கரி ஊழல் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட ஊழல்களுக்கு காரணமானவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரவும், இந்த ஊழல்கள் மூலம் மத்திய அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை <டுகட்டவும்; 
பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயக் கொள்கையை மாற்றவும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஓர் ஆண்டு முழுவதும் நிலையாக இருக்கவும்;  
தனி நபருக்கான வருமான வரி உச்ச வரம்பினை 5 லட்சம் பொயாக உயர்த்தவும்; 
நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
'அமைதி, வளம், வளர்ச்சி' என்ற பாதையில் இந்தியாவை வழி நடத்திச் செல்ல எங்களுக்கு ஒரு நல்வாய்ப்பினை நல்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (செய்வோம் என பலத்த கரகோஷம்)
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.